Jump to ratings and reviews
Rate this book

வான் மேவிய முகில் 4

Rate this book
மதுவந்தனின் அறை மேல்தளத்தில் அமைந்திருந்தது. சாந்தி முகூர்த்த அறையும் அதுவே தான். எப்போதுமே தனி கம்பீரம் காட்டும் அந்த அறை, மலர் அலங்காரத்தில் இன்றைக்கு வேறு வகையானதொரு பொலிவைக் காட்டியது. வன்மையும் மென்மையும் கலந்த அந்த கம்பீரம் கூட அறையின் உரிமைத்தலைவன் மதுவந்தனின் குணாதிசயத்தையே பிரதிபலித்தது.

கட்டிடமோ ஆடம்பரத்தின் எல்லை! சாய்ந்து அமர்ந்து வேடிக்கை பார்க்க வசதியாய், ஒரு இலவம் பஞ்சு குஷன் வைத்த திண்டு. அணைக்கும் அன்னையாய் ஒரு சாய்வு நாற்காலி. அதனருகே கெஞ்சும் கால்கள் இளைப்பாற ஏதுவாய், ஒரு சின்ன ராக்கிங் ஸ்டூல்.

கனமான திரைச்சீலைகளும், காதலாடி அவற்றை அலங்கரித்துப் படர்ந்திருந்த சன்ன துணி ரகங்களும், காற்றிலாடி இயம்பியது தான் என்ன?... வன்மையும் மென்மையும் இணை சேர்வதே இல்லற இலக்கணம் என்றா?! கட்டிலறைக்கு ஏற்ற கணக்கு தான். புதுமணத் தம்பதிகளுக்கேற்ற போதனை தான். போதையும் தான்!

சாளரத்தின் வழியே தெரிந்த இயற்கை எழிலை வர்ணிக்க வார்த்தையில்லை!

பரந்த புல்வெளியும் புதரும்… நடுவே ஒரு புத்தரும்… சுற்றிலும் மரம் செடி கொடிகளும்… ஐந்து விரல் போல வேற்றுமையில் ஒற்றுமை காட்டி, புத்தனை பெருமை படுத்தின. மரத்தில் படர்ந்த கொடி, காதலை காட்டினால்… பனியை தாங்கும் புல், தாய்மையைக் காட்டியது.

சாளரத்தின் கண்ணாடி வழியே, மங்கிய விளக்கொளியோடு மாலை நேரத்து மஞ்சள் வெயிலும் சேர்ந்து கொள்ள… அந்த அறையே பொன்னிறத்திலொரு தங்க மாடம் போல தகதகத்தது. அதன் மையத்தில் ஒரு மரக்கட்டில்.

மரவேலைப்பாடு மிகுந்த அந்த தேக்கு மரக்கட்டிலும், அதை ஒட்டி இருந்த மரஅலமாரியும் கூட அறையின் செல்வாக்கை மேம்படுத்திக் காட்ட… மொத்தத்தில் ஒட்டு மொத்த மேல்தளமே அந்த பணியை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொள்ள… சிங்க மெத்தையாரின் பாரம்பரியத்தைப் பறை சாற்ற, கட்டிட நுட்பங்களைத் தாண்டி வேறெந்த ஆடம்பர பொருளுக்கும் தேவையற்றுப் போனது.

ஐம்புலன் பசியாறப் பஞ்சணை. பஞ்சணைப் பணியாற்றா பொழுது புலன் சாயப் புத்தகம். புத்தகத்தின் புக்ககமென படுக்கையையொட்டி ஒரு நூலகம்.

ஆயிரம் அழகிகள் இருந்தாலும், அந்தபுரத்திலொரு மகாராணி போல… அந்த ஒற்றை மரக்கட்டில். அந்த ஒற்றை கட்டிலின் மேல் இரட்டை மெத்தை கொண்டதொரு மலர் மஞ்சம்!

மஞ்சத்தை அடுத்து சின்ன மேஜை. அதன் மேல் அலங்கரிப்பட்ட தட்டில் பழ வகைகளும் இனிப்பும். எல்லாமே கொஞ்சம் கூடுதலாக வைக்கப்பட்டிருந்தன.

மணம் பரப்பும் அகர்பத்தியின் கங்கு அரை அங்குலத்தை கடந்து விட்டிருந்தது.

வழக்கத்தை விட சற்று முன்னதாகவே வந்து விட்ட முழுமதியின் ஒளி, ஜன்னல் வழியே ஊடுருவி மதுவந்தனின் மேல் ஒரு போர்வை போல போர்த்தியிருந்தது. அந்த மென்னொளியினாலும்… மணம் பரப்பும் மல்லிகையினாலும்… மதுவந்தனிடம் யாதொரு மாற்றத்தையும் தோற்றுவிக்க முடியவில்லை. தொடர் தோல்வி தான். உடல் இறுக அமர்ந்திருந்தவனின் முகத்தில் மருந்துக்கும் மாற்றம் இல்லை.

சிறிது நேரத்துக்குப் பின் மங்கையின் வரவை எடுத்துரைக்கும் வண்ணம், வெறுமனே சாத்தி இருந்த கதவை யாரோ சம்பிரதாயத்துக்காகத் தட்டினார்கள். உடல் விறைப்புற நிமிர்ந்தான் மணவாளன் மதுவந்தன்.

தோழியர் கதவை தள்ளித் திறக்க… மல்லிகையின் நறுமணத்தோடு, அகர் பத்தியின் மனமும் மஞ்சிராவின் மென்முகத்தில் மோதியது. அந்த சுகந்தமான சுப முகூர்த்த வேளையில் வஞ்சிமகள் மஞ்சிரா மலர் மஞ்சம் காண கணவனிடம் அனுப்பி வைக்கப்பட்டாள்.

உள்ளே நுழைந்தவள் முதலில் கண்டது, இரு கைகளையும் கட்டிலில் ஊன்றி கற்பாறையென அவன் அமர்ந்திருந்த தோற்றமே. குத்தட்டுமா?... கிழிக்கட்டுமா?... என்பது போன்ற பாவனையில், நெற்றி சுருங்க… கண்கள் இடுங்க… தாடை இறுக… கட்டிலை ஆக்கிரமித்து, பரம வைரி போல அமர்ந்திருந்தான் அவன்.

நீல வண்ண சேலை சரசரக்க உள்ளே நுழைந்த மஞ்சிரா அவனுடைய கத்திப் பார்வையில் கொஞ்சம் தயங்கி நின்றாள். கதவை யாரோ வெளிபுறமிருந்து சாத்தினார்கள்.

"வா!" என்று சொல்வான் என நினைத்தாளோ?!... அல்லது "போ!" என்று சொல்வான் என அஞ்சினாளோ?... கால்கள் பின்ன, கன்னி அங்கேயே நின்றிருந்தாள்.

பொறுமை இழந்த மதுவந்தன், தானே சென்று கதவை தாளிட்டான். அப்போதும் கூட "வா!" என்று வாய் திறந்து அழைத்திடவில்லை.

"அது தான் வந்து விட்டாயே." என்பது போல அலட்சியமாகத் தான் இருந்தது அவனுடைய பாவனை.

86 pages, Kindle Edition

Published August 9, 2024

Loading...
Loading...

About the author

Thenu Tamil

27 books11 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (25%)
4 stars
4 (50%)
3 stars
0 (0%)
2 stars
1 (12%)
1 star
1 (12%)
No one has reviewed this book yet.