நகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன். என் நம்பிக்கை பலித்துவிட்டதை எண்ணித் திருப்திப்படுவதே அப்பொழுது என்னுடைய காரியமாக இருக்கும்.
நகுலன் (இ. மே 17, 2007) தமிழ் எழுத்தாளர். டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். 'எழுத்து' இதழில் எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த 'குருஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன்.
T. K. Doraiswamy (21 August 1921 – 17 May 2007), also known by his pen name Nakulan, was an Indian poet, professor of English, novelist, translator and short fiction writer, who wrote both in Tamil and English, and is known for his surrealism and experimentation as well as free verse. He served as Professor of English, Mar Ivanios College, Thiruvananthapuram for four decades.
During his literary career which started in his forties, when he started writing in Ezhuthu, a literary magazine founded by C. S. Chellappa, he wrote a novel and six books of poems in English, and nine novels and five books of poems in Tamil. His English work was mostly published under his real name, while Tamil works often appeared under his pen name. He also wrote briefly under the pen name, S. Nayar(?). His symbolic novel Ninaivup Patai Nilakal (1972) is considered a milestone in Tamil literature and established him as an avant garde novelist. His other notable works in Tamil include, Nizhalgal, Naykal, Naveenante Diary Kurippukal, Ezhuthu Kavithaikal, Iruneenda Kavithaikal, Antha Manchal Nira Poonaikutty, and in English, Words to the Wind, 'Non-Being' and 'A Tamil Writer's Journal'
வாழ்க்கையை வாழ்ந்து கடக்க ஆயிரம் நியதிகளைச் சொன்னாலும் வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு மட்டுமே தெரியும் எதை அவன் பாதையாகத் தேர்ந்தெடுப்பது என்று..
மகனாக இருக்கும் போது தந்தையிடம் இருந்து விலக சாரதி எதையெல்லாம் காரணமாக்கினாலும் தனக்கெனத் தனிப்பட்ட வாழ்வு வரும் போது தன் தந்தை போலவே மாறத் தொடங்கிவிடுகிறான்.
எது முடிவு எங்கே நிலைப்பெற வேண்டும் என்ற எந்தத் தீர்மானமும் இல்லாத மனது காற்றுபோலத் திசையெல்லாம் போகத் தான் துடிக்கும்.வாழ்வின் மையப்பொருளை நோக்கி நகராதவரை அனைத்தும் நிழல்களே...
நியதியின் கோட்பாடுகள் அனைத்து பக்கமும் சௌகரியத்தால் சூழப்பட்டவன் மட்டுமே விரும்பி ஏற்பதாகிறது.
60 பக்கங்கள் கொண்ட புத்தகம் தான் . ஆனால் 300 பக்கம் கொண்ட நாவலின் அடர்த்தியையும் தாக்கத்தையும் கொண்டுள்ளது . கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மூன்றே வகையைச் சார்ந்தவர்கள் . அடிமைகள் , ஆழ்பவர்கள் , அடிமைகளைக் காப்பாற்றுபவர்கள் . தன் மனம் சொல்வதை முற்றிலுமாக கேட்டு யாருக்கு அடியிலும் அடங்க மறுக்கும் சாரதி . தன் வழி வராத பிள்ளையை அடக்க நினைத்து அதில் தோற்று அந்த கோபத்தை வெளி காட்டி கொண்டே இருக்கும் அப்பா . சந்தேகப்படுகிறார் , சபிக்கிறார் , துரத்துகிறார் . ஆனால் சாரதியின் ஆசையைக் கேட்கவில்லை .
இதிலிருந்து தப்ப நினைத்த சாரதி ஒரு கட்டத்தில் அவன் அப்பாவைப் போலவே நடக்கிறான் . அவனை அவன் மனைவி காப்பற்றுகிறாள் . சிறுவயதில் நாம் பார்த்த மனிதர்களின் தாக்கம் நம்மிடம் அவ்வப்போது வந்து கொண்டேதான் இருக்கிறது .
இறுதியில் தன்னை அவ்வளவு சபித்த தன் அப்பாவின் சடலத்தின் முன் நின்று பிரிய முடியாமல் சாரதி அவஸ்தைப்படும் காட்சி மனித மனங்களின் அப்பட்ட நிலை ❤️
நகுலன் இப்போதுதான் அறிமுகம். நிழல்கள் முதல் பதிப்பு வெளியானது 1965ல். நம்பவே முடியவில்லை. என்ன ஒரு madness. வித்தியாசமான, தீவிரமான காட்சியுருவாக்கம்...! Absolutely loved it..!
நகுலன் - தனிமையின் காதலன் இது நகுலன் எழுதிய கதைகளில் ஒன்று . பொதுவாக நகுலனின் கதைகளில் தனிமை என்பது ஒரு முக்கியமான இடம் இருக்கும் அவரின் வாக்குமூலம் கதையாக இருக்கட்டும் நவீனன் டைரி போன்ற புத்தகங்கள் தனிமையில் இருக்கும் மனிதர்களை பத்தி பேசுகிறது. இந்த கதையில் எழுத்தாளர்க்கு ஒரு தாய் இருப்பது போல சொன்னாலும் அவர்களை பற்றி அதிகமாக வரவில்லை .அதே போல இதில் சுசிலா என்ற பெண் பெயரும் வருகிறது அதுவும் ஒரு கற்பனை பாத்திரம் தான்.சாரதி என்பவரின் வாழக்கையை பதிவு செய்வது தான் சாரதியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே இந்த முழு கதையும் .இந்த கதையை நான் ரயில் பயணத்தில் தான் வாசிக்க ஆரம்பித்தேன் சில இடங்களை தவிர மற்ற எந்த இடத்திலும் சோர்வு தட்டவில்லை. நகுலன் சிறந்த நூல்கள் வரிசையில் இதற்கும் ஒரு இடம் உண்டு.
பொதுவாக ஏன் இன்றுவரை கூட நாவல் வடிவம் என்றால் template இருக்கிறது . ஒரு protoganist, it may be field or a person. அதைச் சுற்றி ஒரு வாழ்வியல் இருக்கும். அதன் தனிப்பட்ட focal point ஐ அடைய struggle செய்து போராடி வெற்றி பெறும்.
இந்த நடைமுறையை மாற்றிய பனுவல்களாக மாற்றியது சாரு நிவேதிதா போன்றவர்கள்தான். எக்ஸிஸ்டென்ஷியலும் பேன்சி பனியனும், ஜீரோ போன்றவற்றில் எல்லாம் இந்த ஒரு ஊர்ல ஒரு ராஜா பாணியே இருக்காது. சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளும் கிட்டத்தட்ட இதே ஜாகையில் தான் வரும்.
ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாக நகுலனின் நிழல்களைச் சொல்லலாம். தன் தந்தையை அப்பாக்குரங்கு என வெறுக்கும் ஒருவன் தான் குடும்பத் தலைவனாகும் போது எவ்வாறு அதே நிலை அடைகிறான் எனும் சிறிய அறுபது பக்கக் கதைதான் நிழல்கள்.
ஆனால் அதை லீனியராகக் கொண்டு போகாமல் கதாபாத்திரத்தின் மனவெழுச்சியாக கொண்டு சென்ற நடையில்தான் இலக்கிய வரலாற்றில் இதற்காக இடத்தை உறுதிப்படுத்துகிறது.
மனம் போன போன போக்கில் என கையில் அகப்பட்டதை எல்லாம் எழுதாமல் படிக்கும் நம்மையும் ஆழ யோசிக்க வைக்கிறது இறுதி 20 பக்கங்கள்.
அப்பாவின் தோள்களில் பார்க்கும்போது உலகம் எளிதாகத்தான் தெரியும். குடும்ப பாரத்தைத் தோளில் ஏற்கும்போது தான் அப்பா ஏன் இப்படி இருந்தார் என்றே புரிய வரும். அந்த முகத்தில் அறையும் நொடியை காட்சிப்படுத்தியதிலும் நிழல்கள் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.
அறுவத்தி மூன்று பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் எப்படி நாவல் என்ற கோட்பாட்டுக்குள் வந்தது என்பது தான் முதல் கேள்வியாக வந்தது படித்த பின்பும் இந்த கேள்வி உள்ளது . ஆனால் இந்த நாவலின் அடர்த்தியான் மொழியும் தத்துவார்த்தமான நடையும் தான் இதனை நாவல் ஆக்குகிறது , பார்த்ததின் இளமைக்கால அளக்கழிப்புதான் கதை அவனின் மனம் செயல்படும் விதம் வெளிபடையாக எழுதி இருக்கிறார் ஆதவனுக்கு பபிறகு இந்த நடை கொண்ட எழுத்து நகுலன் அவர்களுடையது.( என் வாசிப்பில் ).
நகுலனின் எழுத்து அவரின் அனுபவங்களின் செதுக்கப்பட்ட வடிவமாகவே அமைந்திருக்கிறது. வெறும் அனுபவத்தை எழுதுதல் இலக்கியமாகிவிடுவதில்லை.அவ்வாறு இலக்கியமாக்கப்பட்ட வகையில் நகுலனின் கலைத்திறன் பிரமிக்க வைப்பதோடு ஒரு புதிய அனுபவமாகவும் இருந்தது.
தற்செயலாக படிக்க கிடைத்த நூல். இதை ஒரு குறுநாவல் என்று சொல்லலாமோ. 60 பக்கங்கள் தான். ஒரு மணித்துளியில் படித்து முடித்தேன். அறுபதுகளில் இதன் ஆசிரியர் எழுதிய இந்தக் கதை ஒரு செம்படைப்பு ஆகும்.
இந்த நாவலே ஆசிரியருடன் எனது முதல் அறிமுகம் ஆகும். அனுபவித்துப் படிப்பதற்கும், படித்து அனுபவிப்பதற்கும் நிறைய உள்ளது இந்த சிறு படைப்பில். நீங்களும் முயற்சிக்கலாம்.