க்ரைம் ப்ரான்ச் இன்ஸ்பெக்டர் கைலாஷ் ஒரு கேஸ் சம்பந்தமாக போஸ்ட் மார்ட்டம் செய்த மருத்துவரை விசாரிக்க வர, அது வாழ்க்கையில் மீண்டும் பார்க்கவே கூடாது என்று நினைத்திருந்த அராத்து என்று கனவிலும் நினைக்கவில்லை. அவனும் நண்பன் சிவாவும் அராத்திடம் சிக்கிக்கொண்டே, அவர்கள் விசாரிக்கும் கேசின் சிக்கலையும் விடுவிக்க முயலுகிறார்கள்.
காமெடி, காதல், மோதல், விறுவிறுப்பு என்று கலந்து கட்டி வரும் கதையில் சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது.