அஷ்டமா சித்துகளில், எட்டாவது சித்து ஈசத்வம் என்பது இறை தன்மையை அடையும் வழியை கூறுவது. அஷ்டமா சித்துகளில் ஏழினையும் குறைவரப் பெற்று, அதன் காரணமாக ஒரு தெளிவும், நிறைவும் பெற்று இறுதியாக அந்த ஏழு ஆற்றல்களையும் பயன்படுத்தி வாழ முற்படும்போது அவர் பிறர் கண்களுக்கு கடவுளாகத் தெரிவார்.
நாத்திகனான அனந்தகிருஷ்ணன் டாக்டர் தொழிலில் சிறந்தவன். அவன் எப்படி, சுந்தரானந்த ஸ்வாமிகளின் மூலம் வசியப்பட்டு, எட்டாவது சித்தி எவ்வாறு கைவர பெறுகிறான்? வாருங்கள் இறை நிலையை நாமும் அடையலாம்...
அஷ்டம சித்திகளில் எட்டாம் சக்தியான ஈசத்வம் பற்றியது.
ஆப்பிரிக்காவில் டாக்டராக இருக்கும் அனந்தகிருஷ்ணன் சில வருடங்களுக்குப் பிறகு இந்தியா வருகிறான். திருமணம் முடிந்து உடனே சென்றவன் இப்பொழுது தான் வரமுடிந்தது. தன் சொந்த ஊருக்குச் செல்லும் போது அங்கே மழை இல்லாமல் காய்ந்து கிடப்பதும் ,தன் பெற்றவர்கள் வயது கோளாரால் அவதிப்படுவதும், அண்ணிக்கு கேன்சர் வந்து துன்பப்படுவதையும் சகிக்கமுடியவில்லை.
அந்த ஊருக்கு ஒரு சாமியார் வருகிறார், வந்தவுடன் மழையையும் கொண்டுவருகிறார்.திடீர் என்று உடல் நிலை சரியில்லாமல் போக அனந்தகிருஷ்ணன் டாக்டராகப் போய்ப் பார்க்கிறான். கடவுளை பற்றித் தன் மனதில் உள்ள பல கேள்விகளைக் கேட்கும் போது வந்த மழை உணக்காக வந்தது என்றும், தான் மகாசமாதி ஆகி இந்த உடலை விட்டு வெளியேறி உன் உடலில் புகுந்து மக்களை நோயில் இருந்து காப்பேன் என்று சொல்கிறார். இவன் நம்ப மறுக்கிறான்.
தூங்கி எழும் போது அது அனைத்தும் கற்பனை என்று நினைக்க... ஆனால் அனைத்தும் உண்மை என நோயால் அவதிப்பட்ட அண்ணி சுகமாக இருக்கிறார்.அந்த சாமியார் மகாசமாதி அடைந்து அனந்து மூலம் மக்கள் நலனை காப்பாற்ற வருகிறார்.
ஈசத்வம் என்பது பிறர் கண்ணுக்கு நாம் கடவுளாகத் தெரிவது.