மேலிருந்து நர்மதா ஆண்ட்டி என்னை சைகையால் அழைத்தாள். “அவளிடம் கேட்கலாமா என்று கூட யோசனை வந்தது. ஆனால் தப்பாக நினைத்துவிடுவாளோ என்று பேசாமல் இருந்துவிட்டேன். ஆம் அவளது அடர்த்தியான கேசக் கற்றையை எண்ணி சங்கடம் வந்து விட்டது. ஆனால் ஏன் அவள் என்னை அழைக்க வேண்டும்? அதுவும் இந்த கொட்டும் மழையில்... நான் அவளிடம் சைகையில் ‘என்ன?’ என்பது போலக் கேட்டேன். அவள் கண்களால் மழையைக் காட்டி, ‘குளிக்க வறியா?’ என்பது போலக் கேட்டாள். நான் ‘வரவில்லை’ என்பது போல சொல்லிவிட்டேன். ‘ஓம்மாப்ளைய குளிக்க கூப்புட வேண்டியதானே? அந்த எருமமாட்டுப் பயலுக்கு என்ன கொள்ளையோ? நானே இப்பத்தான் சிக்குன் குனியா வந்து குறுக்கு நிமுத்த முடியாம செத்து சீரழிஞ்சி கெடக்கேன்! மழைல நனையணுமாமே செவத்த