என்னுரை ---------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.
எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குமுதம், குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
குறுங்கவிதைகள், கவியரங்கக் கவிதை, புதுக்கவிதைகள் என்று பலவிதமான கவிதைகள் இருப்பதால் இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு 'கவிதைப் பூங்கொத்து ' என்று தலைப்பிட்டுள்ளேன். இவற்றில் பெரும்பாலானவை கண்ணனின் கவிதை வனம் குழுவிலும் அழகியசிங்கரின் சொல் புதிது குழுவிலும் வெளிவந்தவை . அவர்கட்கு என் நன்றிகள் . இது ‘'கவிதைப் பூங்கொத்து ’- நாகேந்திர பாரதியின் கவிதைகள் தொகுப்பு - 83 .