என்னுரை- நாகேந்திர பாரதியின் கட்டுரைகள் ---------------------------------------------------------------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.
எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் குமுதம், கல்கி, குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. எனது கவிதைகள் ,சிறுகதைகள் பல தொகுப்புகளாக அமேசானில் கிண்டில் வெளியீடாக வந்துள்ளன.
இது எனது கட்டுரைகள் தொகுப்பின் ஆறாவது புத்தகம். நகைச்சுவைக் கட்டுரைகளும் மதிப்புரைக் கட்டுரைகளும் கலந்து உள்ள கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளதால் இதற்குக் ' கட்டுரைக் கதம்பம் ' என்று தலைப்பிட்டுள்ளேன்.