கதையிலிருந்து சில துளிகள்.. "மோஹித் ரிலாக்ஸ்.. டென்ஷன் ஆகாதே..!! நான் தான் சொன்னேனே காதலை உணர்ந்தா மட்டும் தான் காதல் கதைகளை எழுத முடியும்.. மத்தவங்களோட அனுபவங்களை வச்சு எழுத இது ஒன்னும் டாக்குமென்டரி இல்ல.." என்றவனை கோபத்தோடு முறைத்த மோகித் அவன் உயரத்திற்கு எழுந்து நின்றான்.. "ஒரு பெண்ணோட நெருங்கி பழகி அவள் காதல் உணர்வுகளை எனக்குள்ள உள்வாங்கி எடுக்க போறேன்.." "எஸ்.. என் கதைக்காக.. என் கண்டன்டுக்காக ஒரு பெண்ணோட காதல் வேணும்.." "மோஹித் நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா.. அவ உயிருள்ள பெண்.. உணர்வுகளோடு விளையாடாதே..!!" "எல்லாம் முடிஞ்சதும் பணம் கொடுத்துடலாம்.. மனசு பழைய நிலைக்கு திரும்பிடும்.. இந்த மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கோம்..