நித்யா, பிரசாத் இருவருக்குமே கணிசமான பெரிய சம்பளம்! நித்யாவின் அப்பா சிவகுமாரும் நல்ல வர்த்தகர் என்பதால் கணிசமான பணத்துக்கு சொந்தக்காரர். மகளுக்காக எதைச் செய்யவும் அவர் தயார். கொஞ்சமும் அகந்தை இல்லாத குடும்பம்! ஆரம்ப நாட்களில் நித்யா காரில் போய் பழகி, வீட்டிலும் சகல வசதிகளையும் அனுபவித்தாள்! புகுந்த வீடு அதில் பாதி கூட இல்லை. வசதிகளும் குறைச்சல். சில பிறந்த வீட்டு விஷமிகள் அங்கேயும் உண்டு! சம்பந்தி விருந்துக்கு வந்தபோது, “என்னடீ? நீ அத்தனை வசதியா வாழ்ந்துட்டு, எப்படீ இங்கே குடித்தனம் நடத்தப் போறே? இதெல்லாம் சரிப்படுமா?” பச்சோந்திகள். அடக்கி விட்டாள் அவர்களை. பிரசவத்துக்குக் கூட கடைசி நேரத்தில் பிறந்த வீட்டுக்குப் போய், குழந்தை பெ&