இயற்கைக்கு வர்க்க பேதம் எதுவும் இல்லை. அதனாலேயே ஓஷோ, நெஞ்சுக்கூட்டினுள் தூய நறுமணத்தை நிறைத்து அவ்வாறு விளித்தார். பேதங்களற்ற அது நிச்சயம் எவரையும் நல்வழியிலேயே கைப்பிடித்து அழைத்துச் செல்லும். ஒரு புல்லின் நுனியாகவும் ஒரு புழுவின் வாலாகவும் நின்று, ஓங்கி உயர்ந்து நிற்கிற அந்தப் பரிபூரணத்தை நோக்கிச் சிரிக்கையில், தலைக்கு மேலே அது திரண்டு நிற்கிறது ஒரு பூமியைப் போல.