Jump to ratings and reviews
Rate this book

மாயச்சதுகரம் [Mayaccatukaram]

Rate this book
It is a novel written in the historical context of a delusional, deceptive tragedy that took place at the beginning of the twentieth century.

History is not just Vandiyathevan and Kundava Nachiya that should be taught to Tamil people.

The whole novel has been widely spoken of as the legacy, culture, language, taste, human relations, food of that period. References to contemporary crimes through are frightening.

THE CHARACTERS TALK ABOUT THE ENVY, THOUGHTFULNESS, LETHARGY AND DECEPTION OF SOME POLITICAL PARTIES. It is not easy to go through them normally.

Although it is a novel with a historical background, the characters with different personalities such as Saumya, Elima, Henry, Suppurao are interesting.
The novel breaks down the magical image of Thruvallikeni, Mailapur, Mambalam, Thiagaraya Nagar, Chennai, just as many art scholars consider Mumbai's Tarawi to be Ranganathan Street in Chennai.

310 pages, Paperback

Published November 1, 2024

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (33%)
4 stars
2 (33%)
3 stars
2 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Gokul.
12 reviews2 followers
April 23, 2025
pakka investigative thriller genre book💥
1906 இல் சனிக்கிழமை மாலை வரை இயங்கி வந்த 'அற்புதனாத் வங்கி ' திங்கள் கிழமை திவாலானதாக சொல்லி மொத்தமாக மூடப்படுகிறது. வரலாற்றில் எங்கும் பெரிய பேசு பொருளாக ஆகாத இந்த நிகழ்வு ஏன் நடந்தது என்ற கேள்விக்கு விடையைத்தேடி சௌமியா,,எலிமா,தௌலத்,ஹென்றி,
சுப்புராவ்வ், என்று அந்த வங்கியின் வீழ்ச்சியால் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பாதிக்க பட்டவர்களின் கதையாக வரலாறு கலந்த த்ரில்லர் கதையாக விரிகிறது.
நீதிக்கட்சி,வ.உ.சி,
பாரதி, திலகர்,அன்னை பெசன்ட்,அன்றைய பாஜக வான தீவிரவாத காங்கிரஸ் என பாடப் புத்தங்களில் சொல்லாத வரலாற்றினை அடிக்கோடிட்டு காட்டி நகர்கிறது நாவல்.

தரமான thriller genre book🔥
Profile Image for Kesavaraj Ranganathan.
50 reviews7 followers
April 16, 2025
08/30+

மாயச் சதுகரம் - முஹம்மது யூசுப்


A people without the knowledge of their past history, origin and culture is like a tree without roots.

- Marcus Garvey

வரலாறு என்பது எப்போதோ தீர்மானிக்கப்பட்டு எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஒன்று. அதை குறித்து நாம் ஆழமாக இறங்கி வாசிக்கும் போது அதன் புலப்படாத பக்கங்களை அது நமக்கு காண்பிக்கிறது! அப்படிப்பட்ட ஒரு கதை தான் மாயச் சதுகரம். கதையின் நாயகி சௌமியா ஒரு அற்புதமான ஆளுமை மிக்க கதாப்பாத்திரமாக வடிவமைத்திருக்கிறார் ஆசிரியர்! நாயகன் ஹென்றி ஒரு அழுத்தமான அமைதியான கதாப்பாத்திரம், கதை முழுக்க வரும் சுப்புராவ், இன்னொரு நாயகன் தௌலத் பாஷா என இன்னும் பல கதாப்பாத்திரங்களைக் கொண்டு அழகாக சித்தரித்து இருக்கிறார்! கதையின் களம் சென்னை, கருப்பர் நகரத்தைச் சுற்றியிருக்கும் பகுதியை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது!

சென்னை என்றால் எல்ஐசி பில்டிங்கும், கோயம்பேடும், மைலாப்பூரும், ஓஎம்ஆரும், ஈசிஆரும் மட்டுமல்ல. நம் கண்ணைக் கவராமல் அமைதியாக கருப்பர் நகர பகுதிகளில் ஒரு அழிவிற்கு சாட்சியமாக நிற்கும் சிதிலமடைந்த கட்டிடங்களும் தான்! இந்த கட்டிடங்களின் பின்னால் அங்கே வாழ்ந்த குடும்பங்களின் அழுகுரல்கள் இன்னும் மௌனமாக ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது என்பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது!


19ம் நூற்றாண்டின் இறுதியில் திவாலான, திவாலாக்கப்பட்ட அற்புத நாத் வங்கியினை மையமாக வைத்து அதில் பாதிக்கப்பட்ட நாயகி, நாயகன் மற்றும் அதைச் சார்ந்தவர்களை வைத்து கதையை மிக அழகாக வார்த்திருக்கிறார் ஆசிரியர்! ஒருசில எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்கும் போது தான் மனதிற்கு உற்சாகம் பிறக்கும், அதே போல இந்த கதை இத்தோட முடிஞ்சிடுச்சா இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாமே என்று தோன்றும் வசீகரிக்கும் எழுத்து யூசுப் அண்ணனுடையது!


வரலாறு என்பது சில நேரம் போர் அடிக்கும் விசயமாக இருந்தாலும் இவரின் நேர்த்தியான எழுத்து யுக்தி ஒவ்வொரு நிகழ்வுகளையும் கோர்த்து கோர்த்து ஒரு முழு சித்தரம் கிடைப்பதை வாசிக்கும் போது ஒரு மனநிறைவு ஏற்ப்பட்டு விடுகிறது! இங்கே வாழ்ந்த அரசர்களின் வாழ்க்கை மட்டுமல்ல, வரலாறு சாமானியர்களின் பார்வையில் இருந்து மாற்றி எழுதப்பட வேண்டும் என்பதை இந்த நாவலின் கதைக்களம் எடுத்துரைக்கிறது!


எப்போதோ நடந்த ஒரு வங்கியின் சரிவு எப்படி எல்லாம் ஒன்றன் மீது ஒன்றாக டோமினோஸ் எபெக்ட் போல தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். இதன் இடையில் இந்திய வரலாற்றில் நடந்த சில விசயங்கள் குறிப்பாக வ.உ.சி அவர்களுக்கு நடந்த துரோகம், சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் இருந்து வரும் பிரிவினை. அந்த பிரிவனை வ.உ.சி ஆவர்களின் வாழ்வை எப்படி எல்லாம் பாதித்தது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்!


இன்றும் நாம் சினிமாக்களில் பார்க்கும் பின்னி மில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் விவேகானந்தர் இல்லம் (ஐஸ் ஹவுஸ்), சௌகார்பேட்டை, மின்ட் தெரு, பவளக்காரத் தெரு என அதன் பின்னால் இருந்த வரலாறு என வட சென்னையின் வரலாற்றின் ஒரு பகுதியை இந்த டாக்கு பிக்சன் நாவல் நமக்கு கொடுக்கிறது!


புத்தகம் - மாயச் சதுகரம்
ஆசிரியர் - முஹம்மது யூசுப்
பதிப்பகம் - யாவரும் பப்ளிஷர்ஸ்
பக்கங்கள் - 310
விலை - ₹399
Displaying 1 - 2 of 2 reviews