புத்தகம் : சிவமயம் பாகம் இரண்டு
எழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் : திருமகள் நிலையம்
பக்கங்கள் : 399
நூலங்காடி: Amazon
விலை : 455
🔆 சுந்தர்ராஜன் சித்தர்களின் ஆசியோடு இத்தனை ஆண்டுகள், இச்சாதாரியின் சாபத்தில் இருந்து பாதுகாப்பாக இருந்தார். சித்தர்களின் அறிவுரை படி, இறந்த கண்ணனின் உடலில் புகுந்து, நகருக்கு வந்தார். 20 ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்தை சந்தித்த மகிழ்ச்சியில் இருந்தார். பாலுவும் பாண்டியனும், பொன்னியை அழைத்துக் கொண்டு நகருக்கு வந்தனர்.
🔆 சிவன் மலைக் காட்டு ரகசியங்களை அடைய ஆனந்தர் ஒரு பக்கம், மகாதேவ் ஒரு பக்கம். சுந்தர்ராஜனை பழிவாங்க இச்சாதாரி ஒரு பக்கம். இறுதியில் என்ன ஆனது என்பதே சிவமயம் பாகம் இரண்டு.
🔆 மிகவும் பிடித்த புத்தகம். 2000 களில் வெளிவந்த சீரியலில் எனக்கு மிகவும் பிடித்த சீரியலில் இதுவும் ஒன்று. ஆசை தான் எத்தனை ஆபத்தானது.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்