அந்த ஞாயிற்றுக்கிழமையின் சாயந்திர நேர ஊட்டி, கொஞ்சம் அதிகப்படியான பனித்தூறலில் இருந்தது. யாருக்கோ பயந்து ஓடி வருகிற மாதிரி பஞ்சுப்பொதி சைஸ் மேகங்கள் கூட்டம் கூட்டமாய் - மைசூர் பக்கமிருந்து ஓடிவர - தொலைவில் தெரிந்த நீலகிரி சிகரங்கள் ராபின் ப்ளு நிறத்தில் தெரிந்தன. யூகலிப்டஸ் மரங்கள் பனித்தூறலில் அசையாமல் நின்றிருந்தன. லேக்கை ஒட்டித் தெரிந்த அந்த 'எஸ்' வளைவு ரோட்டில் கார் திரும்பியது. அது இம்போர்டட் காஜல்-85 கார். யாருமே உபயோகித்திராத புதுநிறக் கார். பார்க்கிற போதே உயர்ந்த ஜாதி என தெரிந்தது. காரை ஓட்டிக் கொண்டிருந்த நிர்மலா என்கிற அந்த இருபது வயது சொர்க்கம் முன்புறக் கண்ணாடி வழியே அண்ணாந்து பார்த்து - பனி ஸ்லோ மோஷனில் தூறுவதை வேடிக்கை பார்த்த