புத்தகம் : பனிமனிதன்
எழுத்தாளர் : ஜெயமோகன்
பதிப்பகம் : நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள் : 224
நூலங்காடி :
ஈரோடு புத்தகத் திருவிழா 2023
விலை : 250
🔆 எங்கும் பனிப்பொழிவு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளை போர்வை போர்த்தியது போல இருந்த லடாக்கில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், வித்தியாசமான ஒன்றைக் கண்டனர்.
🔆 அது ஒரு மனிதனின் கால்த்தடம். சராசரி மனிதனை விட மூன்று மடங்கு இருந்தது அந்த கால்த்தடம். அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு - மேஜர் பாண்டியனிடம் வழங்கப்பட்டது.
🔆 அதைக் கண்டுபிடிக்க அவர் புறப்பட்ட போது, சிறுவன் கிம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தான். அவரையும் அழைத்துக் கொண்டு, இந்த மனிதனைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் டாக்டரை பார்க்க சென்றார்கள்.
🔆 மூவரும் இணைந்து அந்த மனிதரை தேட தொடங்கினார்கள். அவர்கள் தேடுவது குரங்கு மனிதன் அல்ல, பனிமனிதன் என்றும், அந்த மனிதன் ஒருவன் அல்ல, ஒரு கூட்டமே அந்த காட்டுக்குள் உள்ளது தெரிய வந்தது.
🔆 ஒவ்வொரு படியாக அவர்களை அழைத்துச் சென்றது அந்த பணி மனிதன் தான். வழியில் ஏராளமான தங்கம், வைரம் என இவர்கள் தடுமாற நிறைய காரணிகள் இருந்தன.
🔆 புத்த பிக்குகள் தங்களின் அடுத்த லாமா-வையும் கண்டு கொண்டனர்.
🔆 அவர்களின் சுதந்திரமான, இனிமையான வாழ்க்கைக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என விரும்பிய டாக்டரும், பாண்டியனும் அவர்களை பற்றிய ரகசியத்தை அரசாங்கத்தின் கூறவில்லை.
🔆 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - ஐந்தாவது புத்தகம் இது.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்