Jump to ratings and reviews
Rate this book

வான் மேவிய முகில் 3

Rate this book
குறும்பாக சொன்னவன் எதிர்பாராத தருணத்தில் இடையோடவளை வளைத்துப் பிடித்து பட்டிதழை சிறையெடுத்தான்.

மதுவந்தன் சொல்லில் காட்ட நினைத்ததை செயலில் காட்டத் துவங்க… மஞ்சிராவின் சொல் எங்கோ போனது… செயல் சொல்லாமல் போனது! சிந்தை தொலைந்த சேயிழையோ சிலையாக சமைந்து போனாள்.

அவனுடைய முன்நெற்றி. அதில் புரளும் அலை கேசம். மிக நெருக்கத்தில் வந்த முகம். அளவற்ற வெள்ளத்திலாடும் படகைப் போல அதில் அலை பாயும் அவள் மனம்!

புவி ஈர்ப்பு விசையை எவர் தூக்கி அவன் புருவத்தில் வைத்தார்?! இரு புருவம் தனை ஏற்றி இறக்கி, பெண்ணை சுழற்றி விடுகிறானே?... அவனை சுற்றியே சுழல விடுகிறானே!

ஆடவனின் கண்ணிரண்டும் அவள் கரை சேரக் கிடைத்தத் துடுப்பா? இல்லை… ஆழ்கடலுக்குள் அவளை அமிழ்த்திட வந்த அழைப்பா?! கல்லிடை அகப்பட்ட மீனாய் மூச்சுக்கு தவித்தாள் மஞ்சீரா. மதுவந்தனின் ஜீரா!

"ஜீரா... மை ஸ்வீட்ஸ்!" என்றான் அவன் குரலை கொஞ்சம் அமிழ்தினில் முக்கி.

மெல்ல முகம் வருடினான், விரலில் கொஞ்சம் மயிலிறகைப் பூட்டி!

கண்கள் கிறங்க, "மதன்!..." என்றாள் அவள் மயக்கத்தில் மன்மதனின் பெயரை மெல்ல சுருக்கி.

மதி மயக்குகையில் மதுவந்தன் மன்மதன் தானே?
மதி மயங்குகையில் மன்மதனும் மதன் தானே?!
விழியசைவில்… விரலணைப்பில்… கரும்பு வில்லெடுத்து கணை தொடுக்கிறானே?...
இவன் மன்மதனே அன்றி, வேறு யாராம்?!
மன்மதன் தான்.
மனதை மயக்கும் மதனே தான்!

இதழூர்தி இதழ் கடந்து, இன்னபிற தேசங்களுக்கு வேகமெடுக்க… வெட்கித் தடுத்த மஞ்சிரா, "ம்ம்ஹூம்!..." என்று மெலிதாய் மறுப்பை மறுபதிவு செய்தாள்.

வேகத்திலும் விவேகம் பயின்ற வானவ மதுவந்தன் மெல்ல சிரித்தான்.

வஞ்சியவளை விலக்கி நிறுத்தினான்.

"என்ன? இதுக்கும் ரெண்டு முகத்துக்கு நடுவிலே பூச்செண்டை வச்சி ஆட்டி விட்டுடலாம்னு நினைச்சியா?" என்று கேலி போலவே கேட்டு… கட்டவிழ்ந்த மனதையும் கூட, கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான் காளை அவன்.

"அதெல்லாம் இல்லை. ரீல்ஸ் எல்லாம் பார்த்திருக்கேன்." என்று உதடு கடித்து சொன்னவள், அத்தையின் காலடியோசை கேட்கவும், "எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும், மதன் சார்!.." என குறும்பாக சொல்லி புள்ளிமானாய் துள்ளி ஓடி விட்டிருந்தாள்.

காபி?... அது குளிர்ந்து கிடந்தாலும், அதில் காதலை கலந்துவிட்டிருந்தபடியால் கச்சிதமாய் தான் சுவைத்தது.

அந்த காலைப் பொழுது அத்தனை இனிமையாய் தொடங்கியது என்றால்…. மதியம் கொஞ்சம் மந்தமாகத் தான் மங்கித் தெரிந்தது.

சிறுசுகளின் சில்லறைச் சிணுங்கல்களை அரசல் புரசலாய் அறிந்த பெரியம்மா சென்ஸார் செய்ய வந்துவிட்டாரே!

"வீட்டிலே விருந்தாடிகள் இருக்கையில் இப்படி விளையாட்டுத்தனமா இருக்கக் கூடாது கண்ணா!" என்று பெரியம்மா கன்னியம்மா டீச்சராகி அவனுக்கும் ஒரு குட்டிப் பாடம் எடுத்தார்.

அசடு வழிந்து கொண்டே, "சரி, பெரியம்மா!... சரி... பெரியம்மா." என்று தலையைத் தலையை ஆட்டிவைத்தாலும், எப்போதடா இந்த சடங்கு… சம்பிரதாயம்… எல்லாம் முடிந்து, மஞ்சிராவை முழுதாக தூக்கி அவனிடம் கொடுப்பார்கள் என்று ஆலாய் பறந்து கொண்டு தானிருந்தான் அவன்.

83 pages, Kindle Edition

Published August 8, 2024

Loading...
Loading...

About the author

Thenu Tamil

27 books11 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
1 (33%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (33%)
No one has reviewed this book yet.