Jump to ratings and reviews
Rate this book

வான் மேவிய முகில் 7

Rate this book
இரவு வெகு நேரம் கழித்து தான் மதன் வந்தான். மஞ்சிரா மட்டும் அவனுக்காக விழித்திருந்தாள்.

"நீ இன்னும் தூங்கலை?"

"இல்ல. நேரமாச்சே சாப்டீங்களா?"

"ம்ம்"

"ஓ!" என்ற அவளின் ஏமாந்த குரலில், முகத்தை கூர்ந்து பார்த்தவன், "நீ இன்னும் சாப்பிடலியா?" என்றான் குறிப்புணர்ந்து.

"இல்ல. பசிக்கலை."

"ஏய்!" கையைப் பற்றி அவன் இழுக்க, அவன் மீதே சாய்ந்தாள்.

"உக்காரு. உன்னை உக்காரச் சொன்னேன்." கண்டிப்போடு சொன்னவன், உணவையும் தானே பரிமாறினான்.

"சாப்பிடு."

"நீங்க…"

"நானும் சாப்பிடறேன். நீ சாப்பிடு."

அவனுக்கொரு தட்டை எடுக்கப் போனாள்.

"இதே போதும்." என்றவன், அவள் தட்டில் உணவைப் பிசைந்து அவளுக்கு ஊட்டி விட்டான்.

கண்ணில் நீர் மல்க வாய் திறந்தாள்.

அமுதூட்டினானா?... அமிழ்தூட்டினானா?! உயிர் அமரகாவியம் பாடியது.

கண் கொட்டாது அவள் பார்க்க, "ஹேய்... கண்ணை சிமிட்டு... கல்லு சிலை போல என்னையே பார்த்துட்டு." என்று நெற்றி முட்டினான் அவன்.

"கோவம் எல்லாம் போச்சா?"

"ம்ம்... இருக்கு."

அவன் பதிலில் ஏமாந்து போனாள்.

"போதுமா?!... ஒரு வாய் சோறு போதுமாமா?... சரி. எனக்கு ஊட்டு."

"விளையாடாதீங்க, மதன். கோவமா இருக்கேன்னும் சொல்லிட்டு… ஊட்டி விடுன்னும் சொன்னா… நான் ஒன்னும் பொம்மை இல்ல."

"ஷ்... இங்க வேணாம்." என்றவன், அவளை வற்புறுத்தி சாப்பிட வைத்த பின்னர் தான் எழுந்தான்.

அவர்களுடைய அறைக்கு வந்ததும் வராததுமாக அவள் ஆரம்பித்தாள்.

"இங்கே யாரும் இல்லை. இப்போ சொல்லுங்க."

"கோவம் இருக்கு. என்னை வருஷக்கணக்கா காதலிச்சிட்டு ஒரு நாள்ல தூக்கி போட்டதை நினச்சா கோவம் இருக்கு. ஆனால் முன்னே இருந்த கோவத்துக்கும், இதுக்கும் வித்தியாசமும் இருக்கு.

என்ன தான், எனக்கு நல்லதே நினைச்சாலும்… அதெப்படி என்னை தூக்கிப் போடலாம்னு ஒரு கோவம். இருக்கலாம் தானே?... ம்?!" கொஞ்சலாகக் கேட்டான்.

அகமும் முகமும் மலர விகசித்தாள் அவள்.

"அப்படின்னா… அப்படின்னா?... நான் உங்க நல்லதுக்கு தான்னு சொன்னதை, நீங்க ஏத்துக்கறீங்க. என்னை முழுசா நம்பறீங்க. அப்படித்தானே அர்த்தம்?!"

கனவா நனவா என்ற பிரமிப்பு அவள் கண்களில். கிள்ளிப் பார்த்துக் கொள்ள தோன்றியது. அதற்கு அவசியமேயின்றி 'நினைவிது தான்; நிஜம் இது தான்' என உறுதிப்படுத்தும் விதமாக அவளை ஆறத் தழுவிக் கொண்டான் மதுவந்தன்.

"ம். என்னோட உள்ளுணர்வு சொல்றதை வச்சி மட்டும் நம்பறேன், ஜீரு" என்றவன் முத்தாய்ப்பாய் முன்னிச்சியில் முத்தமிட்டான்.

"அப்படியே, அதனால விளைந்த நன்மை என்னன்னும் நீயே சொல்லிடேன், ஜீரு... எவ்வளவு யோசிச்சும் காரணம் மட்டும் பிடிபடலை."

அவளிடம் பதில் வராததை கண்டவன், ஒரு தீர்மானத்தோடு சொன்னான்.

"அப்போ… நீயா சொல்ல மாட்டே. அப்படித் தானே?! ஆல்ரைட். நானே கண்டுபிடிச்சுப்பேன்."

"ம்ஸ்!... அது எதுக்கு தேவை இல்லாத விவரம்?!... என் மேல நம்பிக்கை வச்சி, இதையும் இத்தோட விட்டுடுங்களேன்."

"சுலபமா சொல்லிட்டே மஞ்சு. முயற்சி பண்றேன்." என்றவன், அவளுடைய கூந்தலில் வாசம் பிடிக்க… குங்குமமாய் சிவந்தாள் அவள்.

கதவை யாரோ தட்டும் ஓசையில் இருவரும் நிலை மீண்டனர்.

சம்பா தான் கதவுக்கு வெளியே நின்றிருந்தாள்.

"நீங்க?!"

"நான்… நான் சம்பா... மிலிட்டரி ஜெனரல் பெரியசாமியோட பொண்ணு…"

என்னவோ, அவனுக்கும் சம்பாவை முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை. துர்தேவதையைக் கண்டது போல ஒரு எரிச்சல் மண்டைக்குள் சுறுசுறுவென மண்டியது.

83 pages, Kindle Edition

Published August 10, 2024

Loading...
Loading...

About the author

Thenu Tamil

27 books11 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
1 (33%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (33%)
No one has reviewed this book yet.