கா. உதயசங்கர், (உதயசங்கர் கார்மேகம்) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார். இவருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரசுக்கர் விருது ஆதனின் பொம்மை என்ற குழந்தை இலக்கிய நூலிற்காக வழங்கப்பட்டது.
விருதுகள் லில்லி தேவசிகாமணி நினைவு சிறுகதை நூல் விருது - 1993 தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது - 2008 உலகத்தமிழ் பண்பாட்டு மைய விருது – 2015 எஸ். ஆர். வி. பள்ளியின் படைப்பூக்க விருது - 2016 கலை இலக்கியப் பெருமன்றம் – சிறுவர் இலக்கிய விருது – 2016 விகடன் விருது – சிறுவர் இலக்கிய விருது - 2016 கு.சி.பா. நினைவு - சிறுவர் இலக்கிய விருது – 2017 நல்லி - திசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருது - 2017 தமிழ் பேராயத்தின் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - 2017 கவிதை உறவு சிறுவர் இலக்கிய விருது - 2018 அறம் தமுஎகச படைப்பாளர் விருது - 2019 பால சாகித்திய புரசுக்கர் விருது - 2023
ஆதனின் பொம்மை ❤️ • தமிழர் வரலாற்றின் தொடக்கத்திற்கான தேடலிலும் நாகரீகத் தோற்றத்திற்கான ஆய்விலும் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய கீழடி அகழாய்வின் கண்டுபிடுப்புக்களை அடிப்படையாக் கொண்டு தமிழர் வாழ்வியலையும், அதன் இனிமையான சிறப்பம்சங்களையும் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களையும் சிறுவர்களுக்கும் எளிதாக கொண்டுசேர்க்கும் தன்பணியை சிறப்பாக வென்றிருக்கிறார் எழுத்தாளர். இப்படியான புத்தகங்கள் நிச்சயம் வரவேற்கத்தக்கவை. நம் வரலாற்றை பெரியவர் முதல் சிறார் வரை அனைவரிடமும் கொண்டுசேர்க்க வேண்டியது காலத்தின் அவசியம். • வரலாறு முக்கியம் அமைச்சரே..!