Jump to ratings and reviews
Rate this book

ஏழு தலைமுறைகள் [Ezhu Thalaimuraigal]

Rate this book
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!

Tamil Version of Roots: The Saga of an American Family by Ethirajulu

When he was a boy in Henning, Tennessee, Alex Haley's grandmother used to tell him stories about their family—stories that went back to her grandparents, and their grandparents, down through the generations all the way to a man she called "the African." She said he had lived across the ocean near what he called the "Kamby Bolongo" and had been out in the forest one day chopping wood to make a drum when he was set upon by four men, beaten, chained and dragged aboard a slave ship bound for Colonial America.

Still vividly remembering the stories after he grew up and became a writer, Haley began to search for documentation that might authenticate the narrative. It took ten years and a half a million miles of travel across three continents to find it, but finally, in an astonishing feat of genealogical detective work, he discovered not only the name of "the African"--Kunta Kinte—but the precise location of Juffure, the very village in The Gambia, West Africa, from which he was abducted in 1767 at the age of sixteen and taken on the Lord Ligonier to Maryland and sold to a Virginia planter.

Haley has talked in Juffure with his own African sixth cousins. On September 29, 1967, he stood on the dock in Annapolis where his great-great-great-great-grandfather was taken ashore on September 29, 1767. Now he has written the monumental two-century drama of Kunta Kinte and the six generations who came after him—slaves and freedmen, farmers and blacksmiths, lumber mill workers and Pullman porters, lawyers and architects—and one author.

But Haley has done more than recapture the history of his own family. As the first black American writer to trace his origins back to their roots, he has told the story of 25,000,000 Americans of African descent. He has rediscovered for an entire people a rich cultural heritage that slavery took away from them, along with their names and their identities. But Roots speaks, finally, not just to blacks, or to whites, but to all people and all races everywhere, for the story it tells is one of the most eloquent testimonials ever written to the indomitability of the human spirit.

272 pages, Paperback

First published October 15, 1980

85 people are currently reading
795 people want to read

About the author

Alex Haley

86 books1,280 followers
Alexander Murray Palmer Haley was an American writer. He is best known as the author of Roots: The Saga of an American Family, and of The Autobiography of Malcolm X, the latter of which he wrote in collaboration with Malcolm X.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
121 (67%)
4 stars
43 (24%)
3 stars
8 (4%)
2 stars
2 (1%)
1 star
4 (2%)
Displaying 1 - 30 of 31 reviews
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews28 followers
April 9, 2021
1976 இல் எழுதப்பட்ட அலெக்ஸ் ஹேலியின் வேர்கள்(Roots: The Saga of an American Family) என்ற பெரும்புதினத்தின் வீரியம் குறையாத இச்சிறுப்படைப்பாகும்.
இந்நூலின் ஆசிரியர்,அவர் தன் பாட்டிமார்கள் சொன்ன கதைகளின் அடிப்படையில் அவர் தன் குடும்பத்தின் வேர்களைக் கண்டறிந்து அதில் மாபெரும் வெற்றியும் கண்டுள்ளார்.
முழுக்க முழுக்க ஏழு தலைமுறைகளைச் சார்ந்த(அதற்கு மேலும்)கருப்பின அடிமைகளின் இரத்தம், கண்ணீர், சோகங்கள் மற்றும் வலிகள் நிறைந்த கருப்புச்சரித்திரம்.
இந்நூலின் மிகப்பெரிய ரசிகரான இயக்குனர் வெற்றிமாறன் இதில் வரும் கோழிப்பந்தயம் அவர் ஆடுகளம் திரைப்படத்தின் கருவாக அமைந்தது என பல்வேறு தருணங்களில் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
Profile Image for Aravind Sathyadev.
16 reviews9 followers
April 29, 2023
நூலாசிரியர் தனது மூத்தகுடியான குண்ட்டா கிண்ட்டேவிலிருந்து தொடங்கி அலெக்ஸ் ஹேலி வரை தனது ஏழு தலைமுறை குடும்ப வரலாற்றை சொல்வதன் வழியே அமெரிக்காவின் இருண்ட பக்கங்களையும் வெள்ளையர்கள் கருப்பின மக்களுக்கு செய்த நிறவெறிக் கொடுமைகளையும் சுரண்டல்களையும் பற்றி பேசுகிறார்.
இந்தியாவின் சாதிக் கொடுமைகளுக்கு சற்றும் சளைத்ததல்ல வெள்ளையரின் நிறவெறிக் கொடுமைகள்.
கி.பி 1619 ல் தொடங்கிய அடிமை முறை கி.பி 1865 வரை தொடர்ந்தது.
அமெரிக்க கருப்பின மக்கள் பற்றியும் நிறவெறிக் கொடுமைகள் பற்றியும் படிப்பதற்கு இந்த புத்தகம் ஆரம்பப்புள்ளியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்நூல் Roots: The Saga of an American Family என்ற ஆங்கில நூலின் சுருக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பாகும்.
Profile Image for Marudhamuthu.
68 reviews13 followers
December 24, 2022
Alex Hailey's Rootsஐ சிறிதும் தாக்கம் குறைவின்றி கொடுத்திருக்கிறார் எத்திராஜூலு என்று நினைக்கிறேன். சிறிதும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக சென்றது. எனினும் Rootsஐ ஒரு முறை வாசிக்க ஆசைவருவதை தவிர்க்க முடியவில்லை. என்னைப் போல அதிக பக்கங்கள் கொண்ட புத்தகத்தை படிக்க தயக்கம் இருப்பவர்கள் இதை நிச்சியமாக படிக்கலாம். மற்றவர்கள் rootsஇன் நேரடி மொழிபெயர்ப்பு வேர்கள் என்ற பெயரில் கிடைக்கிறது. அதை வாசித்து பாருங்கள்.
Profile Image for Muthu.
27 reviews2 followers
July 26, 2022
இதுவரையான வாசிப்பு அனுபவத்திலேயே என்னை மிகவும் உணர்ச்சி வசத்தில் ஆழ்த்திய நாவல் ஒரு அடிமை உடைய வாழ்க்கை அவனுடைய வலி அவன் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வரும் ஒடுக்குமுறை அனைத்தைப் பற்றியும் அதை வாழ்ந்து வந்த அனுபவத்தை தரக்கூடிய நாவல் . சுதந்திரம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு தேவையான ஒன்று இந்த நாவலை படித்த பிறகு உங்களால் யாரையுமே அடிமையாக நினைத்து கூட பார்க்க முடியாது சுதந்திரக் காற்று இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்குமே கிடைக்க வேண்டிய முக்கியமான ஒன்று இங்கு யாரும் யாருக்கு கீழேயும் இல்லை யாரும் யாருக்கும் அடிமை இல்லை
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews24 followers
November 25, 2021
ரத்த கண்ணீர் வருகிறது. மனித குல வரலாற்றின் மிக பெரும் களங்கம் Slave trade. என்ன பரிகாரம் செய்து இந்த பாவங்களை மேற்கத்திய உலகம் தழுவியது? இதை அப்படியே இங்குள்ள சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு ஒப்புமை படுத்தலாம் தானே? ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை காலத்துக்கு என அங்கலாய்க்கும்போது சப்பென்று அறைந்து காலம் முழுவதும் என சொல்ல வேண்டும். ஆம்படையான் சனி பிடித்தது என ஆதிக்க சாதி மொழி இந்த புத்தகத்தில் இடம் பெற்றது அவல நகைச்சுவை.
Profile Image for Tharsi Karan.
50 reviews7 followers
February 24, 2020
தலைவருக்கு பிடிச்ச புத்தகம் எண்டதால தேடி வாங்கி வாசிச்ச புத்தகம். பின்னுக்கு ஒரு இடத்தில உடம்பெல்லாம் புல்லரிக்கும். கொடுமை எண்டா இதுதான் கொடுமை என்ற ஒரு விசயத்தில இருந்து ஒரு சமூகம் விடுதலை அடைகிற தருணம் அது. தலைவருக்கு இந்த புத்தகம் பிடிக்க காரணம் அப்ப தான் விளங்கிச்சு.
Profile Image for Bharani.
11 reviews
February 28, 2024
One of the best book ever i read in my life, I can’t even imagine what they are gone through such a painful life they had. Six generations of struggle and hope for freedom, every generation people believes they’re hope and telling their life incidents to every generation and seventh generation the writer alex haley took 12 years for this book to research and evidently proved this is what happened to them and written this book for us. Thanks 🙏

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!!!
Profile Image for Padmanathan N.
32 reviews1 follower
April 7, 2023
அலெக்ஸ் ஹேலி அவர்களின் 'ROOTS' எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. கருப்பின மக்களின் அடிமைத்தனத்தை விவரிக்கிறது இந்த நூல். தனது பரம்பரையை பற்றிய ஆராய்ச்சியின் மூலம் இதனை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளார் நூலாசிரியர். சீரிய நடையில் தமிழில் நம் கரங்களில் தவழ்கிறது. ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
Profile Image for Dhulkarnain.
81 reviews2 followers
March 8, 2023
தமிழ் மொழி பெயர்ப்பில் இன்னும் சற்று கூடுதல் கவனத்தை மொழிபெயர்ப்பாளர் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Profile Image for Prakash Murugan.
14 reviews1 follower
January 3, 2023
நா 250 வருசம் முன்னாடி பொறந்து இருந்தா என்னோட வாழ்வு இவ்வளவு சௌகரியமா இருந்து இருக்காது..

எந்த வெள்ளைகாரன் கிட்ட கசையடி வாங்கிட்டு ஒரு கால் வெட்டுப்பட்டு என்னோட குடும்பம் ஆளுக்கொரு வெள்ளைக்காரன் கிட்ட விக்கப்பட்டு திரும்ப பாக்கக்கூட முடியமா வெள்ளைக்காரனுக்கு வேலையும் செஞ்சி செத்துப் போயிருப்பன் தெரியாது..

இதுல சுவாரசியம் என்னனா கருப்பர்கள் விடுவித்தது இன்னோரு கருப்பர்
ஆப்ரகாம் லிங்கன் , அவரு எப்படி இந்த வெள்ளைக்காரனுங்க மத்தில ஜனாதிபதி வரைக்கும் போனாருங்கரது படிக்கனும்..

இந்த புத்தகத்தில் முதல் 100 பக்கங்கள் போதும் கருப்பர்களின் வலி அறிய

என்னால் எளிதில் கடந்து செல்ல முடியாத பக்கங்கள்...
Profile Image for Karthikeyan Radha.
26 reviews1 follower
February 12, 2025
இந்நூல் ஆங்கிலத்தில் Roots என்ற தலைப்பில் வெளிவந்து மக்களிடம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆங்கிலத்தில் தொலைக்காட்சி தொடர்களாகவும் இந்நாவல் வெளிவந்துள்ளது. தமிழில் வேர்கள் மற்றும் ஏழு தலைமுறைகள் என்ற தலைப்பில் மொழிப் பெயற்கப்பட்டுள்ளது.

அமரிக்க கடற்படையில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஒரு கருப்பின மனிதர்தான் இப்புத்தகத்தின் ஆசிரியர். அவர் குடுப்பத்தில், உறவுகள் ஒன்றுகூடி தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அவர்களின் வரலாற்றை பேசிக்கொள்வது வழக்கம். அக்கதைகளையும், அவர்களின் முன்னோர்களால் அடுத்த சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட சில ஆப்பிரிக்க சொற்களையும் கொண்டு அவர் தன் குடும்பத்தின் வரலாற்றை ஆராய்கிறார். 12 வருட கால ஆராய்ச்சியின் வெளிப்பாடாக தனது தாத்தனுக்கு தாத்தன் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் காலத்திலிருந்து (1750) முதல் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை உள்ள தன் உறவுகளை இணைத்து இந்நாவலை எழுதியிருக்கிறார்.

17ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் பிறந்து தாய் தந்தையருடனும் உறவுகளுடனும் ஆரோக்கியமாக வளர்ந்த ஒரு கருப்பின ஆண்மகன், தன் 16 வது வயதில் வெள்ளையர்களால் அமரிக்காவிற்கு கடத்தப்பட்டு ஒரு பண்னையில் அடிமையாக விற்கப்படுகிறான்.
அங்கிருந்து தொடங்கி அவன் மூலமாக கருப்பின மக்களின் வாழ்வியல் அமரிக்காவில் எவ்வாறு இருந்தது என்று ஒவ்வொரு தலைமுறையாக அவர்களின் வாழ்க்கையையும் வலியையும் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.

முற்காலத்தில் ஆடு மாடுகளின் எண்ணிக்கை கொண்டு ஒரு குடும்பத்தின் செல்வம் கணிப்கப்படுவது போல, வெள்ளையர்களின் பண்னைகளில் வேளை செய்யும் அடிமைகளின் எண்ணிக்கை கொண்டு அவர்களின் வசதி கணிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு அடிமையின் பெயருக்கு பின்னாலும் அவர்களின் உரிமையாளரான வெள்ளையர்களின் பெயர் சேர்க்கப்படுகிறது. வருமையோ அல்லது சந்தை மதிப்பு உயர்ந்தாலோ அவர்களை விற்கிறார்கள். ஆகையால் கருப்பின மக்கள் குடும்பமாக சேர்ந்து வாழ்வது என்பது அவர்களின் அதிர்ஷ்ட்டத்தை பொறுத்தது தான்.

எழுதப் படிக்க கற்றுக்கொள்ளக் கூடாது, வெள்ளையர்களின் கண்களை பார்த்து பேசக்கூடாது, தப்பியோடி மாட்டிக்கொண்டால் கிடைக்கும் தண்டனைக்கு செத்தே போய்விடலாம்.
தன் வாழ்க்கை முழுக்க அடிமை வேளை செய்து இறந்து போன அடிமைகளை, வாசிக்கையில் நம்மால் பார்க்க முடிகிறது.

தொழில் கற்றுக்கொண்டு சம்பாதிக்கும் அடிமையின் விலை அதிகமாம். அவர்கள் பணம் சேர்த்து வைத்து அவர்களின் சந்தை விலைய உரிமையாளருக்கு கொடுத்து விடுதலை பெறலாம். அவ்வளவு தொகையை சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல.

இறுதியில் ஆப்ரகாம் லிங்கன் அமரிக்க கருப்பின மக்களுக்கு விடுதலை அளிக்கிறார்.

இன்னும் இவ்வடிமைத்தனம் வேறு விதத்தில் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. கடண் அட்டை, மாதத்தவணை, கந்து வட்டி, வாகனக் கடன் போன்ற பெயர்களில்.

உண்மையோ கற்பணையொ, ஏழு தலைமுறைகளுக்கு முன்னால் சென்று தன் முன்னோர்களின் வாழ்க்கையை கற்பணை செய்யவே அற்புதமாக இருக்கிறது.
Profile Image for Dhanush K.
22 reviews1 follower
November 21, 2023
Roots : The Saga of an American Family Novel by Alex Haley - தமிழாக்கத்தின் சுருக்கப்பட்ட பதிப்பு.

நமக்கு பொதுவாக ஆப்பிரிக்கா என்றால் அங்குள்ள காடுகளும், வறட்சியில் வாழும் மக்களின் ஏழ்மை நிலை மட்டும் தான் நமக்கு ஞாபகம் வரும் …

அதேபோல் அமெரிக்கா என்றால் பணக்கார நாடு உலகப் புகழ் பெற்ற நாடு புதிய தொழில்நுட்பத்தின் பிறப்பிடம் என்ற பிம்பம் தான் நமக்கு தோன்றும் …

அந்த எண்ணங்களை முற்றிலும் தலைகீழாக புரட்டி போட்டு இன்றைய அமெரிக்க செல்வ செழிப்பிற்கு பல தலைமுறை கருப்பின மக்களின் ரத்த விதைகளே காரணம் என்ற உண்மையை தெளிவடைய செய்யும் இந்த ஏழு தலைமுறை…

ஆப்பிரிக்கா பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாகரிகமும், கட்டாயக் கல்வியும், தொடர்ந்து பின்பற்றப்பட்ட கலாச்சாரமும் கொண்டிருந்தது.இவை அனைத்தும் அமெரிக்க வெள்ளையர்களின் இன வெறியாலும் அடிமைத்தனத்தினாலே வேரோடு அழிக்கப்பட்டது.

இந்த புத்தகத்தின் முழுமையான தமிழாக்கம் “வேர்கள்” என்ற என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

(முன்னுரையில் இருந்து )

ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பு அடிமைகளை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்குக் கொண்டு வருவது கி.பி. 1619 இல் துவங்கியது. முதலில் இருபது பேரோடு மட்டுமே ஆரம்பமான இந்தக் கொடுமை கி.பி.1810 ஆம் ஆண்டில் பத்து லட்சம் எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. அவர்களில் பெரும்பாலானோர் பலாத்காரமாக இழுத்து வரப்பட்டவர்களே! கருப்பு அடிமைகள் இல்லாமல் வெள்ளையர்களுக்குக் காலம் போகாத நிலை ஏற்பட்டுவிட்டது. கருப்புத் தாய்மார்களின் தாய்ப்பால் பருகி வெள்ளைக் குழந்தைகள் வளர்ந்தனர். கருப்பர்களின் இரத்தத்தாலும், வேர்வையாலும், உழைப்பாலும் வெள்ளையர்களின் வயல்கள் செழித்துக் குலுங்கின. வெள்ளையர் கருப்பரைக் கொண்டு லாப வேட்டையாடினர். கருப்புப் பெண்களையும், ஆண்களையும் பயன்படுத்திக்கொண்டு தமது காம இச்சையை நிறைவேற்றிக் கொண்டனர். ஆனால் தமது உல்லாச வாழ்க்கைக்காக ஓடாய் உழைத்துத் தேய்ந்துபோன கருப்பு இன மக்களை வெள்ளையர் மனிதப் பிறவிகளாகக்கூடக் கருதியதில்லை. அதற்கு மாறாக தம்மையே நாகரிகமானவர்கள், பண்பாடுடையோர் என்று பச்சைப் பொய் சொல்லிக் கொண்டனர்.
Profile Image for MURALI S.
7 reviews5 followers
December 4, 2023
ஆப்பிரிக்கா என்றால் இருண்ட கண்டம்! அங்குள்ள மக்கள் மிருகங்களிடையே நடமாடும் காட்டு மிராண்டிகள்! அவர்கள் நாகரிகமோ, கலாச்சாரமோ, வரலாறோ இல்லாதவர்கள்! அமெரிக்கா சுதந்திரத்தின் சொர்க்கம்! வீரசாகசமிக்கோரின் பிறப்பிடம்!

இவைதான் வெற்றி கொண்டவர்கள் எழுதி வைத்த சரித்திரப் புரட்டுகள்! உலகை அறியாமை இருளிலே மூழ்கடித்த பொய்யான எழுத்துகள்!

மனித இன வரலாற்றில் கல்லாலான கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்திய திறமை இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்கர்களுக்குத் தெரியும் என்பதும்; ஆசியாவில் கண்டு பிடிக்கப்பட்ட நெருப்பை, ஐரோப்பியர் அறிவதற்கு ஒன்றரை லட்சம் வருடங்கள் பிடித்தன என்பதையும் நாம் அறியும்போது வியப்பு மேலிடுகிறதல்லவா!பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவின் சிற்றூர் களிலும் சிறந்த ஊராட்சி அமைப்பு நிலவியது என்ற உண்மையும், ஒவ்வொரு சிறுவனும் கட்டாயக் கல்வியும், உடற்பயிற்சியும் பெற்று வந்தான் என்ற தகவலும், வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகே ஆப்பிரிக்காவின் கலாச்சார வரலாற்றில் இருண்ட யுகம் ஆரம்ப மாயிற்று என்பதையும் நாம் தெரிந்து கொள்ளும்போது அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.

வெற்றி கொண்டவர்களே சரித்திரம் எழுதும் சம்பிரதாயத்தை உடைத்தெறிவதற்காக, இந்த என் மக்களின் கதை உதவிடும் என்று நம்புகிறேன். - Alex
Profile Image for Udhaya Raj.
109 reviews2 followers
April 26, 2025
I cannot describe in words the impact I had upon myself when I finished reading this entire book.
Because even the most terrifying scenes I've seen in movies have scared me, but the many lines and situations in the book have left me speechless.
While reading the book, I clearly understood that the British empire we see today was not created by their labor, but only by their power.
The book clearly shows how bad the British were and how they took advantage of the circumstances they faced to oppress people.
The book shows how important the liberation of a people is to them and how much they need it.
Freedom was a desire from the first generation, passed down through each generation, and finally attained by the people after the seventh generation.
Therefore, the liberation achieved here was achieved through the labor and blood of all the six generations above.
Through the situations I encounter and read about in books, I can carry different emotions with me in different situations.
All people who value and respect others as fellow human beings should read the book.
Profile Image for அன்புடன் பாரதி.
11 reviews2 followers
March 19, 2023
ஏழு தலைமுறைகள் 📖📚

✍️ அலெக்ஸ் ஹேலி

தமிழில் - ஏ.ஜி.எத்திராஜூலு
சிந்தன் புக்ஸ்
₹300
304 பக்கங்கள்
#Roots

ஏழு தலைமுறைகள் 📖📚

முந்தா நேத்துதான்
படிச்சி
முடிச்சேன்.

மூடிவைத்து திறந்து
இப்டியேதான் படிக்க
முடிந்தது.

அடுத்த புத்தகத்தை
உடனே எடுத்துடுவேன்.

இரண்டு நாளா முடியலை.

ஆப்பிரிக்க அடிமைகளின்
துயரங்கள்
வேதனைகள்
என
சோகங்கள் நிறைந்தது.

இப்புத்தகம் Trailer மாதிரிதான்

#வேர்கள் தான்
முழுமையான புத்தகம்..
ஏழு தலைமுறைகள்
சுருக்கமாக சொல்லவந்த
புத்தகம்..


16ஆம் நூற்றாண்டில்
துவங்குகிறது
இக்கதை

300 பக்கங்களில்
200 பக்கங்கள்
குண்ட்டா என்ற ஆப்பிரிக்க அடிமை பற்றிய கதை.

கதையின் முதல் தலைமுறை அவர்தான்.

அவரின் தாய்,தந்தையர்
இருந்தாலும் இவர்தான்
இக்கதையின் மையம்.

அமெரிக்காவிற்கு
கடத்தப்பட்ட ஆப்பிரிக்கா
அடிமை..
குண்ட்டாவின் வாழ்க்கை


இதே புத்தகத்தை
அதிக பக்கங்களுடன்,
900 பக்கங்களுக்கு மேல்
எதிர் வெளியீடு
வெளியிட்டுள்ளது..
#வேர்கள்


ஏழு தலைமுறைகள்
ஆப்பிரிக்க அடிமைகளின் துயர் மிகுந்த பக்கங்கள்..


19-03-2023
Profile Image for Dinoji Mahendradas.
7 reviews3 followers
August 21, 2021
200 வருட வாழ்க்கையை வெறும் 300 பக்கங்களில் எவ்வளவு அழகாக கூற முடியுமோ அவ்வளவு அழகாக இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. கறுப்பினத்தவர் எத்தனை கொடுமைகளை அனுபவித்தனர் என்பதை புலம் போட்டுக் காட்டும் ஒரு சிறந்த படைப்பு. இதைப் படிக்கும் போது இதன் எழுத்துக்கள் கண்முன் காட்சிகளாய் விரிந்தமையே இப் படைப்பின் வெற்றி. இறப்பதற்குள் அனைவரும் ஒரு தடவையேனும் படித்து விட வேண்டிய புத்தகம் 😊
Profile Image for Maari Veer Cinn.
9 reviews
September 20, 2021
கருப்பு அடிமைகளின் தோலை உறித்து கசிந்த இரத்தம் காய்ந்து வரட்டியாய் ஒட்டியிருந்த உடம்பில் உப்புத்தண்ணீரை ஊற்றி நார் கொண்டு சுரண்டி வழித்தெடுக்கும் வேதனையெல்லாம் பின்னாலில் சுதந்திரம் அறிவிக்கும் போது நமக்கும் தொற்றிக்கொள்கிறது கண்ணீர்களால் குளிர்ந்த அந்த சுதந்திர காற்று!
ஏழு தலைமுறைகளின் வாழ்வை ஒரு புத்தகத்திற்குள் நம்மை கிடத்திவிடுகிறார் எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி!
Profile Image for C.Canessane .
13 reviews
January 12, 2026
இந்த புத்தகம் நமக்குச் சொல்லும் மிகப்பெரிய பாடம் "நம்பிக்கை". எத்தனை இன்னல்கள் வந்தாலும், தான் யார் என்ற பெருமிதத்தை இழக்காமல் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது.
"ஒரு மனிதனின் உடலை அடிமைப்படுத்தலாம், ஆனால் அவனது ஆன்மாவையும் நினைவுகளையும் யாராலும் அடிமைப்படுத்த முடியாது." - இதுதான் இந்த நாவலின் மையப்புள்ளி.
1 review
June 20, 2020
Super
This entire review has been hidden because of spoilers.
1 review
Want to read
September 29, 2022
INTRESTING
This entire review has been hidden because of spoilers.
1 review
Read
May 22, 2024
Good book...
This entire review has been hidden because of spoilers.
1 review
November 24, 2024
Excellent book.. How mouth of word spereading across generation is an example in this book.. My heart felling moments when people move in ship from Africa to America
Profile Image for Maharadan.
2 reviews
October 5, 2024
பல ஆண்டுகளாக அடிமையின் உச்சத்தை அடைந்த * கறுப்பிண மக்களை * பற்றிய தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் இது.

இதை ஒரு முறையாவது படி
14 reviews
July 15, 2023
இதுவரையான வாசிப்பு அனுபவத்திலே என்னை மிகவும் உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தி நாவல் இது. சுதந்திர காற்று இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிருக்கும் கிடைக்க வேண்டிய முக்கியமான ஒன்று. இந்த நாவலின் முழு தொகுப்பு வாசிக்க மிகுந்த ஆவல் கொண்டுள்ளேன்
Displaying 1 - 30 of 31 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.