என்னுடைய கடந்த 14 வருட கலை வாழ்க்கையின் வாழ்வியல் அனுபவங்கள் தான் "கொட்டடிக்காரன்". சக மனிதர்களால் மனிதர்களற்ற தன்மைக்கு ஆட்கொள்ளப்பட்ட எங்கள் வாழ்வாதாரத்தை வாழ்ந்தறிந்த அனுபவங்களாக இந்த புத்தகத்தில் பதிவிட்டுள்ளேன். கடந்த காலங்களில் எங்களை குத்திய முட்களை இந்த புத்தகம் உணர்த்தும் வலியினூடே நீங்கள் உணர்ந்தால் போதும் அடுத்த முறை அம் முட்கள் எங்களை குத்தாமல் பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
சஜு (பிறப்பு: பெப்ரவரி 22, 1998) நாட்டாரியல் ஆய்வாளர், கவிஞர். தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் மணவாளகுறிச்சி பகுதியில் நாட்டார் தெய்வம், கலைகள் சார்ந்த ஆய்வுகள் நிகழ்த்தி வருகிறார். நாட்டுப்புறத் தாளவாத்தியக் கலைஞராகவும் செயல்பட்டுவருகிறார்.
விருதுகள் 2025 ஆம் ஆண்டில் ரமேஷ் பிரேதன் நினைவாக வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது