1. ஐந்தவித்தான், 2. நல்லபாம்பு: நீல அணங்கின் கதை, 3. அருகன்மேடு: ரேமாவிலிருந்து ரேமா வரை என்னும் மூன்று புதினங்களைக் கொண்டது. பொந்திஷேரி என்ற பிரெஞ்சு இந்தியாவின் விடுதலைக்குப் பிறகான பின்காலனிய நிலப்பகுதியின் கதைகளைப் பேசும் இந்நூல் Historical Psychological Fiction என்பதாக விரிகிறது. முடிவற்ற மனவெளி நாடகம் தன்னகத்தே இரண்டாயிரம் ஆண்டுகளைக் கதைவெளியாகக் கொண்டு நிகழ்கிறது. சங்க காலத்திலிருந்து பிரெஞ்சு காலனியக் காலம் வரை கதை மாந்தர்கள் வரலாற்றில் குறுக்கும் நெடுக்குமாக திரிகிறார்கள். சோழ மண்ணிலிருந்து ஈழ மண்வரை; பொந்திஷேரி கடற்கரையிலிருந்து பாரிஸ் நகரத் தெருக்கள் வழியாக தமிழ்ப் புலிகள் வரலாற்றுப் பக்கங்களில் சுவடுகளைப் பதிக்கின்றன. கட்டவிழும் மிகை எதார்த்தக் கதைகள், கட்டமையும் புதிய புராணங்கள், கீழைத்தேய மாய அரசியல் நிகழ்வுகள் என விரியும் பின்நவீனத்துவக் கதை மண்டலம்.
பனுவல் இன்பம்(Pleasure of the Text) இங்கு Textual Sexual Pleasure என்றாகிறது.