ஷவர்க்கு கீழே முற்றும் துறந்த ஞானியாய் நின்றிருந்த வர்ணாவுக்கு பக்கத்து அறையில் கதறும் டெலிபோனின் சத்தம் நன்றாகவே கேட்டது. நீர்ப் பொழியலை நிறுத்திவிட்டு ஒரு பெரிய தேங்காய்ப்பூ துவாலையால் உடம்பின் முக்கிய பாகங்களுக்கு தற்காலிகமாய் ஒரு திரையைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். வர்ணாவுக்கு பளீர் நிறம். காந்தம் கசியும் கண்கள். ஈரம் ததும்பும் உதடுகளில் எந்நேரமும் ஒரு புன்னகை வாயை விட்டு அகலாத கைக்குழந்தை மாதிரி தொற்றிக் கொண்டிருக்கும். வர்ணா பக்கத்து அறைக்குள் நுழைந்து ரீஸீவரை எடுத்து தன் காதுக்கு கொடுத்தாள். “ஹலோ...” “யாரு வர்ணாவா...?” வர்ணா அகலமாய் மலர்ந்தாள். “கிரிதர்... நீங்களா...?” “நானே தான்...” “என்ன ஆச்சர்யம்...