எதிர்மறை குணத்தில் அறிமுகமாகும் நாயகன், பிடிவாத பேச்சில் வறுத்தெடுக்கும் நாயகி...
இது இறப்பு வீட்டில் தொடங்கும் கதைக் களம். கிராமத்தில் எதிரெதிர் வீட்டில் வசிக்கும் உறவுகளின் பகையானது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையால் மேலும் தீரா பகையாக மாறுகிறது.
நாயகனும், நாயகியும் அந்தப் பகையில் சிக்கி தவித்து, பழிவாங்கல் மூலம் பகையைத் தீர்க்க எண்ண, அதுவே பிற்காலத்தில் விட முடியாத உறவாக மாறுகிறது...
உறவுகளின் பகைத் தீர்ந்ததா! நாயகன், நாயகியின் காதல் மலர்ந்ததா.? என்பதே கதை, வேகமாக நகரும் குறு நாவல்...