அகமும் புறமும் சந்திக்கும் நிகழ்வுகளைக் கதாபாத்திரமே புனைவாக வடிவமைத்து அதற்கு மனிதனின் உஷ்ணநிலையைக் கணக்கிடும் செல்ஷியஸான 37 தலைப்பாக்கி பதிவு செய்கிறது.
நரேந்திரன் தன் அகத்தில் பதிவதை சொல்லி அவனைச் சார்ந்தோர்களின் வாழ்வு முறைகளையும் தன் சார்புகளையும் சொல்கிறான்.
புரட்சியில் ஈடுபட்டு தண்டனைக்குள்ளான கைதியாக இருக்கும் கா தன் கிரகத்தை விட்டுப் பூமியில் அடைகலமாகி நரேந்திரனிடம் தன்னைப் பற்றி ஒப்புவிக்கும் அனைத்தும் இப்புவியில் வாழும் மனிதர்களின் புறவாழ்வே என்பதைப் புனைவு முடியும் போது உணர முடிகிறது.
கா என்பவன் வெளியில் இருந்து வந்தவன் அல்ல நம்முள் இருக்கும் ஒருவன் ஏன் நாம் கூட என்றே சொல்லலாம்.
தன் அப்பாவின் அடக்குமுறையை வெறுத்த ரங்கராஜன் தன் மகனுக்குக் கொடுத்த சுதந்திரம் அவனை ஆயுள் தண்டனை கைதியாகப் பார்க்கும் போது தன் வளர்ப்பில் தோற்ற தோல்வியாகவே கருதி அதுவே அவரை உருக்குலைத்து விடுகிறது.
செல்லமாக வளர்ந்த நரேஷ் கல்லூரி படிப்பில் புரட்சி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுத் தன் வாழ்வை திசைமாற்றித் தன் தந்தை ரங்கராஜனின் வளர்ப்பின் பெருமிதங்களைச் சிதைத்துப் போகிறான்.
மாமா ரங்கராஜனின் அடிமையாகவே இருக்கும் நரேந்திரன் திறமையாகக் கருதும் எழுத்தின் மூலம் தன் வாழ்வை மாற்றியமைத்து கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தன் அகத்தில் உண்டான ஏமாற்றத்தின் வலிகளுக்குத் தன் செய்கையால் பதில் அளிக்கிறான்.
அஃறிணை பொருட்களின் வழியே வரும் சொற்களால் நரேந்திரனின் புறசூழலின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனின் செய்கையும் அவன் சந்தித்தவைகளின் தொடர்ச்சியாக நடந்தேறுகிறது, மனதை சமன்படுத்துதலில் இருக்கும் போராட்டமே வாழ்வெனப்படுகிறது
ഒരു ഉത്തരാധുനികത നിറഞ്ഞ നോവലാണ് 37. ഈ നോവൽ തമിഴിൽ നിന്ന് വിവർത്തനം ചെയ്തിരിക്കുന്നത് ഷാഫിചെറുമാവിലായി ആണ്.
നരേന്ദ്രൻ എന്ന മനുഷ്യനും പ്രപഞ്ചത്തിലെ മറ്റൊരു ഗ്രഹത്തിൽ നിന്ന് വന്ന കാ എന്ന മനുഷ്യനും തമ്മിലുള്ള സംഭാഷണമാണ് നോവലിൽ. നരേന്ദ്രനും കായും തങ്ങളുടെ ജീവിതകഥ പരസ്പരം പങ്കു വെക്കുന്നു.
തീർത്തും വ്യത്യസ്തവും പുതുമയുമായ രീതിയിലാണ് നോവൽ രചിച്ചിരിക്കുന്നത്.ഒരു ഫാന്റസി പോലെയാണ് നോവലിന്റെ രചന. പക്ഷേ പ്രപഞ്ചത്തിൽ ഇനിയും ജീവനുള്ള ഗ്രഹങ്ങൾ ഉണ്ടോയെന്ന് തീർച്ചപ്പെടുത്താൻ സാധിക്കാത്തതിനാൽ ഇതുപോലെയുള്ള നോവലുകൾ തുടർന്നും ഉണ്ടാകും.