மூளையின் அடித்தள அதிர்வினை , மின்காந்த அலைகளை உருவாக்கி ஆய்வு செய்யும் கருவி கொண்டு குலைத்து நாச வேலைகளை சாதாரண மனிதர்களைக் கொண்டு செய்ய வைக்கிறது ஒரு கும்பல். இதனைத் தடுக்க முயலும் குழுவினரை ஒரு திறமையான போராளியின் உதவியும், மற்றொரு போராளியின் பழிவாங்கும் திட்டங்களும் அலைக்கழிக்கின்றன. மன மாற்றம் செய்யப்பட்ட மனிதர்கள் இருக்கையில் குழுவில் செயல்படுபவர்களில் எவரை நம்புவது?
இதற்கு முன்பாக க.சுதாகர் அவர்கள் எழுதிய 6174 புத்தகத்தை வாசித்திருக்கிறேன். அறிவியல் புதினத்தின் வகையை சார்ந்தது. மிகவும் விறுவிறுப்பான எழுத்து நடை அவருடையது. அதே போல தான் இந்த புத்தகத்தையும் நினைத்து வாசிக்க எடுத்தேன். சற்றும் மாறுபடாத அதே விறுவிறுப்பு. அறிவியல், அதிலிருக்கும் மர்மங்கள், என் மனதிற்கு எப்போதும் நெருக்கமான ஓநாய்கள், எம்.ஓ.ஏ அல்லீல்கள் அவை உடலின் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும், செயற்கையாக செய்ய அல்லது மாற்றக் கூடிய மனித உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்று ஒரு திரைப்படத்தின் வேகத்தை இப்புத்தகம் கொடுக்கிறது.
எப்போதும் புத்தகங்களில் வரும் விவரிப்பு, எழுத்தாளருக்கான ஆடுகளம். அதில் திளைத்தெழுவது அலாதியான ஓர் இன்பம். இப்புத்தகம் அதனை வகையில்லாமல் வழங்கி இருக்கின்றது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லாத தோன்றுகிறது. "அந்திம ஆயுதம் அமைதி" என்ற ஒற்றை வரியில் துவங்கிய மர்மங்கள் விக்ரம் பாத்ரா என்ற முன்னாள் ராணுவ அதிகாரியோடு பயணிக்கிறது. அலைவரிசைகளில் மாற்றங்கள் செய்து ஓர் மனிதனின் வன்முறையின் ஆழ் மனப்புதையலை தோண்ட முடியுமா? அப்படி தோண்டும் தாருங்கள் எவ்வாறு இருக்கும் அல்லது இந்த உலகத்தின் பால் அத்தகைய செயலின் தாக்கங்கள் என்னவாக இருக்கும் என்பதை பரபரப்பின் உச்சத்தில் நம்மை அமர வைத்து கதையினை நகர்த்துகிறார் கஸ்தூரி சுதாகர் அவர்கள்.
குஜராத் காடுகள் ,பெங்களூரு, கொச்சி, டில்லி, துருக்கி என்று பயணிக்கிறது கதை. இந்திரா நகரில் நடைபெறும் தீவிரவாத தாக்குதலின் மூலமாக ஆரம்பிக்கும் இந்த ஆட்டம் மிகப்பெரிய உண்மைகளை உடைக்கிறது. எம்.ஜி.கே, ஜெயலட்சுமி, வித்யா, திவாகர், வேதநாயகம், நவீன் குஜ்ரால் இப்படி பலரின் ஊடே பயணிக்கிறது கதை. அங்கங்கே தானாக நிகழும் துப்பாக்கி சூடுகள், சட்டென கொலை செய்து விடும் மனிதர்கள், கோபம் கொப்பளிக்கும் கொலைகள் என்பதை தாண்டி விலங்குகள் கூட வெறி கொண்டு கொலைகள் செய்கின்றன. பொதுவாக விலங்குகள் உணவு, காமம் இவற்றை தாண்டி அதன் இனத்தை தாக்குவதில்லை என்பதை உடைக்கும் வகையில் நடக்கும் சம்பவங்கள் எதனால் நிகழ்கின்றன? அதன் பின்னணி என்ன என்பதை பற்றிய கதை.
7.83 ஹெர்ட்ஸ் என்ன என்பதிலும் அதையும் அதை தாண்டிய அதிர்வெண்களை வைத்துக் கொண்டு மனிதனை எவ்வாறெல்லாம் ஆட்டுவிக்க முடியும் என்பதை அறிவியலின் துணை கொண்டு உணர்த்தும் புதினம். 7.83 ஹெர்ட்ஸை ஸ்சுமான் அதிர்வு என்று கூறுவதுண்டு. இதை பூமியின் இதயத்துடிப்பு என்றும் கூறுவார்கள். மனித மூளையின் அலைவரிசை 6 முதல் 16 ஹெர்ட்ஸ் வரையிலும் மட்டுமே இருப்பதாகவும், அதை தாண்டின அதிர்வெண்ணை செலுத்தினால், எம்.ஓ.ஏ அல்லீல்கள் அவற்றின் இருப்பின் படி வன்முறையை அவர்கள் உணராத வண்ணமே நிகழ்த்திவிட்டு அமைதியாக இருந்து கொள்ள முடியும் என்பதை பின் தொடர்ந்து செல்லும் கதை. உலகத்தில் வேறு எந்த ஆயுதத்தையும் விட கொடிய ஆயுதம் உணர்வுகளை மனிதர்கள் அறியாமல் மாற்ற முடியும் என்பது தானே.
எனக்கு பிடித்த பகுதி வேதநாயகத்தின் ஓநாய் பற்றிய விவரிப்புகள் தான்.
"ஒநாய்னா என்ன சொறி நாயின்னா நினைச்சே? நாயைப் பழக்கிறலாம். அதுக்கப்புறம் அதால காட்டுல வாழ முடியாது. ஓநாயைப் பழக்க முடியாது. அன்னிக்கி நாய் வந்த கதையைச் சொன்னேன்லா? நாயால மாவுச்சத்தையும் திங்கமுடியும். மனுசன் கூட இருந்து சமைச்ச உணவை தின்னப் பழகிறுச்சி. ஓநாயால திங்க முடியாது. அதுக்கு கொழுப்பும், புரதமும் தான் வேணும். சுத்தக் காட்டுத்தனமான மிருகம்... ஆதி மிருகம்லா? அதான் மனுசனுக்கு ஓநாயின்னா ஒரு பயம், அது புதிர்னு, ஒரு மரியாதை இருந்துச்சி. பல இனக்குழுக்கள் இன்னமும் அவங்க மூதாதையர்கள் ஓநாய்கள்னு சொல்லிட்டு வர்றாங்க."
இப்படி பல்வேறான திசைகளில் செல்லும் இந்த புத்தகம் முக்கியமான சில தகவல்களையும் விட்டு செல்கிறது. ஹார்ப் ஆராய்ச்சி பற்றியும், அயனோஸ்பியரில் எவ்வாறு அதிர்வலைகளை ஊடுருவ வைக்க முடியும் என்றும் அதனால் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கலாம் என்றும் வேறு பட்ட உலகத்தில் பயணிக்க வைக்கிறது. படித்துப்பாருங்கள்...
7.83 Hertz is that book that is definitely written by an Engineer/nerd and if it was published in English, would have been more widely read. Here is a tamil book that talks about evolution of wolves, genetics, mind control, HARP frequency and a forgotten tribe.
I was genuinely surprised by the plot which started in some wild life reserve where the alpha of the wolf pack is getting attacked by a slave. The first few chapters has a lot of action from terror attacks, flashbacks, mind control episodes that it disorients you a bit.
But then the author starts connecting the dots and you find yourself being impressed by the span of the book. I did worry a bit if the author wanted to try too many ideas in one go. Despite the few extreme ideas, I think most of the plots were plausible.
கதை படிக்கவே ரொம்ப விறு விறுப்பா போகுது. ஒரு action thriller பாக்குற feel கிடைக்குது. ஆனா கடைசியா ஏதோ அவசர அவசரமா முடிச்ச மாதிரி இருக்கு.
MAO allele-ல abnormalities இருக்குறவங்க இயற்கையாவே வன்முறை-ல ஈடு படுவாங்க-னு சொல்றதும், அவங்களோட அதிர்வலைகள தூண்டி விட்டா அவங்களுக்கே தெரியாம வன்முறை தாக்குதல் நடத்துவாங்க-னு சொல்ற விஷயம்லாம் படிக்கும்போதே பயங்கரமா இருந்துச்சு.
Terrorism, sleeper cell, weapons, genetic abnormalities, mind control, ionosphere, psyops, canids research, project monarch, simulation, nano receiverனு இப்படி பல துறைகள பத்தின தகவல்கள் இந்த bookல இருக்கு.
Plot ரொம்பவே குழப்பமா இருக்கு. இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதி இருந்தா நல்லா இருந்திருக்கும். நெறைய எடத்துல names மாறி மாறி வருது. எழுத்து பிழைகளை தவிர்த்து இருக்கலாம்.
Overall narration இன்னும் better-ah இருந்து இருக்கலாம்.
This entire review has been hidden because of spoilers.
second time read this book.. because first time only i am completed 52 pages... i can't understand... what is this... after that i quit.. after 2 years again i chose that book... from starting i read.... now i understand... story telling look like non-linear.... then it's travel many places... many scientific words and frequency... politicals animals..... anyway i finished... but any beginner tried this one..... tough..... but i finished within 3 days... suppose author make good structure.... anyone can read... but he make little bit confused this story...anyway.. goods sci-fi book... but feel confused myself...
7.83 Hz is My first (pseudo) science fiction thriller in Tamil. I was excited to start this book based on the summary. Unfortunately, I did not like the story. The author started rushing into the story with No time spent on character introductions. Story abruptly jumps between characters without completing a narrative. The overall crux of the storyline seems good, however the book was very poorly written.
7.83 ஹெர்ட்ஸ் ஒரு அறிவியல் சார்ந்த கதை. அதிர்வெண்ணால், மின்காந்த அலைகளை உருவாக்கி அதன் முலம் மனிதர்களை கொண்டு மனிதர்க்கு நாச வேலைகளை செய்ய வைக்கிறது ஒரு கும்பல். இதனைத் தடுக்க முயலும் ஒரு குழுவினர் என இவை அனைத்தும் நமக்கு ஒநாய் வாழ்க்கை மற்றும் அதன் அழிவை ௨ணர்த்துவதற்காக.
7.83 ஹெர்ட்ஸ் தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களனை எடுத்துக்கொண்டு அதை நாம் விரும்பி வாசிக்கும் வகையில் கதையைச் செல்கிறார் சுதாகர் கஸ்தூரி....7.83 ஹெர்ட்ஸ் கண்டிப்பா படிக்க வேண்டிய நாவல்.
பரபரப்பான ஒரு அறிவியல் புனைவு. ஏகப்பட்ட தகவல்கல்கள். படிக்கும்போதே இடையிடையில் கூகிளில் போய் தகவல்களை தேடிப்பார்த்தேன். அதிலும் Erzurum கோட்டைகள், HAARP பற்றிய தகவல்கள் எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்தின.
அறிவியல் புனைவு நாவல்களை தமிழில் தரமுடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார் மிஸ்டர். சுதாகர். வாழ்த்துக்கள். தொடருங்கள். அவனைப் பற்றி பல அத்தியாயங்களில் அவ்வப்போது பேசிவிட்டு, ஒரு அத்தியாயத்தில் அதுவும் சில பக்கங்களில் அடைத்து முடித்தது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இரவு தூக்கத்தை மறந்து, ஒரே நாளில் படித்து முடித்த நாவல்களில் இதுவும் ஒன்று. நன்றி.
Good read. Interesting plot. Numerous information takes little time to grasp. A lot of typos in the kindle version. Nevertheless an engaging sci-fi story.
மற்றுமொரு விஞ்ஞான பூர்வ கதை களமமைத்து , கற்பனை புனைவோடு நிதர்சனத்தை விதைத்துள்ளாரா, என நமது சிந்தனையை தூண்டி ஓநாய்களை மேலும் தேடி செல்ல வைத்துள்ள நேர்த்தியில் வெற்றி பெற்றுவிட்டார் ஆசிரியர்.