பனி பொழிந்த கனல் Episodes 12, 13 & 14 ஒரு கிரீச்சிடலுடன் திறந்த கதவிற்கு அப்பால்… சாய்வு நாற்காலியில்,
சோகமே உருவாய்… சுருக்கமே உடலாய்… ஒருவர்!
தேஜன் திகைத்துப் போனான்.
சோர்வாய்… தளர்வாய்… அங்கிருந்த நபர்…. ரெங்கன்!
அனுதினமும் அவன் தேடும் தந்தை ரெங்கன்!
தும்பை பூ தலையும்… தளர்ந்த உடலும்… சுருங்கிய தோலும்… இடுங்கிய கண்ணும்… என்றிருந்தவரை, பார்த்த மாத்திரத்தில், இன்னார் அவர் என எளிதில் அடையாளம் கண்டு கொண்டான்.
முதுமை கொடுத்த உருமாற்றம் எல்லாம் அவனுக்கொரு பொருட்டாகவே இல்லை! இரும்பில் அடித்தது போல நெஞ்சில் பதிந்த உருவம் அது. அதை மறைத்து வைக்க முடியாமல் முதுமையின் அத்தனை முத்திரைகளும் தேஜனிடம் தோற்றுப் போயின.
பார்க்க மாட்டோமா?!... பேச மாட்டோமா?!... என தவித்து நிதம் தேடிய தந்தையை… இவ்விடம் கண்ட தேஜன், ஸ்தம்பித்து நின்றான்.
தந்தை!
ஜனத்திரளில் ஒரு புள்ளியாய், தேய்ந்து போன தந்தை!
ஜன சமுத்திரத்துள் ஒரு துளியாய், அவனை தொலைத்துப் போன தந்தை!
ஜன சஞ்சாரத்துள் தினம் அவரை தேட விட்டு, தொலைந்து போன தந்தை!
மன சாம்ராஜ்ஜியத்துள் அவனை தள்ளி வைத்து, தவிக்க விட்ட தந்தை!
தினம் சஞ்சலத்தில் அவனை தவிக்க விட்டு, தள்ளி நின்ற தந்தை!
"அப்பா!!" வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கிக் கொண்டு வெறித்தான்.
~************~
பனி பொழிந்த கனல்! பனி பொழியுமா? கனல் அமிழுமா? பனி கனலை பொழியுமா?! கனல் பனியை பொழியுமா?! கனலென அவன்; பனியென அவள்; காலம் சொல்லும் காதல் கதை.
இருள் மறைத்த நிழல் தந்த "நளந்தன் - மிதுனா" போல நதி தேடிய கடல் தந்த "நிரஞ்சன் - மதுரா" போல பூ தொட்ட புயல் தந்த "சயந்தன் - மகிளா" போல வான் மேவிய முகில் தந்த "மதுவந்தன் - மஞ்சிரா" போல பனி பொழிந்த கனல் தரும் "தேஜேந்திரன் - மயிலா" கூட உங்கள் நெஞ்சில் குடி கொள்ள காத்திருக்கிறார்கள்.