Jump to ratings and reviews
Rate this book

ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]

Rate this book
ஆலயங்கள் எவருடையவை என்னும் விவாதம் இன்று எழுந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் அவை இருக்கவேண்டுமா? பக்தர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா? பக்தர்கள் என்பவர்கள் எவர்? பக்தர்கள் ஆலயங்களை வெறும் வழிபாட்டிடங்களாக எண்ணுவது சரியா? வழிபாட்டின் பொருட்டு அவற்றை மாற்றியமைக்க அவர்களுக்கு உரிமை உண்டா? நம் பேராலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் மட்டும்தானா? அவை பண்பாட்டு அடையாளங்களும் சரித்திரச் சின்னங்களும் இல்லையா? ஆலயங்களில் எந்த மாற்றத்தையும் செய்யலாகாதா? பழமையிலேயே நின்றுவிடவேண்டுமா? செய்யவேண்டுமென்றால் எவர் செய்யலாம்? இக்கேள்விகளுக்கான பதில்கள் அடங்கியது இந்நூல்.

133 pages, Paperback

First published September 1, 2021

2 people are currently reading
10 people want to read

About the author

Jeyamohan

211 books855 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (37%)
4 stars
4 (50%)
3 stars
1 (12%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Balaji Asokan.
35 reviews4 followers
May 18, 2025
Good essays on various aspects of temples, destruction of arts in temples, ownership of temples.
254 reviews34 followers
November 25, 2024
புத்தகம் : ஆலயம் எவருடையது
எழுத்தாளர் : ஜெயமோகன்
பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம்
பக்கங்கள் : 133



🔆 ஆலயங்கள் சார்ந்து ஜெயமோகனுக்கு வந்த கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பே இந்த புத்தகம்.

🔆 பல நூறு வருடங்கள் கழித்தும் இன்றும் பிரம்மாண்டமாக நிற்கும் பெருவுடையார் கோயிலை காண சென்றபோது, அடைந்த மகிழ்ச்சியை விட வருத்தமே அதிகம் . வெளிப்பிரகாரத்தை சுற்றி இருக்கும் லிங்கங்களுக்கு பின்னால் நமது மக்கள் அவர்களின் பெயரை பதிவு செய்துள்ளனர் . அத்தனை பிரம்மாண்டமான படைப்பிற்கு நாம் அளிக்கும் மரியாதை இது தான், இது அபத்தத்தின் உச்சம்

🔆 ஆலய பராமரிப்பு என்னும் பெயரில் அறிய சிலைகள் சிதைக்கப்படுவதை கண்முன்னே காணலாம். இன்னும் பல தகவல்களை இந்த புத்தகத்தின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.

🔆 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் இது 11 ஆவது புத்தகம்.



புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.