நல்லதோர் வீணை செய்தே- அதை நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ? சொல்லடி சிவசக்தி!
இன்று பிடிப்பவை நாளை பிடிக்காமல் போகும் இந்தக் கலியுகத்தில், நல்ல அற்புதமான வீணை ஒன்றை செய்த நபர் அதன் மதிப்பை உணராமல் புழுதியில் போட்டிருந்தால் கூட, அதன் மகத்துவம் உணர்ந்த யாரோ ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டு அது தன் சிறப்பை மீட்டிருக்கும்.
ஆனால் தன் வீட்டில் இடமில்லை என்ற காரணத்திற்காக வீணையை விறகுக் கடைக்காரனிடமா விற்பது.
சங்கீத ஞானம் கொண்ட ஏழு வயது குழந்தையின் கையில், வைகையில் துள்ளி விளையாடும் மீனைப் போல் துள்ளி தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கும் வண்ணம் தேன் கான இசையை வெளியிடும் அற்புதமான அந்த வீணை, ஐம்பது வயது மதிக்கத்தக்க விறகுக் கடைக்&