Jump to ratings and reviews
Rate this book

சுளுந்தீ

Rate this book
தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று நுண் அரசியல் ஆவணம்.

வரலாற்றைக் கதையாகவும், கதையை வரலாறாகவும் பேசுகிற பாணியில், எழுத்தின் வாயிலான ஒரு பெருங்கதைக்குள் பல்வேறு குடிகளின் வாழ்வியலைப் பேசுகிற இனவரைவியல் மற்றும் நிலத்தின் வரைவியல் பேசுகிற தமிழின் மிக முக்கியமான பெரும் புனைகதைப் படைப்பிலக்கியமாக வெளிவரப் போகிறது சுளுந்தீ எனும் நூல்.

தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதவும் பேசவும் கூடியவர்கள் மறைத்த, மறந்த, மறுத்த ஒரு காலகட்டம் குறித்த வரலாற்றுத் தரவுகளை, மக்களின் வாய்மொழி, பண்பாடு, மற்றும் ஆவணக் குறிப்புகள் போன்ற வரலாற்றுக் குறிப்புகளோடு புனைகதையாகப் புலப்படுத்தி இருக்கிறார் தோழர் இரா.முத்துநாகு.

தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த தெலுங்கின நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில், நிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த தமிழ் உழவுக்குடிகளிடமிருந்த வேளாண்மை நிலங்கள் பறிக்கப்பட்ட வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

தமிழ்க் குடிகளுக்கும் தமிழ் அல்லாத குடிகளுக்குமான முரணும் பகையும் குறித்து மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் விவரித்திருக்கிறது.

நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நிலவிய அதிகாரத்தின் கோர முகங்களையும், அவ் அதிகாரத்தை எதிர்த்து நின்ற பல்வேறு சமூகக் குடிகளின் வாழ்வையும் பேசுபொருளாகக் கொண்டிருக்கும் இந்நூல், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய தரவுகளை நிறையவே தந்திருக்கிறது.

இன்றைய சமூக அமைப்பில் விளிம்பு நிலைச் சமூகங்களாகக் கருதப்படுகிற பல சமூகக் குடிகள், அக்காலகட்டத்தில் அறிவும் திறமும் பெற்றிருந்த சமூக ஆளுமை மிக்கதாக இருந்த வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

குறிப்பாக, தமிழ் நிலத்தின் மருத்துவ அறிவும் நுட்பமும் முறைகளும் கற்றுத் தேர்ந்திருந்த சித்த மருத்துவப் பண்டுவர்களான நாவிதர் பற்றிய விரிவான விவரிப்புகள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் மட்டுமல்ல; தமிழில் இதுவரையிலும் பதிவாகாத செய்திகளும் கூட.

தமிழ் நிலத்தின் தமிழ்ப் பூர்வீகக் குடிகளைக் குறித்தும், வந்து குடியேறிய தமிழ் அல்லாத குடிகளைக் குறித்தும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் இந்நூல் பதிவு செய்திருப்பதாகவே என் வாசிப்பில் உணர்கிறேன்.

தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே இப்பெருங்கதை நிலைத்திருக்கப்போகிறது என்பதே இந்நூலின் சிறப்பாகும்.

இந்நூல், வெறும் கற்பனையோ அல்லது சிறுகச் சேர்த்த புனைவோ என்பதைக் கடந்து, கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேகரித்த மக்களின் வழக்காற்று ஆவணங்களே ஒரு பெருங்கதைக்குள் உலவித் திரிகின்றன. அவ்வகையில், மக்கள் வரலாற்றையும் வழக்காற்றையும் எழுத்தில் பதிவு செய்திருக்கும் தோழர் இரா.முத்துநாகு அவர்களின் தேடலும் உழைப்பும் ஒவ்வோர் எழுத்திலும் படிந்திருக்கிறது.

- ஏர் மகாராசன்

472 pages, Hardcover

First published January 1, 2018

26 people are currently reading
276 people want to read

About the author

இரா. முத்துநாகு (பிறப்பு: ஜூன் 15, 1967) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், ஊடகவியலாளர், ஆய்வாளர். சுளுந்தீ நாவல் மூலம் அறியப்படுகிறார்.

இரா. முத்துநாகுவின் முதல் படைப்பு ”சுளுந்தீ” நாவல் 2019-ல் வெளியானது. பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டது. தமிழ் நிலத்தின் பூர்வக்குடிகள் வெளியேற்றப்பட்ட கதையை இங்குள்ள பல இனக்குழுக்களின் பண்பாட்டுக் கதைகளுடனும் அவர்கள் கொண்டிருந்த பாரமபரிய அறிவுடன் எழுதினார். 481 மருத்துவக் குறிப்புகளுடன் மூன்று தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்ட சித்த மருத்துவக் குறிப்புகளை 'குப்பமுனி' நூலாக எழுதினார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
26 (34%)
4 stars
32 (42%)
3 stars
12 (16%)
2 stars
4 (5%)
1 star
1 (1%)
Displaying 1 - 13 of 13 reviews
Profile Image for Sathish .
16 reviews8 followers
March 20, 2020
மருத்துவப் பண்டுவர்களான நாவிதர்கள் பற்றிய பல அறிய, தெறியத தகலகள் இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன, மேலும் பண்டுவம் கைமாறிய அரசியலையும், குல நீக்கம் என்ற பெயரில் எவ்வாறு மக்களின் உரிமைகள் மற்றும் உடைமைகள் பறிக்கப்பட்டன என்பதை எழுத்தாளர் பதிவு செய்துள்ளார்.
அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.
Profile Image for Nagarajan.
76 reviews23 followers
July 25, 2021
Too good and must read history written in a novel format in Tamil. This book is a beautiful cocktail of history, sociology, medicine and what not. The author has provided tons of interesting history bits, insightful information and surprise the reader throughout. Result of 10+ years of research by author and this is his first novel. I recommend you to read and feel for yourself.
Profile Image for Aarthi Jay.
5 reviews
June 27, 2020
My reading journey so far has been anything but political. This is my first political-docu read but in the garb of historical fiction and I admit struggling with the dialect and discourse at places. But 'Sulunthi' is a phenomenal work that deserves the accolades that it is currently garnering. The debut novel by Author Muthunagu is an intensely researched work on the dynamics of social politics that ruled Tamil provinces in the 17th century. The novel derives its name from the 'சுளுந்து' (sulundhu) tree, firewood of which can be lit and used as torch that can burn for hours. The rulers had banned the growing or usage of the tree as it was seen as a weapon of the clans and a symbol of rebellion. Needless to say it has rightly ignited this fiery fiction.

Set in Madurai, the story takes one through the troubles and aspirations of the 'Navidhars' (barbers) community. An astonishing revelation was that they were also physicians of repute who supposedly derived their immense knowledge from the siddhars'. The story follows the trials and tribulations of the protagonist and how political malevolence played a huge role in thwarting his aspirations. The narrative expertly highlights the caste structure that dominated that era. Working class practices like how a washerman while preparing for the 'vellavi' (steam laundry) in which clothes were layered in a particular order (based on caste), goes to explain how caste had influenced occupation which in turn determined how soiled the clothes can get. Many such interesting trivia is interspersed throughout the book.

The author's work is commendable in bringing to fore the contributions of the 'Navidhar' community, their political ambitions, social standing, extensive medical knowledge, proximity to the rulers and the diverse social setting of that era. The amount of research and evidence gathering undertaken by the author is astounding. This is a space and setting rarely traversed before and will be a while before anyone tries again.
Profile Image for Shanmugam Udhayan.
50 reviews10 followers
May 14, 2020
சுளுந்தீ - முத்துநாகு

“கோவில்களில் வேண்டுதல் அதன் பூசாரிகளின் தொழிலைப் பொருத்து மாறும்”

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் டாப் 10 விற்பனையில் இடம் பெற்ற நாவல், மேலும் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்ட நாவல் என்ற காரணத்தால் மிகுந்த எதிர்பார்புடன் படித்தேன். கதை 18 ஆம் நூற்றாண்டில் நிகழ்கிறது. சரித்திர நிகழ்வென்றால் ராஜாக்களின் கதையாகவோ சிம்மாசன சண்டையாகவோ தான் இருக்கும். ஆனால் சுளுந்தீ எளிய மனிதர்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. அக்கால சூழலில் சமூகத்தில் நாவிதர்களின் நிலை என்ன, பண்டுவம் என்ற மரபான சித்த மருத்துவ முறை நாவிதர்களின் கூடுதல் பணியாக எப்படி வந்தது, மேலும் ராஜ சூழ்ச்சியால் தங்களின் நிலை எவ்வாறு வீழ்ந்தது என்பதை விரிவாக சித்திரப்படுத்தும் நாவல். இந்த நாவலில் மூன்று பிரதான கதாபாத்திரங்கள் வருகிறது.
1. சித்தர் - இவர் வழியாக அக்கால பண்டுவ முறைகள் பலவற்றை குறிப்புடன் விளக்கமாக கதைநெடுக தருகிறார்.
2. ராமன் - பிரதான கதாபாத்திரம், நாவிதரின் முக்கியத்துவத்தையும், அரண்மனையின் ரகசிய ஏவல்களை செய்து முடிக்க பணிக்படுவதையும், பண்டுவத்தை தனதாக்கி கொண்டதையும் தெளிவுபடுத்தும் கதாபாத்திரம்.
3. மாடன்- ராமனின் மகன், நாவிதராக இருப்பவன் படைவீரனாக மாற விரும்புவதால் அரண்மனைக்கு எதிரியாக நிறுத்தபடுகிறான்.

இவர்களை வைத்து பின்னப்பட்ட கதைதான் சுளுந்தீ... அடுக்கடுக்காக அறியப்படாத மருத்துவ குறிப்புகளை வழங்குவது சலிப்பை ஏற்படுத்துகிறது. மனதில் நிறுத்த முடியாத கதாபாத்திரங்கள் ஆங்காங்கே வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சில இடங்களில் வியப்பை ஏற்படுத்தும் எழுத்தாக இருந்த போதிலும், பெரும்பாலான இடங்களில் சலிப்பை ஏற்படுத்திய வாசிப்பு
Profile Image for Arvind Srinivasan.
326 reviews18 followers
June 13, 2020
The book talks on the life of people around madurai during 17th century. The book talk in detail about navithar's their life style and their medicine.

You will love the book if you are lover of history and you want to know lot about tamils during the period. A great book that will take u to the period - extensive thoughts on the book in tamil can be found in link
https://youtu.be/9DnO-74Cuco
Profile Image for Ibrahim Farooq.
3 reviews1 follower
June 26, 2021
புத்தகம்:- சுளுந்தி
எழுத்தாளர்:- இரா. முத்துநாகு
வெளியீடு:- ஆதி பதிப்பகம்

வரலாறு என்னும் அகழ் எத்தனை எத்தனை புதினங்களை தன்னுள் புதைத்து வைத்துக் கொண்டு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதை ஒருசிலர் மட்டும்தான் வெளிக்கொணர எத்தனிக்கிறார்கள். அப்படிப்பட்ட புதையலாக தான் இந்த நாவலை நான் பார்க்கிறேன். பண்டுவக் குடும்ப பின்புலத்தைக் கொண்டவர் என்பதனாலோ என்னவோ.... கதை முழுமையாக பண்டுவத்தை உச்சிமுகர்ந்து கொண்டாடி இருக்கிறார் எழுத்தாளர்....

கதைக்களம் 1800களிள் அன்றைய அரசாங்கம் எப்படி இருந்தது.... அரண்மனை கமுக்கம் என்றால் என்ன.... நிர்வாகம் எப்படி சாதி அடுக்குகளால் அடுக்கப்பட்டு இருந்தது.... குலத்தொழில் மீர்வதனால் உண்டாகும் விளைவுகள் .... யாருக்கெல்லாம் குலநீக்கம் செயல்படுத்தப்பட்டது.. இதன் மத்தியில் சாமானிய மக்கள் அரசாங்கத்தை எப்படி அணுகினார்கள் என்பதை நாவிதன் மூலமாக கதை சுழல்கிறது...

விஜயநகரப் பேரரசு நாயக்கர் களைக் கொண்டு ஆட்சி ஆண்ட காலம்.. போர்வீரர்களுக்கு அடுத்தபடியாக கத்தி வைத்திருக்கும் உரிமை நாவிதர்களுக்கு மட்டுமே இருந்தது.. ஆட்சியாளர்கள் அந்தப்புரத்திற்கு அடுத்தாற்போல் நாவிதன் இடம் மட்டும்தான் அம்மணமாக நின்றனர்...

அரண்மனை பதவி போட்டியை சமாளிக்க சவரக்கத்தியை அந்தப்புரப் போர் கருவியாக கையாளப்பட்டிருக்கிறது..... கன்னிவாடி அரண்மனையிலும் சவரக் கத்தியால் கொலைகள் நடந்ததாக கிடைத்த ஒரு தகவலை அடித்தளமாகக் கொண்டது இந்த சுளுந்தீ நாவல்

போகின்ற போக்கில் வரலாற்றுத் தகவல்களை... சித்தர் மரபு பண்டுவம்...
சாமானியர்கள் கையாண்ட சொலவடைகள்.... சாதிகள்....சாதிகள் கொண்ட தொழில்.... பிறப்பு முதல் இறப்பு வரை சைவ-வைனவத்தின் சாங்கியங்கள்...
அக்கால புழக்கத்தில் உள்ள சொற்கள் அதன் விளக்கம்...என மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர்...

ராம பண்டுவன், பன்றிமலை சித்தர், குலகுரு, மாடன் மருதமுத்து ஆசாரி, வல்லத்தாரை, அனந்தவல்லி என சுற்றும் கதையில்... மற்றவர்களை விட 'செங்குலத்துமாடன்'... ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் போர்க் குணத்தோடு தனி ஒருவனாக நிலைத்து நிற்கிறான்...
Profile Image for Siva Prasath T R.
76 reviews4 followers
December 18, 2019
சுளுந்தீ
வரலாற்று சிறப்புமிக்க #மதுரையைச் சுற்றிய கதையோட்டம் , #நாவிதர்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இப்படைப்பு.ஏராளமான தகவல்கள் இதுவரை யாரும் தொடாத கதைக் கரு . மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பண்டையக்கால மக்களின் நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் வாழ்வியலை சிறப்பாக விளக்கியுள்ளார். சாமானிய மக்கள் அதிலும் நாவிதர்களின் நிலையையும் அரண்மனை ஆட்சிமுறையையும் அதன் இரகசியங்களையும் அவர்களின் அதிகார பலத்தால் அடுத்தட்டு ஏழை மக்கள் அடையும் பாதிப்பையும் நாட்டை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் மேற்கோள்ளும் வித்தைகள் மற்றும் செய்யும் துரோகங்களையும் மிகச் சிறப்பாக துணி வெளுக்கும் வண்ணான் இராம பண்டுவன் #செங்குளத்துமாடான் மூலமாக தோலுரித்ததுக் காட்டியுள்ளார்.சில இடங்களில் சற்று குழப்பங்கள் இருந்தாலும், சில சமயங்களில் தெளிவான கதையோட்டம் தடைபட்டாலும் இது மிகச்சிறந்த படைப்பு. பண்டுவர்கள் மற்றும் அரியவகை சித்த மருத்துவத்தின் சிறப்புகளையும் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளமை சிறப்பு !!
இப்புத்தகத்திலுள்ள கதைக்கரு இன்னும் தற்போதுள்ள வாழ்வியலுக்கும் பொருந்துவது கூடுதல் சிறப்பு.
இப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் #முத்துநாகு அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் யாரும் தொடாத இடத்தை அடைந்ததற்கு வாழ்த்துக்கள்.

படிக்க வேண்டிய அரிய பல தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய இப்புத்தகத்தை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.

- இரா.சிவபிரசாத்
Profile Image for Raja Raman NTN.
1 review
July 24, 2021
சுளுந்தீ - முத்துநாகு
சுளுந்தீ என்னும் இந்த வரலாற்று நாவலில் 18ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியில் கொடைக்கானல் என்றறியப்படும் ‘பன்றி மலையை’ உள்ளடக்கிய கன்னிவாடியைக் களமாக கொண்டுள்ளது.

பண்டுவம் எனப்படும் தமிழர்களின் மரபு மருத்துவம் சார்ந்த அறிவும் நுட்பமும் அறிந்த நாவித குடிகளை பற்றிய கதை, இதில் கூறப்படும் மரபு சார்ந்த மருத்துவ நுணுக்கங்கள் வியக்க வைக்கிறது.

தமிழர்களின் பூர்வகுடிகளை குலநீக்கம் என்ற முறையில் ஒதுக்கிவைத்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து தமிழ் அல்லாத பிறமொழி குடிகளை குடியமர்த்துவது, தமிழர்களின் வாழ்க்கை முறை, குலத்தொழில் குறித்தும் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணம் - சுளுந்தீ.
8 reviews1 follower
March 31, 2023
நாவிதத்தை (Barber)குலத்தொழிலாகவும், பண்டுவம் (Medicine) பயிற்றுத் தொழிலாகவும் கொண்டு பேர் பெற்ற ராமன் இறந்த பின் மகன் மாடன் அத் தொழிலை தான் செய்ய வேண்டுமென்றால் தன்னோடு மல்யுத்ததித்தில் யாராவது வென்றால்தான் செய்வேன் இல்லையென்றால் தோற்றவன் அதைச் செய்ய கூலி மட்டும் தனக்கு வர வேண்டும் எனச் சவால் விடுகிறான். ஏன், எதற்காக என்பதுதான் கதை.

அதிகப்படியான மருத்துவ தகவல்களே பக்கத்தை கடக்க பெரும் தடையாக இருக்கிறது என்பதைத் தவிர்த்து வேறு குறைகள் இல்லை.

அவசியம் படிக்க வேண்டிய நாவல்.
Profile Image for Sathiyendran Rajamani .
18 reviews1 follower
March 29, 2020
2018 ல் வெளியான நாவிதர்கள் தொடர்பான வரலாற்று நாவல்.திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பகுதிகளில் தான் கதை விவரிக்கப்பட்டுள்ளது.ஆங்காங்கே அதிகளவில் குறிப்பிடப்படும் மருத்துவம் உண்மையா என்று தெரியவில்லை.

குலத்தொழில் குலநீக்கம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.நாவிதன் மகன் நாவிதன் வீரனாக இறப்பதோடு கதை நிறைவுபெறுகிறது.
51 reviews2 followers
October 31, 2019
ஏராளமான தகவல்கள். யாரும் இதுவரை நுழைந்திராத புதிய களம். நாவலின் மொழி பிரமிக்க வைக்கிறது. எனினும் வரலாற்றுத் தகவல்களை இன்னும் சற்று தெளிவாகச் சொல்லியிருக்கலாம். சில இடங்களில் view point குழப்பங்களும் இருக்கின்றன. ஆனாலும் கூட கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு முக்கியமான படைப்பு
99 reviews
January 11, 2022
ராமன் கன்னிவாடி அரண்மனை நாவிதன். மாடன் ராமனின் மகன். ராமன் , மாடன் இந்த இருவரை சுற்றி கதை நகர்கின்றது. எளிய நடை. அரண்மனை அரசியலை நாம் கண் முன் நிறுத்துகிறது.
Displaying 1 - 13 of 13 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.