விடியற்காலை 5.30 சூரியக் குழந்தை இன்னமும் கண் விழிக்காத வேளை. “ஸ்...ஸ்... அம்மா!” அவஸ்தையான குரல் காதில் வந்து மோத-படுக்கையில் தூக்கம்வராமல் புரண்ட ரஞ்சனி சட்டென எழுந்தாள். கண்ணைத் தேய்த்து முகத்தை விழித்து விட்டுக் கொண்டு திரும்பிப்பார்த்தாள். ஜீரோவாட் வெளிச்சத்தில் பக்கத்துப் பாயில் அம்மா மங்களம் தெரிந்தாள். ஆழமான தூக்கத்தில் இருந்தாள். “அம்மா...” “ஸ்..ஸ்...ஸ்.” அவஸ்தைக் குரல் தொடர்ந்து கொண்டிருக்க - பார்வையை அப்பால் செலுத்தினாள் ரஞ்சனி. சுவரோரமாய்ப் போடப்பட்ட படுக்கையில் தங்கை கருணா படுத்திருந்தாள். அவளிடமிருந்துதான் அந்த அனத்தல் சப்தம் வந்து கொண்டிருந்தது. ரஞ்சனி மங்களத்தின் படுக்கையைக் கடந்து- கருணாவின் அருகே போனாள்.