தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களித்த மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான எம்.வி.வெங்கட்ராம், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், எட்டு நாவல்கள், ஆறு குறுநாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள், நாடகங்கள், சிறுவர் நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொடர்ந்து எழுதிக் குவித்ததால் (writer's cramp) கைநடுக்கம் ஏற்பட்டு, தன் வாழ்வின் கடைசி பதினேழு வருடங்கள் அவரால் எழுத இயலாமல் போனது. இலக்கியத்துள் வராத சௌராஷ்ட்டிரர்கள் வாழ்வின் சில பகுதிகள் அவர் படைப்புகளில் பதிவாகியுள்ளன. 'தேனீ' இலக்கிய இதழின் ஆசிரியரான இவர், டிரான்ஸ்கிரஸிவ் (Transgressive) வகை எழுத்தை தம், 'காதுகள்' நாவல் மூலம் முதன்முதலில் தமிழுக்குக் கொண்டுவந்தார்.
சௌராஷ்ட்டிரர்கள் வாழ்வை, அவர்களது மொழியில், தமிழ் லிபியில் பதினேழு அத்தியாயங்கள் எழுதிய பின், தமிழ் மொழியில் அவரால், அதை முழுமையாக எழுத இயலாமல் போனது. அவர் எழுதி, நம் கைக்குக் கிடைத்தவை நான்கு அத்தியாயங்கள் மட்டுமே. அவரது முற்றுப்பெறாத நாவலின் முதல் பதிப்பாக கிட்டத்தட்ட எழுதி நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் நூல் இது.
Venkatram was born in Kumbakonam in a Sourashtra family. He obtained a B.A degree in Economics and was involved in silk Zari business. He first started publishing in the literary magazine Manikodi in the 1930s, while he was still a college student. He was influenced by Ku. Pa. Rajagopalan and was part of a literary circle that included Karichan Kunju (R. Narayanaswami), Thi. Janakiraman, Thiruloka Seetaram, Dhenuka, Thanjai Prakash, Na.Vichuvanathan, C.M.Muthu and Podhikaiverkpan. His works have been published in magazines like Kaalamohini, Grama Ooozhiyan and Sivaji. He also ran a literary magazine named Thenee briefly. He has written over two hundred short stories and novels. Nithyakanni Kathukal and Velivithee are his most noted works. He also wrote more than 60 short biographies for Palaniappa Brothers and translated over 10 books for the National Book Trust of India. In 1993, he was awarded the Sahitya Akademi Award for Tamil for novel Kathukal (lit. Ears).
இந்த வருடம் நான் படித்த இரண்டாவது முற்றுப் பெறாத புதினம் இது — அதே சமயம், திரு. எம்.வி. வெங்கட்ராம் அவர்களின் எழுத்து உலகில் நான் எடுத்து வைத்த முதல் அடியுமாகும். ஒரு பிரபல எழுத்தாளரின் வலைப்பதிவில் அவர் எழுதிய “காதுகள்” புதினத்தின் மதிப்பீட்டை வாசித்தபோதே எழுத்தாளரைப் பற்றிய ஆர்வம் மனதில் தோன்றியது. அதன்பிறகு, இங்குள்ள நூலகத்தில் கிடைத்த திரு. எம்.வி.வி அவர்களின் ஒரே நூல் இதுவாக இருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்தேன்.
இந்த புதினம் சௌராஷ்டிர மக்களின் வாழ்வியல், மரபுகள், உணர்வுகள் ஆகியவற்றை நுணுக்கமாகப் படம் பிடிக்கிறது. குஜராத்திலிருந்து 10ஆம் நூற்றாண்டில் மஹாராஷ்டிரா, கர்நாடகம் வழியாக தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்த இவர்கள் பட்டு நெசவு தொழிலைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள்.
கதையின் நாயகன் இரகுராமன், கும்பகோணத்தில் தன் தந்தையுடன் சேர்ந்து பட்டு நெசவு தொழிலை மேற்கொள்கிறான். மனைவி மீராவுடன் ஏற்பட்ட மனப்பிணக்கால் நான்கு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கிறான். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, கடைசி தீர்ப்புக்கு முன் நீதிபதி தம்பதியரை சில மாதங்கள் சேர்ந்து வாழுமாறு உத்தரவிடுகிறார். மீரா மனதில் குழப்பத்துடன், மீண்டும் இரகுராமனின் வீட்டுக்குத் திரும்பி வருகிறாள்.
பெற்றோர்களின் அத்துமீறிய தலையீடு எவ்வாறு தம்பதியரின் உறவை நசுக்குகிறது என்பதையும், குடும்பத்தின் உள்மன அழுத்தங்களையும் எழுத்தாளர் மிக நயமாக வெளிப்படுத்தியுள்ளார். அதோடு சௌராஷ்டிர மக்களின் வாழ்க்கைச் சுவையும், அவர்களின் மொழிச்சாயலும் புதினத்தின் முழுவதும் ஒலித்து நிற்கிறது.
ஆனால், மீராவும் இரகுராமனும் முடிவில் இணைந்தார்களா? அவர்களின் வாழ்க்கை எந்த திசையில் சென்றது? என்பதை அறியும்முன்னே புதினம் திடீரென முடிவுக்கு வருகிறது. சுவாரஸ்யமாக ஓடும் ஒரு திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டது போல ஒரு அபூர்வமான வெறுமை உணர்வை வாசகனுக்குள் விதைக்கிறது.