#3rdBook #18Jan2024 #Madhu_ReadingChallenge2024
கி.ரா அவர்களின் எழுத்தை அவ்வளவு எளிதில் வெறும் நாவல், சிறுகதை என்று கடக்க முடியாது.
கிராமத்து வாழ்வை அனுப்பவிக்காதவர்கள் கூட கி.ரா அவர்களின் எழுத்தின் மூலம் அதை உணர்ந்து கொள்ள முடியும்.
அது மாதிரி தான் இந்த புத்தகமும். சிறார்களுக்காக புத்தகம் என்று வகுப்பட்டாலும், பெரியவர்கள் படித்தாலும் கூட அவர்களின் சிறு வயது நினைவுகளை தூண்டக் கூடிய ஒன்று. இப்புத்தகம் அச்சு இதழ் ஆவதற்கு முன்பே 1978 இல் இலக்கிய சிந்தனை விருதை பெற்றது (புத்தகம் முன்னுரையில் இருந்து)
80 பக்கங்கள், நல்ல பெரிய எழுத்து அச்சு, ஒவ்வொரு பகுதி ஆரம்பிக்கும் போது ஒரு பறவை, விலங்கு என்று கதையுடன் ஒன்ற கூடிய சிறிய வண்ண ஓவியம் என்று புத்தகம் பார்க்க அழகாக உள்ளது.
கதை வெங்கடேஷ் என்னும் ஒரு பள்ளி வயது சிறுவனை சுற்றியே நடை பெறுகிறது, அம்மா இல்லாமல் வாடும் ஒரு சிறுவன் எப்படி தன்னை அந்த சுழல்க்குள் அமைத்து கொள்கிறான். யாரும் இல்லா வரும் தனிமையை எப்படி பறவைகளின் வழியே போக்கி கொள்கிறான். அவனுடைய உலகில் அவன் பார்வையில் அவன் அப்பா, பக்கத்து வீட்டு அக்கா அண்ணா, மாமா என்று விரிகிறது கதை. கதை முழுவதும் பல பறவைகளின் விவரங்கள், கிராமத்து பக்கம் உள்ள நம்பிக்கையின் வழி உள்ளது.
தேன்கொத்தி குருவி, காக்கா பிடிக்கும் முறை, வால் குருவி, ஆண்டகுருவி, விலாங்கு மீன் கோழியை திருடி செல்வது, மைனா பேசும் முறை என்று பல விசயங்கள் நமது சிறு வயதில் கேட்டு நம்பிய ஒன்றை நினைவுப்படுத்தக் கூடியது.
#madhureadingchallenge #MadhuReads #TinkMadhuReads #readingchallenge
#readingtime #bookstagram #bookrecommendations #bookdealsforbrokebibliophiles #bibliophiles #booklover #tamilnovels #reading #bookworm #bookstagrammer #read #bookish #bookaddict #booksofinstagram #bibliophile #bookaholic #booklove #tamilbooks #tamilreaders