Jump to ratings and reviews
Rate this book

வான் மேவிய முகில் 1: தேனு (Vaan Meviya Mugil)

Rate this book
"கெட்டிமேளம், கெட்டிமேளம்" என்று அய்யர் உரக்க குரல் கொடுத்தார். பதுமை போல் அமர்ந்திருந்த மஞ்சிராவின் சங்கு கழுத்தில், மூன்று முடிட்சுகளையும் மகா அழுத்தமாக தானே இட்டான் அருகிருந்த மதுவந்தன். வானவ மதுவந்தன். முடிட்சிடுகையில் அவன் விரல் நுனி பட்டதில் மஞ்சிராவின் மேனி லேசாய் சிலிர்த்தது. கனவு போல் எல்லாம் ஒரு வேகத்துடன் நிகழ்வதை எண்ணி ஒருகணம் திகைத்தாள் மணப்பெண்.

கழுத்தில் கனத்த தாலி எல்லாம் நிஜம் தான் என்றது. தாலி மட்டும் தான் சொன்னதா?! கல்லோ சிலையோவென அருகில் நின்ற கணவனின் அருகாமையும் தான். வானவன் உள்ளூர ஒரு கொதிப்புடன் தாலி கட்டியதை அவள் நன்றாகவே உணர்ந்திருந்தாள். ஓரளவிற்கு இது அவள் எதிர்பார்த்ததும் தான். பின்னே? நள்ளிரவில் மணப்பெண் வேற்று ஆணுடன் கள்ளத்தனமாய் ஓட முற்பட்டால்? அதிலும் கையும் களவுமாக மணமகனிடமே பிடிபட்டால்? தன்மானம் மிக்க எந்த ஒரு ஆண்மகனும் கொதிக்கத்தானே செய்வான்?

மதுவந்தனின் மனநிலை அவளுக்கு நன்றாக புரிந்தது. அதே போல் அவளது நியாயமும் அவனுக்கு இன்றில்லா விட்டால் கூட, என்றேனும் புரியுமா? அதற்கு அவன் அவளை பேச விடவேண்டுமே. பேசினாலும் காது கொடுத்து கேட்க வேண்டுமே. கண்ணால் கண்ட பிறகு விளக்கம் எதற்கு என்பவனிடம், கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று யார் சொல்வது?

கல்யாணம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் எத்தனை பெரிய கனவு! தன் கல்யாணம் பகட்டாக இல்லாவிட்டாலும் மனதிற்கு நிறைவாக இருக்கும் என்று தான் அவள் கற்பனை செய்து வைத்திருந்தாள். ஆனால், இன்றோ.. அன்பெனும் அஸ்திவாரமே இல்லாத ஒரு பந்தத்திற்குள் அவள்!

அன்பான மாமனார், அரவணைக்கும் அத்தைமார், குறைவற்ற செல்வம், கண் நிறைந்த கணவன்.. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போன்றதொரு பிரமை. பிரமையோ..நிஜமோ.. ஆனால், ஒரு பெண்ணிற்கு மிகவும் அவசியமான தன் கணவனின் அன்பு, இன்றைய தேதியில் அவளுக்கு இல்லை என்பது மட்டும் நூற்றுக்கு நூறு நிஜம். இன்று மட்டுமா அல்லது என்றுமேவா? ஒரு திடுக்கிடலுடன் மஞ்சிரா மதுவந்தனை ஏறிட்டாள். மாலையும் கழுத்துமாய் அவன் அதே கல்முகத்துடன்.

கார்மேகவண்ணன் போல என்ன ஒரு வடிவான முகம்! கண்ணில் மட்டும் அந்த கடுமை இல்லாதிருந்தால்.. ஏக்கம் கண்ணை கரித்தது மஞ்சிராவிற்கு. அவனை சந்தித்த அந்த தினம் நினைவில் வந்து மேலும் அவளை வாட்டியது. அன்று அவன் கண்களில் இருந்த கனிவு எங்கே?!

89 pages, Kindle Edition

Published August 8, 2024

Loading...
Loading...

About the author

Thenu Tamil

27 books11 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
5 (83%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (16%)
No one has reviewed this book yet.