ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது. இந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்-களைப்பற்றிப் பேசுகிறது. விளக்கங்களை அளிக்கிறது. ஒரு நூலை எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது. இரண்டாம் பகுதி, நவீனத் தமிழிலக்கிய வரலாறை அறிமுகப்படுத்துகிறது. மூன்றாம் பகுதி, நவீனத் தமிழிலக்கியத்தை வாசிப்பதற்கான விரிவான பரிந்துரைகள் அடங்கியது. சிறந்த நாவல்கள், சிறந்த சிறுகதைகள், சிறந்த கவிதைகள், சிறந்த கட்டுரை நூல்கள் ஆகியவற்றைப் பட்டியல் இடுகிறது. நான்காம் பகுதி, இலக்கிய இயக்கங்களையும் இலக்கியக் கொள்கை-களையும் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது. ஐந்தாம் பகுதியில், இலக்கிய வாசிப்புக்கு உதவக்கூடிய 200 இலக்கியக் கலைச் சொற்கள் விளக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ளன.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
' நவீன தமிழிலக்கிய அறிமுகம் ' - ஒரு அத்தியாவசியம். கட்டுரைத்தொகுப்பான இந்நூலை படித்தது, தமிழிலக்கியத்தில் பலவற்றைத் தெளிவுற காண ஒரு திறவுகோளாக இருக்கிறது.
இந்நூலில் ஜெயமோகன், ஒரு புத்தக வாசிப்பின் படிநிலைகள் என்னென்னவென்று விவரிப்பது தொடங்கி இலக்கியத்தின் அடிப்படைகள் மற்றும் அரசியல்கள் தாண்டி தமிழிலக்கிய வரலாற்றினை விரிவாக ஆராய்ந்து வகைப்படுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி, இலக்கிய இயக்கங்கள் கோட்பாடுகள் என இந்நூலின் கடைசி பாகமும் இலக்கியத்தின் ஆழமான பிரிவுகளை விவரித்துள்ளார்.
ஆரம்ப நிலை வாசகனான எனக்கு இதில் இணைந்திருக்கும் பல தகவல்கள், அகவொளியாக அமைந்துள்ளதென்று சொன்னால் அது மிகையாகாது.
தகவல்களை பரிமாறிவரும் தருணத்தில் அவரது விமர்சனங்களையும் தாண்டி எதிர்ப்படும், ஒரு சில சமூக கருத்துகள் தேவையற்றதாகப் பட்டது.
கலைச்சொற்கள், சிறுகதைகள், புதினங்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள் பட்டியல்கள் என பக்கங்கள் முழுதும் நிறைந்துள்ள இப்புத்தகம் நிச்சயம் பயனுள்ளதாகவே அமையும்.
அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் (FAQs) இதிலிருப்பதும் இதன் தனியம்சம்.
"படைப்பில் நாம் உழைப்பை செலுத்துவதே இல்லை. உண்மையான பிரச்சனை இதுவே."
"இலக்கியம் ஒரு கலை."
"கலை என்றால் என்ன? குறியீடுகளின் மூலம் உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்புபடுத்தும் வழிமுறை. ... மொழிக்குறியீடுகள் இலக்கியம் ஆகிறது. அக்குறியீடுகளை பொருள்கொள்ளும் பயிற்சி நமக்கு தேவை. "
குறிப்பு: இது வாசிப்பின் மூலமாக நான் கண்டடைந்த கருத்துக்களே ஒழிய புத்தக மதிப்புரை அல்ல, மேலும் இக்கடிதம் ஆங்கிலவழிக்கல்வி மூலமாக பள்ளி பயின்று தமிழிலக்கியத்தினுள் நுழையவிரும்பும் ஆரம்பநிலை வாசகர்களுக்கு உதவும் பொருட்டு எழுதப்பட்டது, ஏற்கனவே ஏதாவது ஒரு வழியில் தமிழிலக்கிய அறிமுகம் உள்ளவர்களுக்கு இக்கருத்துக்கள் பொறுத்தப்படாமல் போகலாம்.
இலக்கியம் என்றால் என்ன? தமிழிலக்கியத்தில் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது? அறிவியல், தத்துவம், வரலாறு போன்ற அறிவுத்துறைகளிலிருந்து இலக்கியம் எவ்வாறு வேறுபடுகிறது? கதைக்கும், சிறுகதைக்கும் , கவிதைக்கும், நாவலுக்கும் என்ன வேறுபாடு? இலக்கியத்திற்கும் கலைக்கும் என்ன தொடர்பு? ஒரு கலையை உணர்வதால் ஒருவர் அடையும் புரிதல்கள் எத்தகையது ? பொது வெளியில் நாம் சகஜமாக கேள்விப்படுவதுபோல் போல பாரதியார் கவிதைகள், திருக்குறள், கம்பராமாயணம், புராணக்கதைகள், நீதிபோதனை கதைகள் மட்டும் தான் தமிழிலக்கியமா? நவீனத் தமிழிலக்கியம் என்றால் என்ன? தமிழில் வாசிப்பதற்கு என்ன கிடைக்கும்? தமிழில் யாரெல்லாம் இலக்கியம் எழுதுகிறார்கள்? எங்கிருந்து வாசிக்க தொடங்குவது? தீவிர இலக்கிய சிந்தனைகள் தமிழில் உண்டா? போன்ற கேள்விகளுக்கும் மற்றும் பல ஆழமான தேடல்களுக்கும் இப்புத்தகம் விடை அளித்துள்ளது. தகவல்சுமை அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் கூட இப்புத்தகம் மூலம் கண்டடையும் நவீனத் தமிழிலக்கியம் பற்றிய உண்மைகளை இணையத்தில் எங்குமே கண்டடைடைய முடியாது என்பது இப்புத்தகத்தின் சிறப்பம்சம்.
தமிழிலக்கியம் என்பது நம் பள்ளிக்கல்வியில் பயின்றதைப்போன்று மனபாடச்செய்யுள், கோவலன் - கண்ணகி கதை, கோப்பெருஞ்சொழன் - பிசிராந்தியர் நட்பு, முல்லை - பாரி தேர், அகத்திணை - புறத்திணை, தேமா - புளிமா, தலைவன் - தலைவி, போர் வீரம் போன்றவற்றைப்பற்றி உரைப்பது (!) போன்ற எண்ணத்தையும், சொல்லப்போனால் பாடபுத்தகத்தையும் தொழில்சார் புத்தகங்களை மட்டுமே வாசித்து இருக்கும் அனைவருக்கும் பொதுவாக தமிழ் இலக்கியத்தின் மீது இருக்கும் ஒரு அபிப்ராயத்தை இப்புத்தகம் நேர்மாறாக மாற்றியமைக்கும். இன்று பள்ளி பயிலும் மாணாக்கர்ககளுக்கு தமிழிலக்கிய அறிமுகம் இருந்தாலும், அது பெரும்பாலும் பண்டைய இலக்கியமாகவே இருக்கிறது. நவீன தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்யவதில்லை. அப்படியே ஒருவர் தொடர்ந்து தமிழ் வாரஇதழ்கள் வாசித்தாலும் அதிலிருந்து கிடைக்கப்பெறுவது பொதுவாக தொடர்கதைகள் அல்லது மக்களுக்கு சுவாரசியம் சேர்க்கும் செய்திகள் மட்டுமே. நவீன இலக்கியம் அறிமுகமாகும் சூழல் இங்கு மிகக்குறைவே இலக்கியம் எனும் அறிதல் முறையும், இலக்கியப்பயிற்சி ஏன் தேவை போன்ற அத்தியாயங்களும் அளிக்கும் புரிதல்கள் ஆச்சர்யமளிக்கும். இந்த கோணத்திலேயே,இப்புத்தகமும் இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் மகத்துவம் பெறுகிறது.
தமிழில் அச்சிடப்பட்டு எளிதாககிடைக்கப்பெறும் வாரஇதழ்கள், நாளேடுகள் மற்றும் இணையதள வலைப்பதிவுகள் போன்றவற்றில் கேட்காமலே கிடைக்கும் தகவல்களையும், யாரோ முன் பின் தெரியாத ஆசாமி எழுதிவைத்த கட்டுரைகளையும் படித்துவிட்டு இதுதான் தமிழில் கிடைக்கப்பெறும் சிந்தனை / இலக்கிய சூழல் என என்னும் எண்ணம்கொண்ட யாராயினும் இந்தப்புத்தகத்தை நிச்சயமாக வாசிக்க வேண்டும். நம் சமூகத்தில் நன்கு படித்து, நல்ல வேலையில் உள்ள பெரும்பாலானோர் கூட தமிழ் இலக்கிய அறிமுகம் சிறிதும் இல்லாமலிருப்பதின் காரணம் நம் சமுக சூழலில் இலக்கிய அடிப்படைகளை பற்றிய அறிமுகமோ விழிப்புணர்வோ கொஞ்சம் கூட இல்லாமலரிருப்பதுதான். இக்குழப்பத்தின் அடிப்படை ஆணிவேராக இருப்பது இன்று நிலவும் சமூகசூழல் மற்றும் கல்விப்பின்புலம், எந்த ஒரு இலக்கிய அறிமுகப்பயிற்சியும் அளிக்கப்படாமல் தொழில்துறை சார்ந்த தகவல் அறிவை மட்டுமே நாம் சென்றைடைகிறோம் வாசிப்பின் படிநிலைகள் அத்தியாயத்தை வாசித்தாலே தெரிந்துவிடும் நாம் இன்னும் கரையில் நின்றகொண்டு கடலை அறிய முயற்சிசெய்துகொண்டிருக்கின்றோம் என.
சென்னை புத்தக திருவிழா, ரயில்/விமான நிலங்களில் உள்ள புத்தக குவியலை பார்க்கும்போதெல்லாம் தமிழில் அதிகமாக கண்ணில் தென்படுபவை அதிக பிரசுரங்களை கொண்டு பெரும்பான்மையான மக்களுக்காக கணிசமாக விற்பனையாகும் புராணங்கள், சமையல் குறிப்பு, வாழ்க்கைக்கு வழிகாட்டி, தத்தும், அரசியல், மதக்கோட்பாடு, சுயமுன்னேற்றம், பிரபல ஆங்கில புத்தகங்களின் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் போன்றவையே. அப்போதெல்லாம் யோசித்ததுண்டு..ஒருவேளை இதுமட்டும்தான் தமிழ் இலக்கியம் போல என்று. ஆனால் இப்புத்தகத்தை வாசித்துமுடித்தவுடன் தான் தெரிந்தது - தமிழில் இதுமட்டுமில்லாது ஆகச்சிறந்த இலக்கிய படைப்பாளிகள் வாழ்ந்திருக்கிறார்கள்…முன்பைவிட இப்பொழுது இன்னும் தீவிரமாக சிந்தித்து எந்த ஒரு விளம்பரமுமின்றி,லாப நோக்கத்தைப்பற்றியெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று. அவர்கள் அனைவருமே வெகுஜனத்தை ஆட்கொண்டிருக்கும் எல்லா ஊடகங்களுக்கும் வெளியே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், மேலும் அவரவர் தம் இலக்கிய வாசகர் வட்டத்திற்கு வெளியே அதிகம் பரிச்சயம் இல்லாதவர்கள். இப்புத்தகம் அத்தகைய படைப்பாளிகளை அடையாளம் காட்டி அவர்களது படைப்புகளை அறிமுகப்படுத்திவைக்கிறது.
தமிழிலக்கியம் பாரதியின் வருகைக்குப்பின் உரைநடையில் இத்தனை உன்னதமான படைப்புகள் வந்துள்ளன, அவை சிற்றிதழிலிருந்து வளர்ச்சி பெற்று இன்று எவ்வளவு முயற்சிகளைக்கடந்து பல கதை வடிவங்களை அடைந்து...நாவல் வடிவம் வரை...பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று இப்புத்தகம் சிறப்பாக விளக்கிக்காட்டுகிறது. வெறும் தகவல் குவியலாக நிகழ்வுகளை தொகுத்து பாடப் புத்தகம் போல இல்லாமல், நவீனத்த தமிழிலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியை அழகாக காட்டுகிறது அணைத்து அத்தியாயங்களும்.
இலக்கியம் ஒரு கலை, அது தர்க்கத்தை (logic) மையமாகக்கொண்டியங்கும் அறிவுசாரியக்கத்திற்கு (intellect) அப்பால் நிற்கும் நுண்ணுணர்வு (sensibitliy) சார்ந்தது...அதன் வரையறைகள் புறவறமானது அல்ல(outwardly , objective) என்பதை ஜெயமோகன் மிக நேர்த்தியாக உணர்த்தியுள்ளார்.
தமிழில் மட்டுமல்ல எந்த மொழிலியாயினும் வாசிப்பின் தேடுதல் மூலம் மேம்பட நினைக்கும் எவராயினும் குதுகுகாலமாக வந்தடைந்து நம்பிக்கையுடன் தங்களின் வாசிப்பு பயணத்தை தொடங்க வேண்டிய மிக முக்கியமான இடம் - நவீனத் தமிழிலக்கிய அறிமுகம். இப்புத்தகத்திலுள்ள வரிகளின் நேர்மையும் கூர்மையும் அதற்கு சாட்சி.
தமிழில் இலக்கிய வாசிப்பு அறிமுகமில்லாதவர் என்றால் இப்புத்தகம் வாசிக்க சில எளிய வழிமுறைகள்: 1. முதலில் ஒரு முறை புத்தகத்த்தை முழுமையாக வாசித்துமுடித்துவிடவும்,சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை முதல் முறையிலேயே புரிந்துகொள்ள பெரும்பாலும் தொடர் வாசிப்பு பயிற்சி தேவைப்படுகிறது, இல்லையெனில் இரண்டாம் முறை வாசிப்பின் பொழுது கருத்தக்களை எளிதில் புரிந்துகொள்ளாம். 2. சொற்கள் பெரும்பாலும் நம் அன்றாட வாழ்க்கைச்சூழலில் புழங்கும் வாய்மொழிச்சொல்லாகவோ, தொலைக்காட்சி, செய்தி, நாளிதழ் சொற்களாகவோ இல்லாமலிருப்பதால் வாசிக்கும்பொழுது கவனமும், கொஞ்சம் முயற்சியும், பயிற்சியும் தேவை 3. சில சொற்கள் இலக்கியத்தின் கலைச்சொற்கள் (technical words) - உதாரணமாக: குறியீடு, படிமம், தொன்மம், ஊடுபாவு, நனவிலி. அவற்றையும் ஆசிரியரே பின்னிணைப்பாக 308 பக்கத்தில் கொடுத்துள்ளார். தேவைப்பட்டால் இச்சொற்களை https://www.jeyamohan.in/211/ இணையதளத்திலும் வாசித்துக்கொள்ளலாம். அப்படியும் சில சொற்களை புரிந்துகொள்ளத்தடை இருந்தால் jeyamohan.in இணையதளத்தில் உள்ள தேடும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் https://www.jeyamohan.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81/(certainly one of the best search options available compared to majority of tamil websites) or use google search like this site: jeyamohan.in :படிமம் 4.அறிமுகமில்லாத/அர்த்தம்புரியாத பிற தமிழ்ச்சொற்களை https://www.crea.in/ என்ற தமிழ் மொழிக் களஞ்சியத்தை உபயோகப்படுத்தி புரிந்துகொள்ளலாம். Please don't use google translate, because sometimes it just transliterates rather than translation, so meanings get misrepresentated and mislead you 5. இப்புத்தகத்துடன் ஜெயமோகன் எழுதியுள்ள நாவல் - கோட்பாடு என்ற சிறிய அளவிலான மிகக்குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகத்தையும் தொடர்ந்து வாசித்தால் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் சற்று ஆழமாக விளங்கும். 6. இதன் தொடர்ச்சியாக தேவைப்பட்டால் https://www.jeyamohan.in/106655/
#books to read in tamil#reading#tamil literature#best tamil books#Naveena Thamizhilakkiya Arimugam(Tamil), Jeyamohan# இப்புத்தகம் எழுதப்பட்டது 1995ஆம் ஆண்டுவாக்கில் என்றாலும் கூட , 2011ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்திற்காக மறு-பதிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இதில் உள்ள கருத்துகள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளது.
நான் படித்தப் புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகம் இது. எந்த எழுத்தாளரும் முதல் 20 பக்கங்களில் என்னை இப்படி வியக்க வைத்தது இல்லை. முதல் 70 பக்கங்களை மட்டும் மூன்று முறை படித்தேன். “வாசிப்பின் படிநிலைகள்” என்ற தலைப்பில் இருந்த அத்தியாயம் படித்தபின்னர் நான் முதல் படியில் கூட இல்லை என்று உணர்தேன். சில படைப்புகளைப் படிக்கும்பொழுது இந்தப் படைப்பு நம் வாழ்கையில் நாம் சிலவற்றைப் பார்க்கும் பார்வையை முற்றிலுமாக மாற்றப் போகிறதை உணர்வோம். அப்படியொரு படைப்பு தான் இது எனக்கு. நான் கலை, அறிவியல் மற்றும் இல்லகியத்தைப் பார்க்கும் பார்வை வெகுவாக மாறியதை உணர்தேன்.
ஒரு இலக்கிய வாசகனுக்கு வாழ்கையில் எழும் எல்லா அய்யங்களுகும் கேள்விகளுக்கும் மிக ஆழமாக விரிவாக விடையளிதிருபார் ஜெயமோகன். அவருடைய ஆழமான கலை புரிதல் வியப்பூட்டுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுக்க வாசிபுக்காகவும் எழுத்துக்காகவும் செலவிட்டால் அடையும் ஒரு ஞானம் ஜெயமோகனிடம் இருப்பதை உணர்த்துகிறது இந்தப் புத்தகம். பொதுவாக இலக்கியம், சமூகம், இலக்கியத்தின் அரசியல், தமிழ் இலக்கியத்தின் வரலாறு போன்றவற்றில் ஆர்வமுள்ள எல்லோரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம் இது.
I always felt small when I started reading Tamil literature because it always sent me back a few times before to equip myself to re-enter to resume again.
Again and again I was disappointed on every attempt and knowingly I should give more special attention.
After a few years of trying I started reading Tamil literature books and slowly it started allowing me to be her student and also, the acceptance made me to experience immense happiness.
This was the time I came across this book about how to approach Tamil literature and it was more like a Bible..
Generally you have to know the line of reading on topics like Pure literature, Modern literature, Novels, Short stories, Poems etc etc..
Where to start and how I will know the hierarchy of each segment are general doubts?. This book stands as a sign board to direct you to answers.
We always love writers because they live in a multidimensional world. They can enter at their will as a subject and come out and write to readers as an object.
This is not just a manual for Tamil Literature. Its an in depth research book I would say. The Objective view and Subjective view and their differences in a Story are well explained. The levels in reading and Reader's Capacity is an amazing analysis which helped me understand where I stand. Overall, this book need to be read every year. It has so many details which helps a Reader to read wisely and in a better way. It completely changed the view I looked at Literature. In the end, there are recommendations by the author which is a great collection guiding any new reader.
One of the best book to understand about Tamil literature history. Jemo had explained the need of literature, levels of reading, and approach towards to book reading. Definitely this book would be a starting point for a reader who enters into Tamil literature. Thank you so much JEMO sir for a fabulous book!!!
வாசிப்பவரின் கையைப் பிடித்து நவீன இலக்கியம் என்பது என்ன, அதை எப்படி அணுக வேண்டும் வாசிப்பின் நிலைகள் என்ன, ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் அது யாருடைய தவறு, தேர்ந்தெடுத்த வாசகனுடையதா அல்லது எழுத்தாளனுடையதா. அப்படிப் பட்ட படைப்புகளை எவ்வாறு அணுக வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகள் என்ன என்பதை விளக்குகிறார்.
நவீன இலக்கியத்தில் புதியதாய் நுழையும் வாசகன் முதல் முதிர்ந்த வாசகன் வரை அனைவராலும் அடிக்கடி இலக்கியத்தை பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
புதுமைப்பித்தன் தொடங்கி இன்றைய எஸ் ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா வரை பல்வேறு தலைமுறை படைப்பாளிகளையும் அவர்களது அற்புதமான படைப்புகளையும், இலக்கிய பங்களிப்புகள் பற்றியும் விவரிக்கிறார்.
இலக்கிய இயக்கங்கள் என்றால் என்ன என்ற கேள்விக்கு “இலக்கிய அடையாளங்கள் எதுவாயினும் அவை வாசிப்பினால் உருவாகின்றவையே ஒழிய எழுத்தால் அல்ல” என்று கூறி விட்டு அடுத்த 10 பக்கங்களுக்கு 3 வகை இயக்கங்களை பற்றி எழுதிய காரணம் புரியவில்லை.
தமிழில் உள்ள அனைத்து இலக்கிய படைப்புகளையும் அதன் படைப்பாளிகளையும் பற்றி தேடி துடிக்கும் வாசகனுக்கு இப்புத்தகம் நல்ல தீனி.
சில எழுத்தாளுமைகளின் எழுத்துக்களை வாசித்திருந்தாலும் அவர்களை தொடர்ந்து வாசித்து எழுத்துக்களை பற்றி ஆழ அறிந்துகொள்ளாமல் இடையிடையே கிடைத்த விமர்சன கட்டுரைகளையும் வாசித்து குரங்குத்தாவல் நிலையில் கிளைவிட்டு கிளை பாய்வதுபோல் பலதரப்பட்ட எழுத்துக்களை வாசிக்கும் மனது இந்நூலில் முன்வைக்கும் வாசிப்பின் படிநிலை கண்டு பதறிப்போக வாய்ப்புண்டு, ஆனால் அப்பகுதியை வாசித்து மெல்ல அசைபோட்டாலே பிடிபட்டுவிடும் வணிக எழுத்திலிருந்து இலக்கியம் நோக்கி வந்திருக்கிறோம் என்பது. ஒவ்வொருவகை எழுத்தையும் எழுதிய ஆளுமைகளை முன்வைத்து வாசகனோடு உரையாடுகிறார் ஆசிரியர்.
தமிழ் இலக்கிய வரலாற்றின் போக்கினை நுட்பமாக ஆராயும் எழுத்துப்போக்கும் விமர்சன கோட்பாடுகளை வரிசைப்படுத்துவதும் கற்றலுக்கு உவப்பானது.
நவீனத்துவம் பின்நவீனத்தும் போன்றவைகளின் காலக்கணக்கீட்டிலிருந்த குழப்பத்தை தெளிவாக்கி இக்காலகட்டத்தின் வழியே உருவாகிய கோட்பாடுகளான யதார்த்தம், மாயயதார்த்தம் என கருத்தியல்களை அறிமுகப்படுத்துகிறது இவ்வாசிப்பு.
இறுதியில் தமிழின் முக்கியமான எழுத்துக்களை வரிசைப்படுத்தியிருப்பது சிறப்பானதாகப்படுகின்றது.