வரலாற்றில் இடம்பெற்று, வரலாறாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இடங்கள் பல உள்ளன. ஆனால் அந்த இடங்களெல்லாம் வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடம், இரண்டு நூற்றாண்டுகளாக நீண்ட வரலாற்றைத் தாங்கிக்கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆமாம். அதுதான் முல்லைப் பெரியாறு அணை. பென்னிகுக் எனும் பெரும் மனிதம் கொண்ட மாமனிதனின் விடா முயற்சியாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பாலும் உருவான முல்லைப் பெரியாறு அணை கட்டுமானம், சாதாரணமாக நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல என்பதை எழுத்தாளர் அ.வெண்ணிலா தன் விறுவிறு எழுத்தால் விவரித்து ஆனந்த விகடனில் 122 வாரங்கள் எழுதினா