பக்கத்திலிருந்த ஒரு மருந்துக்கடையிலிருந்து இன்ஸ்பெக்டர் ஆஷா எலக்ட்ரிக்கல்ஸுக்குக் ஃபோன் செய்தார். “சுரேந்திரநாத்தா...? அவரு லீவுல இருக்காரே...?” “என்ன விஷயம்...?” “அவரு உடம்பை ஸ்லிம் பண்ணிக்கிறதுக்காக சுகம் மருத்துவமனைல அட்மிட் ஆகியிருக்காரு... “அது எங்கே இருக்கு...?” “மகாபலிபுரம் போற ரோட்டுல பீச் ரிசார்ட் இருக்குல்ல... அது பக்கத்துல மெயின் ரோட்டுலேர்ந்து உள்ளே இரண்டு கிலோ மீட்டர் தள்ளி...” உயர உயரமான அசோக மரங்களுக்குப் பின்னணியில் தூரத்தில் ஓங்கி உயர்ந்து தெரிந்தது சுகம் மருத்துவமனை. சிறைச் சாலையின் மதிற்சுவர் போல மிக உயரமாக கட்டப்பட்டிருந்தது காம்பவுண்ட் சுவர். நெடிதுயர்ந்து நின்ற கேட்டின் முன் பைக்கை நிறுத்தி...