அலுவலகம் முடியும் நேரத்தில் ஜி.எம். அழைத்தார். பூமிகா எதிரே வந்து நின்றாள். “பூமிகா, உன்கிட்ட ரொம்ப நாளா கொஞ்சம் பர்சனலா பேசணும்னு இருந்தேன் நான்” “சொல்லுங்க சார்” “உன் வீட்ல கல்யாணத்துக்கு பாக்கறாங்களா உனக்கு?” “அப்பா தயாரா இருக்கார். ஆனா நானில்லை சார்” “ஏன்?” “வயதான அப்பா, ஊனமான ஒரே தம்பி... பணத்தால, பாதுகாப்பால என்னை நம்பின இந்த ரெண்டு பேரையும் நான் எப்படி சார் கூட்டிட்டு வர முடியும்?” “அதுக்காக காலம் முழுக்க இப்படியே இருக்கப் போறியா?” “அதுதான் எனக்காக நியமிக்கப்பட்ட வாழ்க்கைன்னா எப்படி சார் நான் மாற்ற முடியும்?” “நோ. அது தப்பு பூமிகா” “எது சார்? பெத்தவரை, கூடப் பிறந்த தம்பியை ஆதரிக்கிறது தப்பா?” “நான் அப்படி சொல்லலை.