வாழ்க்கை முழுவதும் நித்தம் நித்தம் அனுபவங்களால் நிறைந்தது. அதிலும் காதல் அனுபவங்கள் என்றால் சொல்லவா வேண்டும். காலன் அழைக்கும் வரை அதன் அவஸ்தைகள் ஒருபோதும் ஓயாது. நித்தம் ஒரு கவலை, நிமிடத்தில் ஒரு மகிழ்ச்சி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அது கொடுக்கும் அனுபவங்களை சொல்லில் வடிக்க முடியாது. அப்படிப்பட்ட மாறுபட்ட காதல் அனுபவங்களைப் பெற்ற ஒருவனின் கதை தான் “நிழலைக் கொடுத்த தளிர்க்கரமே “.