ஆற்றங்கரைப் படகுத்துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறுவிளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எதையோ படித்துக் கொண்டிருந்தான். அவனை அணுகிய சஞ்சயன், “டேய்! என்ன படிக்கிறாய்?” என்று அதட்டலாகக் கேட்டவுடன் லேசாகத் தலையைத் தூக்கிய படகோட்டி புன்முறுவல் செய்து “சேர நாட்டில் படிப்புக்கும் தடை உண்டா?” என்று அலட்சியமாகக் கேட்டான். “கேட்டதற்கு பதில் சொல்' என்ற சஞ்சயனை நோக்கி கண்களை உயர்த்திய படகோட்டி, “உங்களுக்கு இலக்கிய அறிவு உண்டா?” என்று வினவினான். “அதைப்பற்றி இப்பொழுதென்ன?” என்ற சஞ்சயன் குரல் சீற்றத்துடன் ஒலித்தது. “கவிதை படிக்கிறேன். மகா கவி பரணர் இயற்றியது” என்றான் படகோ
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
கடல் வேந்தன் கதை முசிறியை கொள்ளையிட வரும் யவனர்களை சேர மன்னர் செங்குட்டுவர் எப்படி முறியடித்தார் அதற்கு கடல் வேந்தன் எப்படி உதவி செய்தான் என்பது தான் கதை
கதையின் ஆரம்பத்தில் கடல் வேந்தன் என்ற கடற் கொள்ளைகாரனை பிடிக்க வேண்டும் என்று அமைச்சர் அழும்பில்வேள் தூதுவன் சஞ்சயனிடம் சொல்லி கொண்டு இருக்கிறார் அதற்காக இரவில் அவர்கள் ஒரு ரகசிய இடத்திற்கு செல்ல முடிவெடுக்கும் போது உங்களுக்கு எதற்காக சிரமம் என்று நானே வழியே வருகிறான் கடல் வேந்தன் இந்த இடத்தை படிக்கும் போது ஆஹா...!!! என்று இருக்கும் ஒரு சினிமா கதாநாயகன் அறிமுகம் போல அறிமுகம் செய்கிறார் அங்கு அமைச்சர் மகள் நிலகள்ளியை சந்திக்கிறான் கடல் வேந்தன் அன்று இரவு அமைச்சரையும் அமைச்சர் மகளையும் தனது இருப்பிடத்திற்கு கொண்டு செல்ல அங்கு சஞ்சயன் வருகிறான் அங்கிருந்து கதை தொடங்குகிறது அதன் பின்னர் என்ன நடந்தது யார் இந்த கிளேசியஸ அவனுக்கும் யவன ராஜ குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் அவனுக்கும் சேர மாமன்னர் செங்குட்டுவர் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் இறுதியில் யவனர்களை கடல் வேந்தன் வெற்றி கொண்டனா என்று கதையை மிகுந்த விறுவிறுப்பு குறையாமல் எழுதி இருக்கிறார்
குறைகள் நிறைய இருக்கிறது கதையில் சரித்திர பாத்திரங்களை கொஞ்சம் நல்ல விதமாக கை ஆண்டு இருக்கலாம் சேர மன்னர் வருகை குறைவு ஆனால் இறுதியில் செங்குட்டுவர் தோற்றமும் அவரின் நிதியும் நல்ல முடிவின் திருப்தியை கொடுக்கறது கதாபாத்திரங்கள் சரிவர அமையவில்லை தூதுவன் சஞ்சயன் ஒரு இடத்தில் பரணர் கவிதையை படிக்கிறேன் என்று கடல் வேந்தன் நண்பன் கூற தலை வணங்குவான் ஆனால் அடுத்த சில அத்தியாயங்களில் பரணரை திட்டி தீர்க்கிறான்
கதையின் முன்னுரை படிக்காமல் கதையை படிக்கவும் அப்போது தான் இறுதி சுவாரஸ்யம் விறுவிறுப்பு நமக்கு கிடைக்கும்
As usual typical சாண்டில்யன் plot with a great suspense at the end that reveals the core reason for the entire events in the novel to unfold. A very good & interesting & must read
This entire review has been hidden because of spoilers.
சேரர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் யவனர்கள் கடல்வேந்தன் தலைமையிலான சேரர்படை முறியடிக்கப்படுவதை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் கடல்வேந்தனின் வீரசாகசங்கள்,கடல்வேந்தன்-நிலக்கள்ளி காதல் மற்றும் சாண்டில்யனின் வழைமயான மசாலாக்கள் சகிதம் திடீர் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கின்றது. சாண்டில்யனின் ஸ்பெஷலான போர் வர்ணனை சிறப்பாக இருந்தாலும் இன்னும் சற்று சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம் என்றே எனக்குத் தோன்றியது. கடல்வேந்தன் யாரென்பதை இடையிலேயே ஊகிக்க முடிந்தாலும் அவன் ஏன் சேரர் செல்வங்களை கொள்ளை அடிக்கின்றான் என்பது புதிராகவே இருந்தது.மிக நுட்பமாக அமைக்கப்பட்ட அம் முகமூடியை கடல்வேந்தன் தேவைக்கேற்ப மாற்றுவதும் அவன் செய்யும் சில சாகசங்களையும் நம்பக்கூடியதாக இல்லை.மற்றபடி சுவாரசியத்துக்காக ஒருமுறை வாசிக்கலாம்
சேரன் செங்குட்டுவனின் மகனான குட்டுவனின் சாகசங்களே இந்த கடல் வேந்தன். சாண்டில்யனுக்கே உரித்தான சுவாரஸ்யமான புனைவுகள் இதில் இருந்தாலும். காதல்/காமப் புனைவுகள் இதில் சற்று வரம்பு மீறியதோ என்று தோன்றுகிறது.
அழும்பில்வேள் மற்றும் சஞ்சயன் ஆகிய உண்மையான வரலாற்று பாத்திரங்களை நகைக்கும் படி அடி முட்டாள்களாக சித்தரித்தது தவறு. க்ளேஸியஸ், யூசுப் கதாபாத்திரங்களை அவரவர் பார்வையில் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.
நிலக்கள்ளி உங்கள் மனதை ஆட்கொள்பவளாக வலம் வருகிறாள் என்றால் கடல் வேந்தன் ஒரு தீர்க்கதரிசியாக வலம் வருகிறான்.
சாண்டில்யனின் வழக்கமான புனைவு தான் என்றாலும் சுவாரஸ்யமானவன் இந்த கடல் வேந்தன்.
This entire review has been hidden because of spoilers.
முசிறி அமைச்சரையும், தூதுவனையும் அடி முட்டாள்களாக காட்டி அவர்களுடன் கதாநாயகன் மோதுவது, கதையும் கொஞ்சம் இழுவையாக இருப்பதால் விறு விறுப்பாக இல்லை. "சேர நாட்டைக் கண்டு தமிழகம் சிரிக்கும்" - அப்போது தமிழ் நாடு என்ற பகுதியும் இல்லை, சேரனும் தமிழர்கள் தானே?