புத்தகம் : சிவமயம் பாகம் இரண்டு எழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் பதிப்பகம் : திருமகள் நிலையம் பக்கங்கள் : 399 நூலங்காடி: Amazon விலை : 455
🔆 சுந்தர்ராஜன் சித்தர்களின் ஆசியோடு இத்தனை ஆண்டுகள், இச்சாதாரியின் சாபத்தில் இருந்து பாதுகாப்பாக இருந்தார். சித்தர்களின் அறிவுரை படி, இறந்த கண்ணனின் உடலில் புகுந்து, நகருக்கு வந்தார். 20 ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்தை சந்தித்த மகிழ்ச்சியில் இருந்தார். பாலுவும் பாண்டியனும், பொன்னியை அழைத்துக் கொண்டு நகருக்கு வந்தனர்.
🔆 சிவன் மலைக் காட்டு ரகசியங்களை அடைய ஆனந்தர் ஒரு பக்கம், மகாதேவ் ஒரு பக்கம். சுந்தர்ராஜனை பழிவாங்க இச்சாதாரி ஒரு பக்கம். இறுதியில் என்ன ஆனது என்பதே சிவமயம் பாகம் இரண்டு.
🔆 மிகவும் பிடித்த புத்தகம். 2000 களில் வெளிவந்த சீரியலில் எனக்கு மிகவும் பிடித்த சீரியலில் இதுவும் ஒன்று. ஆசை தான் எத்தனை ஆபத்தானது.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
The first half of the book was awesome giving new details on general rituals and reasons around that. It also introduces new things which we know less context about, like ashtamasidhi , rasavadham, nagalingam and also facts about nayanmargal. But the second half becomes hayward, with story going in different direction with unnecessary new character and not so good a climax. The story also seemed to have an abrupt end with lot of things not having closed. In whole sivamayam is a wow book complete of first and first half of second, but a very ordinary book in the last half of second (in case you have read other books of the same author). Still it is a very good book which will introduce you to lot of new things and for that reason I would still recommend this book as a goodread
இரகசியம் இரகசியமாகக் காக்கபட்டால் மட்டுமே அதன் மதிப்பு அதிகரிக்கும். பொதுவில் வைக்கும் இரகசியம் பேராபத்தையே உருவாக்கும்.
பாண்டியன் காணாமல் போன சுந்தர்ராஜனை பார்ப்பதில் இருந்து தொடங்குகிறது. இச்சாதாரி நாகமான பரணியின் கண்ணில் மாட்டாமல் தன் குடும்பக் கடமையை நிறைவேற்ற சுந்தர்ராஜன் ஷாலினியுடன் வந்த கண்ணனின் இறந்த உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து கண்ணனாக சென்னைக்கு வருகிறான்.
தடைபட்ட தன் முதல் மகளின் திருமணத்தை நடத்துவதும்,கண்ணனின் தாய்க்கு இறுதிசடங்கு செய்வதும் என்று எஞ்சியுள்ள அனைத்தையும் நிறைவேற்றும் சுந்தர்ராஜனுக்குத் தங்கமாக மாற்றும் ரசவாதம் தெரியும் என்ற விஷயம் அவரின் குடும்பத்தாருக்கே பேராசையைத் தூண்டிவிடுகிறது.
அஷ்டமா சித்திகள் அடைய வேண்டும் என்று இருக்கும் சாமியார் ஆனந்தர், நானே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மாகாதேவ் அனைவரின் முடிவும் சிவன் மலையிலே நிகழ்ந்தேறி அக்காட்டிற்கு இருந்த ஆபத்தும் விலகுகிறது.
இச்சாதாரியின் கோபமே அதன் இறப்பை நிர்ணயிக்குது.
தான் முடிக்கவேண்டிய கடமைகள் அனைத்தும் முடிந்த பிறகு சிவன் சேவைக்கே திரும்பவும் சென்றுவிடுகிறார் சுந்தர்ராஜன்.
சுந்தர்ராஜனின் குடும்ப உறுப்பினர்களின் மனதில் அடைந்து கிடக்கும் பேராசை பொன்னியால் பயம் காட்டப்பட்டு அது துரத்தப்படுகிறது.
The first half of the story was interesting and was heading for an exciting finish but the climax was too rushed. The author introduced many interesting characters and I was hoping that the characters will at least have an important role in the plot but unfortunately it did not happen. I very much enjoyed the extra info written by the author. A decent one time read.