கதையிலிருந்து சில துளிகள் "என்னது.. நீங்க.. எட்டாங்கிளாஸ் தான் படிச்சிருக்கீங்களா?".. சட்டென அவன் பக்கம் திரும்பி அதிர்ச்சி குறையாமல் கேட்டாள்.. "ஹான்.. ஏன்.. உனக்கு தெரியாதா?.. அதைப் பற்றி தெரிஞ்சிக்காமலேயே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டியா?".. அவன் கண்களில் ஏதோ தீவிரம்.. "இல்ல.. தெரியும்.. அது".. சட்டென சுதாரித்தாள்.. "அப்புறம் ஏன் இவ்வளவு அதிர்ச்சி?".. "படிக்கலைன்னு சொன்னாங்க ஆனா ஒரு பத்தாம் வகுப்பாவது படிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்" என்றவள் குறைந்தபட்சம் அவன் ஒரு டிகிரியாவது முடித்திருப்பான் என்று தான் நினைத்திருந்தாள்.. கடவுளே எந்த விதத்திலும் இவர் தனக்கு பொருத்தமில்லை.. நெஞ்சுக்குள் மென்மேலும் அதிருப்தி அசிடிட்டி போல் பரவியது.. "சரி..