Jump to ratings and reviews
Rate this book

நாளும் கற்போம்

Rate this book
07 08 2006 ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் 'நாளும் கற்போம்' என்ற தலைப்பில் நகழ்த்திய சொற்பொழிவு தற்போது நூல் வடிவம் பெறுகிறது. அடிகளாரின் உரையில் புத்தக வாசிப்பை வலியுறுத்திப் பேசியுள்ளார். இவரது உரையின் தனித்துவம் இடையிடையே குட்டிக்கதைகள் எட்டிப்பார்ப்பது தான். அக்கதைகளை இவர் சொல்லிய விதம் சுவையானது. கேட்போரை ஈர்க்கும் தன்மை கொண்டது. வரலாற்றுக் கூறுகளையும் கதை போன்று எளிய வடிவில் எவர்க்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்த உரை.

40 pages, Paperback

Published June 1, 2024

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Rex.
58 reviews6 followers
January 18, 2025
2006-ஆம் ஆண்டில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஈரோட்டு புத்தகத் திருவிழாவில் இயற்றிய உரையின் ஆக்கம் தான் இக்குறுநூல். அருமையான பல கருத்துக்களை மிகவும் மென்மையாக — குன்றக்குடியின் மேன்மையை பிரதிபலிக்கும் விதத்தில் — அடிக்கோடிட்டு விளக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது அடிகளாரின் உரை. திருக்குறள் துவங்கி பாவேந்தர் பாரதிதாசன், அப்பர் சுந்தரர், திருஞானசம்பந்தர், கவிச்சக்கரவர்த்தி கம்பன் என்று இவருடைய உரையில் பலரின் மேற்கோள்களும் அமைந்து இருப்பது சிறப்பு.

இவ்வுரையில் அடிகளார் கூறி இருக்கும் பல குறுங்கதைகள் (நிஜ நடப்புகளும் சேர்த்து தான்), மிகவும் நயம்பட உள்ளதோடு, படிப்போரை நன்கு சிந்திக்கவும் வைக்க ஏதுவாக இருப்பது கூடுதல் சிறப்பு.

இம்மாதிரியான உரைகளை புத்தகமாக்க முனைந்திருகும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முதற்கண் பாராட்டுக்கள். இம்மாதிரியான எங்கோ நடந்த உரைகள் புத்தகங்களாக வெளிவராமல் போனால் அங்கு பகிரப்பட்ட பல அரிய கருத்துக்கள் இருந்தும் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது. உரையை நூலாக்குவது அவ்வளவு எளிதான விஷயமும் அல்ல. எனவே, சில பல எழுத்துப் பிழைகள் மற்றும் குறிகள் (punctuation) ஆகியவற்றை சற்று பிழை தீர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

இறுதியாக அடிகளார் அருமையாக கோடிட்டு சொன்ன கருத்து நயன்றூக்க வேண்டியதொன்றாகும்:

"அறிவு நூல்களில் நம் மனதை ஒருமைப்படுத்துவது, அறிவு நூல்களின் விஷயங்களைக் கற்பது, வெறும் நம்மை அறிவுலகத்தின் மேதை என்று அடையாளப்படுத்துவதற்கு அல்ல...இன்னாத உலகத்தை இனியதாக ஆக்குவதற்கு....துன்பம் நிறைந்த சமூகத்தில் இன்பத்தை உருவாக்குவதற்கு... அந்த நிலைப்பாட்டை உருவாக்குவது தான் (திருவள்ளுவர்) 'கற்க' என்று ஆணையிட்ட வழியில் கற்றதன் வழியில் சிந்தித்து செயல்படுவது."
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.