Jump to ratings and reviews
Rate this book

இதோ நம் தாய்

Rate this book
வசதிகள் கூடும்போது அவற்றை அத்தியாவசியமாக்க காரணங்கள் மிக எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. இதே பெசண்ட் நகர் கடற்கரையில் அவள் காதலர்களைச் சந்தித்திருக்கிறாள். அவள் இதயம் படபடத்திருக்கிறது. அவள் காதலர்களுடனும் நண்பர்களுடனும் உலகத்தைப் பற்றி நிறைய பேசியிருக்கிறாள். இப்போது அவள் உலகத்துக்கும் அந்த பெரிய உலகத்துக்கும் இடையில் இடைவெளி விழுந்துவிட்டதா? முப்பத்து ஐந்து வயதில் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா?
(நாவலிலிருந்து)

70 pages, Paperback

Published January 1, 2025

6 people want to read

About the author

வயலட்

2 books6 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (25%)
4 stars
3 (37%)
3 stars
1 (12%)
2 stars
1 (12%)
1 star
1 (12%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Dhanaraj Rajan.
529 reviews362 followers
January 29, 2025
Three and half stars.

It is a story of a transgender who is also a translator.

This is not a plot driven story. Rather it is a narrative containing self reflections.

The reflections are made based on the gender/transgender and translation.

Can the change of gender guarantee complete transformation?

Let me rephrase the question: Can a person who has become a woman beget children? Can she attain motherhood?

This is also related to the profession of translation? Can the voice of the translated work be the original voice of the source text? Or is it different?
Profile Image for Moulidharan.
95 reviews18 followers
March 24, 2025
இதோ நம் தாய்
ஆசிரியர் - வயலட்
நாவல்
சால்ட்
70 பக்கங்கள்
இவ்வுலகில் மொழிகள் தோன்றுவதற்கு முன்னர் , மனிதன் உரையாட தொடங்கும் முன்னர் அவர்களுக்குள் கதைகள் சொல்லப்பட்டதா ? அப்படி சொல்லப்பட்டிருந்தால் , அக்கதைகளை எவ்வாறு தங்களுக்குள் உணர்ந்திருப்பார்கள் ? ஒருவேளை மொழிகளுக்கு முன்னர் அவர்களுக்கு கதைகள் தேவைப்பட்டதா ? ஆம், மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இங்கு கதைகள் தேவைப்படுகின்றன . தான் இந்த உலகிற்கு உரக்க சொல்ல நினைத்ததை , உலகம் கேட்க மறந்ததை , மறுத்ததை தனக்குள்ளாகவோ , இந்த உலகத்தின் மூலையில் யாருக்காகவோ தன் வாழ்வின் அனுபவங்களை நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து கதைகளை மனிதன் உருவாக்கி இந்த உலகில் விட்டு செல்கிறான் . சொல்லப்படாத கதைகள் இங்கு உண்டு ஆனால்,கதைகளற்ற ஒரு மனிதன் ஒருவன் கூட இங்கு கிடையாது . கதைகளுக்கும் நம் சமூகம் ஒரு வரையறை வகுத்து வைத்திருக்கிறது , அதில் சிக்கி சிதிலமடைந்த கதைகள் குரலற்ற ஓலமாக நிராசையுடன் இவ்வுலகில் காலம் காலமாக அலைந்து திரிந்து வருகிறது . காலத்தின் கருணையாலும் , மனித மனங்களின் விஸ்தாரத்தாலும் , இலக்கியத்தின் பெரும் எழுச்சியாலும் இன்று அந்த கதைகள் மெல்ல மீண்டெழுந்து வர தொடங்கிவிட்டன . அப்படி வயலட் அவர்களால் தனக்குள் இருந்து மீட்டெடுத்த ஒரு கதை தான் இந்த " இதோ நம் தாய் "நாவல் .
ஆண் வாரிசு தான் வேண்டும் என்று தவம்கிடந்த ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசாகவே பிறந்து இயற்கையின் தேர்வின் படி ஆனந்தியாக உள்ளத்தாலும் , உடலாலும் மாறியவளின் எண்ண ஓட்டங்களை படைப்பிற்காக எந்த ஒரு சீரமைப்புகளுமின்றி , சிதறிக்கிடந்த ஆனந்தியின் சிந்தனைகளை சொற்களின் வழியே வாசகனுக்கு அப்படியே கடத்த நினைத்து அம்முயற்சியில் வெற்றியும் கண்டடைந்த வைலட்-டிற்கு வாழ்த்துக்கள் .

ஆனந்தி என்ற பெயரை கதையின் தொடக்கத்தில் பார்த்தவுடன் அந்த கதாபாத்திரம் ஒரு பெண் என்று ஏற்றுக்கொண்ட நம் மனம் , ஏனோ பின்வரும் பக்கங்களில் அவள் பெண்ணாக மாறியவள் என்று தெரியவந்தவுடன் ஒரு பேரதிர்ச்சிக்குள்ளாகி , பெண் என்று நினைத்து தொடர்ந்து வாசிக்க தடுமாறுகிறது . கோமதிக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது . நம்மால் சொற்களால் ஆனந்திக்கு எதிர்வினையாற்ற முடியவில்லை அவ்வளவே வித்தியாசம் .
ஆனந்தி கேள்விகளால் நிரம்பியவள் . கடவுளற்ற மதத்தை , வேண்டுதலை நாடுபவள். அதனால்தான் போராட்டமும் , கோஷமும் கூட அவளுக்கு வேண்டுதலாக தோன்றுகிறது . மேரியின் தாயுருவத்தால் கிறிஸ்துவின் பக்கம் ஈர்க்கப்படுகிறாள் , இன- மத - மொழி பேதமின்மையினால் பௌத்தத்தின் பக்கம் ஈர்க்கப்படுகிறாள் . அவளுக்கு தேவை கேள்விகளற்ற , விளக்கங்களற்ற , விடைகளின் எதிர்பார்ப்பில்லா , ஒரு சமூகம் . அவளுக்கு இங்கு எல்லாமே ஒன்றுதான் மரம் -செடி - நாய்-பூனை - அம்மா - அப்பா - யாஸ்மின் - யசோதா -அன்பு -அவள் - அவளுக்குள் இருக்கும் அவள் எல்லாரும் ஒன்றுதான் . இதைத்தான் அவள் அவர்களிடமுமிருந்து எதிர்பார்க்கிறாள் . ஆனால், அவளுக்கு மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே . மனிதன் தன் கையில் எப்பொழுதும் ஒரு தராசை சுமந்து திரிகிறான் . இவளோ துலாபாரத்திற்கு அப்பாற்பட்டவள் .
அவளும் -அவளும் தனித்திருத்தலோடு கதை தொடங்குகிறது - ஏன் இந்த உலகத்தின் தொடக்கமே அதுவாகத்தான் இருந்திருக்கும். அன்று அவர்களை ஏற்றுக்கொண்ட இயற்கை இன்றும் மாறாமல் இருக்கிறது ,ஆனால் அவளை ஏற்றுக்கொண்ட மற்றுமொரு அவளோ , அவளுக்கு பின் தோன்றிய நாமோ அவளை மட்டும் தனிமையில் விட்டுவிட்டோம் அவளுடைய கேள்விகளோடு . அவள் செய்த பாவம் என்ன ? இந்த கதை முழுக்க ஒவ்வொரு இடத்திலும் , தான் சந்திக்கும் வெவ்வேறு நிகழ்வுகளை பார்த்தும் அவள் இதை கேட்டுக்கொண்டே இருக்கிறாள் . கோமதியை உடன் வைத்துக்கொண்டது பாவமா ? அன்பு வை பார்த்துக்கொள்ள முடியாமல் போனது , யாஸ்மினுக்கு பிறக்கப்போகும் குழந்தையை நினைத்து மகிழ்ந்தது , அக்குழந்தைக்கு தாயக நினைத்தது , யசோதாவுக்கு தோழியாக நினைத்தது , கடற்கரையில் அந்த ஐந்து நாய்குட்டிகளை அப்படியே விட்டு வந்தது , கண்ணகியின் எரியும் சடலத்தை வேடிக்கை பார்த்தது , கண்ணகியின் சொல்லப்படாத ரகசியத்தை கேட்க தவறியது , கண்மூடிய தியான நிலையில் மனதை கட்டுப்படுத்த முடியாமல் போனது , ஆனந்தி ஆனந்தியாக இருப்பது , தாயாக நினைப்பதா ? இந்த உலகிற்கே தாயக நினைப்பதா ?எது பாவம் ? இந்த கேள்விகளுக்கு விடையை அவள் கடவுளின் அன்னையான மேரியிடமும் , சொற்களின் பிறப்பிடமான புத்தரிடமும் தேடுகிறாள் . இரண்டே இரண்டு கேள்விகளுக்கும் இந்த மொத்த கதையையும் அடக்கிவிடலாம் . ஒன்று -நம்மிடம் இல்லாததை நம்மால் பிறருக்கு தர முடியாதா ? இரண்டு - தாயின் உணர்ச்சிதான் என்ன ?, நான் தாயாகாமல் என்னால் தெரிந்துகொள்ளவே முடியாதா ?, தாயாவது என்றால் என்ன , ஒரு பிள்ளையை சுமப்பதா? வளர்ப்பதா ?
கதை நான்கு காலங்களை தொட்டு செல்கிறது . மேலோட்டமாக இந்த காலங்களை இணைப்பது பௌத்தமும் - தம்மபதமும் போல தோன்றினாலும் , சற்று உற்று நோக்கினால் இவைகளை இணைப்பது சொற்கள் தான் -அதிலும் சொல்லமுடியாத - சொல்லப்படாத - சொல்லத்தெரியாத சொற்கள் தான் . அதற்கு மொழி தான் தடையாக இருந்தது என்று நாம் எண்ணியிருந்தது எத்தனை பெரிய தவறு என்பது ஆனந்தியின் தனிமையின் சொற்களற்ற ஆழ்மனதின் உரையாடல் நமக்கு புரியவைத்துவிடுகிறது . கதை பிரதானமாக அவளுடைய அறையிலும் - சர்ச்சிலும் நிகழ்கின்றன -அதன் விவரணைகள் எதார்த்தமாக நம்மை அந்த இடங்களை உணரச்செய்கின்றன் . உதாரணமாக மேரியின் உருவம் அப்படியே நம் கண்முன்னே விரிகிறது . ,அவளுடைய கலைந்த பொருட்கள் , மிகுதியான வெறுமை, செய்வதற்கு ஏதுமற்ற நிலை , உறக்கமற்ற இரவுகள் , தற்காலிக உறவுகளால் நிறைந்த தனிமை ( செல்லப்பிராணிகள் உட்பட ) , விடைகளற்ற கேள்விகள் என அனைத்துமே அவளுக்கு கொடுத்த அதே அழுத்தத்தை , இறுக்கத்தை வாசிக்கும் நமக்கும் கொடுக்கும் வண்ணம் இந்த நாவலுடைய மொழியின் வெற்றி என்று நான் கருதுகிறேன் . இந்த நாவல் பல முன்முயற்சிகளை தழுவியே உருவாகியுள்ளது என்பதை எழுத்தாளரே இறுதியில் கூறியுள்ளார் . உதாரணமாக இதன் வடிவம் குர் -அதுல் -ஜன் -ஹைதர் இன் அக்னி நதி நாவலை சார்ந்தது , இதன் புத்தரை பற்றிய முன்கதை டி தருமராஜ் எழுதிய அயோத்திதாசர் புத்தகத்தை சார்ந்தது . நாவலின் முக்கிய கருவிற்கும் , அவர் கூற நினைத்ததை கூறுவதற்கும் முன் கதை உதவியதா என்றால் -அந்த தம்மபதம் மொழிபெயர்ப்பு பிரதியை தாண்டி எதுவுமில்லை என்றுதான் கூறவேண்டும் . நாவலின் வடிவத்தை சற்று புதுமையாக்குவதை தவிர்த்து அந்த முன்கதைகள் ஒட்டாமல் தனித்து நிற்கின்றன , வாசிக்க தொடங்கும்பொழுது சற்று குழப்பத்தையும் அயற்சியையும் கொடுக்கின்றன . குறைந்த பக்கங்களில் - கச்சிதமான மொழியில் தான் கூற நினைத்ததை ஆசிரியர் தன் மூலக்கதையில் கூறிவிட்டார் .
தமிழ் இலக்கியம் நவீனத்தை எட்ட��யுள்ளதாக கூறப்பட்டாலும் , இன்றளவிலும் பாதிக்கப்பட்டோரின் - ஒடுக்கப்பட்டோரின் - நிலையை , கதையை அந்த கூட்டத்திலிருந்து மீண்டெழுந்து வந்த ஒருவர் தான் இந்த உலகிற்கு பெரும் போராட்டத்திற்கு பின் கூறவேண்டிய நிலை உள்ளது . இதோ நம் தாயும் - அதற்கு விதிவிலக்கு அல்ல . இத்தகைய படைப்பிற்கும் - அதன் விரிவடைதலுக்கும் - இடம் கொடுத்திருக்கிறோமே என்று நாம் மார்தட்டிக்கொண்டால் அது ஒற்றைக்கரத்தால் சூரியனை மறைக்கும் வித்தைதான் . எங்கு கசப்பான உண்மைகள் பகிரங்கமாக பொது அரங்கில் அனைவராலும் ஏற்றுக்கொள்ள படுகிறதோ அத்தகைய சமூகத்தில் தான் தனி மனித சுதந்திரமும் - தனி மனித பொறுப்புணர்வும் மேலோங்கியுள்ளது என்பதற்கு சான்றாகும் . அந்த வகையில் இந்த படைப்பு திருநங்கை பிரஸ் வெளியீடாக இல்லாமல் - நரனின் சால்ட் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது முதல் சான்று . இத்தகைய முயற்சியை ஏற்றுக்கொண்டதோடு நிற்காமல் இதன் மீது ஒரு சமூக உரையாடல் நிகழ்வது இரண்டாவது சான்று . இத்தகைய சான்றுகள் இதோ நம் தாய் போன்ற படைப்புகள் வெவ்வேறு நிலப்பரப்புகளிலிருந்தும் - தளங்களிலிருந்தும் ஒரு சராசரி படைப்பு போல வெளிவர பெரும் உந்துதலாக அமையும் என்று நம்புகிறேன் .
-இர.மௌலிதரன்
21-03-2025
8.05 இரவு
Profile Image for Shyam Karthik.
22 reviews
September 12, 2025
Brilliant setting… One flowing from the years we can’t imagine till to date… To quote.. இருளே இவ்வுலகின் இயற்கை, இங்கு சிலரே விழிபெற்று உண்மையைக் காணமுடியும். வலையிலிருந்து தப்பிய பறவைகளைப் போல சிலரே சுவர்க்கம் செல்கின்றனர்.

Excellent writing by Violet…. Writing coherently and moving between the multi hundred years seamlessly!!!
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.