தமிழ்ப் புனைவெனும் ஈராயிரமாண்டுகளின் நெடும்பரப்பில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மாபெரும் அதிசயங்களாக, ஒரு சமூகத்தின் பன்னெடுங்கால நினைவுகளையும் அறிந்துகொள்ளக் கடினமான கனவுகளையும் கதைகளாக்கியுள்ளன. கதை சொல்வதின் கட்டமைப்பும் மிகத்துல்லியமான காலத்தின் மறதியைக் கடந்தும் புலப்படுத்தி நிற்கின்றன.
தமிழில் பின்நவீனத்துவப் பரப்பை உருக்காட்டும் இக்கதைகள் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு நினைவுகளையும் கனவுகளையும் தொன்மங்களையும் வரலாற்றில் உருமறைந்த உபஞாபகங்களையும் மீட்டுருவாக்கம் செய்துள்ளன. சொல்கதை மரபும் வரைகதை மரபும் வினோதமாகப் பிணைந்த வடிவமே தமிழ்ப்புனைவு மரபு என்பதை நவீனத்துவம் மறந்துவிட்ட நிலையில் மீண்டும் ஒரு அதிசயமாக இத்தொகை நூல்.