எனதன்பு வாசகப் பெருமக்களே.. தொலைந்த எனை மீட்க வா...! என்கிற புதிய நாவலோடு மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. திகழ்வஞ்சி வசதியான வாழ்வுக்கு ஆசைப்பட்டு, பணம் படைத்தவனை வளைத்துப் போட்டு அவன் குழந்தையைக் கருவில் சுமக்கிறாள். அபராசிதன் யாரோ திகழ்வஞ்சி என்பவளின் வயிற்றில் பிறந்த தன் அண்ணனின் வாரிசை மீட்டெடுக்க அவளைத் தேடி வருகிறான். குழந்தையைக் கொடுக்க மறுக்கும் அவளும், குழந்தையை எப்படியாவது தன் பொறுப்பில் எடுத்துவிடுவது என்கிற உறுதியோடு அவனும் போராடும் அந்தப் போராட்டத்தில் காதல் மலர்ந்ததா இல்லையா? நீங்களே படித்துப் பாருங்களேன்.