கப்பற் பொறியியல் கல்வியில் தேர்ச்சி பெற்ற இவர் ‘நரசய்யா’ என அனைவராலும் அன்பாக அழைக்கப்பெறும் , ஒரிசா மாநிலத்தின், பெரகாம்பூர் என்னும் இடத்தில் பிறந்தவரான, காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா என்பவர். இந்திய கடற்படை கப்பல்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பேறு பெற்றவர். அதன்பின் ஐ.என்.எஸ்.விக்ராந்த் என்ற விமானந்தாங்கிக் கப்பலின் விமானத் தளத்தின் தலைவராக (ஃபிளைட் டெக் சீஃப்) பணியாற்றினார். பிறகு வணிகக் கப்பலில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இறுதியாக விசாகப்பட்டினத் துறைமுகத்தில் 1991ஆம் ஆண்டில் தலைமைப் பொறியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். துறைமுகப் பணியின் இடையில் வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்கவேண்டி கடற்படையால் அழைக்கப்பட்டு அதில் சிற&