நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் அல்ல... பக்தி இலக்கியத் துறையிலும் சாதனை படைத்து ‘காவியக் கவிஞர்’ என புகழ் மாலை சூட்டப்பட்டவர். அவதார புருஷன், கிருஷ்ண விஜயம், ராமானுஜ காவியம் போன்ற படைப்புகள் வாலியின் வலிமை! கவிதை, கட்டுரை, பேச்சு, நடிப்பு, பாட்டு, ஓவியம் என பன்முகத்தன்மை கொண்ட கவிஞர் வாலி, தமிழில் புதிய சொல்லாட்சியை ஏற்படுத்திய கலை வித்தகர். திரைத் துறையில் பாடல் எழுதிய அனுபவங்களையும், அவருடன் பழகிய நெஞ்சுக்கினிய நேசர்களையும், அந்தரங்கமான நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடியே அவர் சொல்லும் வார்த்தைகள் மனதை வசீகரிக்கின்றன! சைக்கிளில் ‘குரங்குபெடல்’ போட்டது, பள்ளிப் பருவத்தில் நாடகம் போட்டது, பத்திரிகையில் கவிதை எழுதியது, திருச்சி வானொலியில் பணியாற்றியது, கம்பன் கழகம் கவியரங்கில் தலைமை தாங்கியது, டி.எம்.எஸ்., சந்திப்பால் சென்னைக்கு வந்து, நாகேஷ் உடன் சேர்ந்து சினிமாவில் போராடிக்கொண்டு இருந்தது... என அத்தனை நிகழ்வுகளையும் மிகுந்த நினைவாற்றலோடு இங்கு பதிவுசெய்திருக்கிறார் வாலி. அவர் பாடல்கள் எழுதிய சம்பவங்களைச் சொல்லும்போது, நம் நினைவுகளும் அந்தந்தக் காலகட்டத்துக்கு விரைகிறது. 50 அத்தியாயங்களில் 80 ஆண்டு நினைவுகளைப் பதிவுசெய்து இருக்கிறார். ‘அனுபவமே அழியாத பெரும் சொத்து; நினைவே சுகம்!’ என்பதை தன் எழுத்தில் நிரூபித்திருக்கிறார் கவிஞர் வாலி.
Tiruchirapalli Srinivasan Rangarajan, (Tamil: திருச்சிராப்பள்ளி ஶ்ரீனிவாசன் ரங்கராஜன்) professionally credited by his pseudonym Vaali (Tamil: வாலி) was an Indian poet who has the record for writing the most songs in Tamil cinema. He is also recognised for a five-decade long association in the Tamil film industry and has written over 15,000 songs. He acted in a number of films, including Sathya, Hey Ram, Paarthale Paravasam and Poikkal Kudhirai. He was honoured by the Government of India with the Padma Shri, India's fourth highest civilian honour in 2007.
திருப்பத்துறை ஈன்றெடுத்த திருச்செல்வன் தான் இந்த ரங்கராஜன். செல்லமாக நமக்கு - வாலி. மகா கவிஞன். கவிதை, கட்டுரை, பாட்டு, ஓவியம் என்று பலமுகம் கொண்ட பன்முக கலைஞன். எம்ஜிஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை பல தலைமுறைகளாக வார்த்தைகளால் வர்ணஜாலம் செய்து நமக்கு அளித்த பாடல்கள் ஆயிரமாயிரம்.
திரைத்துறையில் தம்முடன் பழகிய அன்பு நேசங்களையும், பாடல் எழுதிய அனுபவங்களையும், சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் கோர்த்த புத்தகமே "நினைவு நாடாக்கள்". கண்ணதாசனுக்கு ஒரு வனவாசம் எப்படியோ, நினைவு நாடாக்கள் வாலிக்கு. 50 அத்தியாயங்களில் 80 ஆண்டுகால நினைவுகளை பதிவு செய்துள்ளார் வாலி.
T.M சௌந்தராஜன் - வாலியின் நட்புறவு : "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்" என்ற பாடலின் குரலுக்கு சொந்தக்காரர் T.M சௌந்தராஜன் என்றால், வரிக்கு சொந்தக்காரர் வாலி. இப்படி பல பாடல்கள் எழுதி, அதை தன் வெண்கல குரலால் உயிரூட்டியவர் TMS.
வாலி - கண்ணதாசன் இருவருக்கும் நடந்த ஒரு சுவாரஸ்யமான சண்டை. ஒரு பாடலுக்காக!.. எங்க வீடு பிள்ளையில், "அவனொரு நிலவோ" என்ற பாடல் டூயட் பாடலாக இல்லாத காரணத்தால் இடம்பெறவில்லை. கண்ணதாசன் "நிலவை ஆண்பாலாக சொல்லக்கூடாது, அது பெண்பால்" என்றார். அதற்கு வாலி புராண ரீதியாக "நவகிரகப்படி சந்திரன் ஆண். சந்திரனின் மனைவி ரோகிணி" என்றும், விஞ்ஞான ரீதியாக "மலர்தல் பெண்ணுக்கு உரியது. அல்லி மலர்கிறது, சந்திரனைக் கண்டு. அப்போ நிலவு ஆண்பால் தானே" என்பார் வாலி. புல்லரிக்கும் இடம் இது!
முலை என்ற வார்த்தை, ஒரு பாடல் வரியில் வருவதால், அது ஆபாசம் என்று தணிக்கைக் குழு ஆட்சேபனை தெரிவிக்க, முலையை பற்றி - ஆண்டாளும், வள்ளுவனும், கம்பனும், பாரதியும் பாடியுள்ளார்கள் என்று உதாரணங்கள் வழங்குவார். ஆழ்வார் பாசுரத்தில் யசோதை, "கண்ணா, என் கார்முகிலே! கடல் வண்ணா! காவலனே! முலை உணாயே" என்று கண்ணனை விளிக்கிறாள். இப்படி பல சுவாரஸ்யமான தகவல் இந்த புத்தகத்தில் ஏராளம்.
T.M. சௌந்தராஜன், கண்ணதாசன், கலைஞர், எம்.ஜி.ஆர், M.S. சுப்புலட்சுமி, பாலச்சந்தர், கமல், ரஜினி, பாரதிராஜா, சுஜாதா, கங்கை அமரன், இளையராஜா, A.R.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என்று இவர் சேர்த்து வைத்த சொத்துக்கள் ஏராளம்.
குறை இல்லாத வாழ்க்கை இல்லை. இருந்தும் குறையொன்றும் இல்லை என்று அடக்கமாகும் வரை அடக்கமாக வாழ்ந்தார் கவியரசன் வாலி.
எம்ஜியார் காலம் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை பலதலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய பெருமை “வாலிபக் கவிஞர்” என்றழைக்கபடும் வாலி அவர்களுக்கு உண்டு. நடிகர்களை புகழ்ந்து பாடும் அறிமுகப்பாடல் என்றாலும் சரி, கவித்துவமான காதல் பாடல் என்றாலும் சரி, அர்த்தம் பொதிந்த தத்துவப் பாடல் என்றாலும் சரி, இரட்டை அர்த்தம் தெறிக்கும் பாடல் என்றாலும் சரி எல்லாவற்றிலும் தன்னுடைய முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர் வாலி அவர்கள். அவருடைய முற்றுமுழுதான தன் வரலாற்று புத்தகமல்ல இந்த “நினைவு நாடாக்கள்”. ஆனால் அவர் கடந்து வந்த பாதையையும் அந்த பாதையில் அவருக்கு விளக்காய் இருந்து வெளிச்சம் காட்டியவர்களையும் நினைவு கூர்ந்திருக்கிறார்.
உரைநடை தான் ஆனால் எதுகை மோனையோடு கவிதையை போல இருக்கின்றன வரிகள். ஏராளமான புதிய தமிழ் வார்த்தைகளை தெரிந்து கொண்டேன். தமிழின் மிக முக்கியமான காப்பியங்களை வாசிக்க வேண்டும் என தோன்றும் அளவிற்கு தமிழ் மீது மிகப்பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது இந்த புத்தகம்.
புத்தகம் முழுக்க வார்த்தை விளையாட்டில் புகுந்து விளையாடியிருக்கிறார். உதாரணமாக “நாகூர் ஹனீபாவின் நா கூர்” என எழுதி இருந்தார். அதன் அர்த்ததை உணர்ந்துக் கொள்ள சில நொடிகள் பிடித்தன. எழுதும் போது மட்டுமல்ல பேசும் போதும் இவர் இப்படிதான் என்பதை வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் நாகேஷ் அவர்களோடு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சொல்லியிருக்கிறார் . “நாகேஷ்.. நம்ம ரெண்டு பேர்க்கிட்டயும் நோ கேஷ்..” என்ற வாலி சொல்ல அதை ரசித்த நாகேஷ் “டேய் வாலி.. இந்த மாதிரி வார்த்தை விளையாட்டுதாண்டா சினிமா பாட்டு எழுதத் தேவை! Keep it up” என்று பாராட்டியிருக்கிறார். கண்ணதாசனுடன் நிகழந்த பல சம்பங்களை பகிர்ந்திருக்கிறார். உதாரணமாக வெள்ளி விழா சுதந்திர தின இரவினை ஹோட்டல் ஒன்றில் கொண்டாட வாலி அவர்களை கண்ணதாசன் அழைக்க, கொண்டாட்டத்தின் முடிவில் வாலி அவர்கள் ஒரு பெண்ணுடன் ஓர் அறைக்குள் சென்று கதவை தாழிடும் போது ஹோட்டல் சிப்பந்தி ஒருவர் கண்ணதாசனிடம், “அண்ணே! வாலி நல்ல ஆளா இருந்தாக்கூட தொழில்ல உங்களுக்கு எதிர்க்கடை விரிச்சவரு! இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி – இத்தனாம் நெம்பர் ரூமை ரெய்டு பண்ணுங்கன்னு வெளில இருந்து போலீசுக்கு ஒரு இன்பார்மர் மாதிரி ஃபோன் போடுறேண்ணே! வாலி மாட்டுவாரு. பேப்பர்ல வரும். அது எம்ஜியாரையும் தர்மசங்கடாத்துல வைக்கும்.” என சொல்கிறார். அதை கேட்ட கண்ணதாசன் அந்த ஆளின் கன்னத்தில் அறைந்து “நான் கூப்டு வந்திருக்கிறான். என்னை நம்பி வந்தவனை, போலீசுல புடிச்சிக் கொடுக்கச் சொல்றியா? என்னை அவ்வளவு கேவலமானவன்னு நினைச்சே? அந்த ஆளு எப்ப ரூமே விட்டு வெளிய வர்றான்னோ அப்ப ஒழுங்கா கார்ல ஏத்தி அனுப்பு” எனக் கூறிவிட்டு சென்று விடுகிறார். சில நொடிகளிலேயே அறைக் கதவை திறந்து வெளியே வரும் வாலி கண்கள் கலங்கியபடி காரில் ஏறி வீடு சேர்கிறார். கண்ணதாசன் நினைத்திருந்தால் வாலி அவர்களை அசிங்கப்படுத்தியிருக்க முடியும். அப்படி செய்யாத அவரின் மேன்மை குணத்தை “அரி ஒரு நாளும் நரியாகாது; நெறி ஒரு நாளும் வெறியாகாது” என்கிறார் வாலி.
இதுபோல பலருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வெகு சுவாரசியமான அவருக்கே உரித்தான வார்த்தை விளையாட்டுக்கள் நிறைந்த மொழிநடையில் எழுதியிருக்கிறார். தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை இப்படி வெளிப்படையாக எழுதுவதற்கு கண்ணதாசனின் “வனவாசம்” புத்தகமே தனக்கு கையேடு என்கிறார்.
Vaali is a celebrated Tamil poet in the modern era, next to Kannadhasan. His eloquence and the mastery of the language is amazing. In this book, he recollects important events in his life, the people who helped him in his life and many other interesting personality he met and who made an impact in his life. The accounts are very vivid and many incidents portray his humility. But the use of the language is very beautiful and shows the command of the language he had. Very interesting to know about the personalities he has described, some popular and some unknown to the general public, but they were good in their fields. Interesting and a wonderful read!