சில பல கணங்களுக்கு பின், "மஞ்சு-ன்னா மேகம்-ன்னு ஒரு பொருள் இருக்கு. மஞ்சு, வந்து போகும் மேகம் போல என் வாழ்க்கையிலே நீ வந்து போயிட்ட... பொய்த்துப் போயிட்டன்னு கற்பிதம் செஞ்சி… நொந்து போயிருந்தேன்!… என் நினைப்பு தப்பா போனதை நினைச்சா எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?!" என்றான்.
அவள் ஆச்சரியமாகப் பார்த்துச் சொன்னாள், "நானும் கூட சில சமயம் இப்படி நினைச்சிருக்கேன் …த்தான். வந்து போன மேகம் போல உங்க வாழ்க்கையிலே நான் வந்து போனதாகவே இருக்கட்டும்னு. உங்க அன்பு கிடைக்காதப்போ எல்லாம் முகில் வானத்துக்கு ஆசைப்பட முடியுமா?... எப்போவும் வானத்தோடயே இருந்திட முடியுமா?!... முகில் மழையா மாறி மண்ணுக்கு போயி தானே ஆகணும்ன்னு மனசை தேத்திப்பேன்."
"நீ வந்து போகும் மேகம் இல்லை; நீ நிரந்தரம். என்னோட வாழ்வாதாரம்."
"மேகம் வானத்திலேயே இருக்கறதில்லேயே, அத்தான்!"
"முகில் மண்ணுக்கு போனாலும் போன வேலை முடிஞ்சதும் வானத்துக்கே வந்துடும் மஞ்சு."
"ம்… எனக்கு பிரியாத வரம் தான் வேணும்."
"மேகம் பல உருவெடுக்கலாம் மஞ்சு... மேகம் மழை ஆகலாம்; மழை நீராவி ஆகலாம்; ஆனா முடிவிலே அது மீண்டும் மேகமா தானே ஆகணும்?! வானோடு தான் மேகம்... அதே போல தான் நீயும், மஞ்சு. என்னோடு தான் நீ! நமக்கு இனி பிரிவே இல்லை.
உன்னை தாய் மகள் மருமகள்ன்னு யார் வேணாலும் என்ன உறவு வேணாலும் கொண்டாடிக்கட்டுமே, ஆனா முதலும் முடிவுமா நீ என் மனைவி. எனக்கு மட்டுமே உரியவள். எனக்கு மட்டுமே சொந்தம். யூ ஆர் ஃபாரெவேர் மைன். (You are forever mine!).
நீ இந்த மதுவந்த வானவன் மேவிய முகில். வானவனை மேவிய முகிலும் நீ தான்!
வான்… மேவிய… முகில்! நான்… மேவிய… முகில்!"
என்று வார்த்தைக்கு வார்த்தை ஒரு வன்முத்தம் பதித்தான். பின் இதழ் வைத்த தீயை நாவால் நனைத்து.. அணைத்து.. தன்னுடையவளை மீண்டும் தனதாக்கிக் கொண்டான்.
"வான் மேவிய முகில் மட்டும் இல்லை மதனத்தான், வான் மேவிடும் முகிலும் நான் தான். இந்த மையலுக்கு முடிவே இல்லையாம்!" அவள் மெல்ல கிசுகிசுத்தாள்.