பகவான் விஷ்ணுவின் பெருமைக் காவியம்! இளைய தலைமுறை அறியும் வகையில் கண்கவர் ஓவியங்களுடன் காட்டாற்று வெள்ளமெனப் பொங்கும் மொழியில்!
தலைமுறைகள் கடந்து நாம் மீண்டும் மீண்டும் ரசித்துக்கொண்டிருக்கும் பல கதைகளின் பிறப்பிடம் ஸ்ரீமத் பாகவதம். இன, மொழி, மத எல்லைகளுக்குள் இந்த அற்புதத்தை அடக்கிவிடக்கூடாது என்பதற்காக முதல் முறையாக பிரெஞ்சு மொழிக்கு பாகவதம் கொண்டு செல்லப்பட்டது. மனித குலத்துக்குப் பொதுவாக ஓர் ஆனந்த காப்பியம் இது என்பதால்.
பாகவதத்தில் கிருஷ்ணர் ஒரு நாயகராகவே வருகிறார்; கடவுளாக அல்ல. எங்கோ வானத்தில் ஒளிந்துகிடக்கும் ஓர் அந்நிய சக்தியாக அல்லாமல், மனித உருவத்தில் கிருஷ்ணரை நடமாடவும் நடனமாடவும் வைத்திருக்கிறது பாகவதம்.
வியாசரின் உன்னதப் படைப்பை, மயக்க வைக்கும் அழகு தமிழில் வழங்குகிறார் உமா சம்பத். ஒவ்வொரு பக்கத்தைக் கடக்கும்போதும், கற்பனையின் எல்லைகள் சிதறிவிழுகின்றன. இதுவரை அனுபவித்திராத ஆனந்த அனுபவம் கைகூடுகிறது.
Excellent condensation of 18000 shlokas in 300 pages in simple, lucid language. It is well written in Tamil. Reminds me Narayaneem which condensed the purana into 1036 shlokas. Boon for Tamil knowing bhaktas of this world