அழகான மீண்டும் ஒரு கொங்கு வாழ்வியலுடன் கூடிய கிராமிய வாழ்வு. ஊர்கள் 30 கி.மீ தூரம் மாறுகையில் அவர்களின் வாழ்க்கை முறையும் மாறுகிறது. பழைய வாழ்வை வாழ்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்வையெண்ணி கவலையுறுகிறார்கள். பிள்ளைகளின் காதல் அவர்களை அதிர்வுக்குள்ளாக்குவதை விட்டு கால மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இதுவொரு அழகான வாழ்க்கை!
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.