முழுக்க முழுக்கக் கடவுளைப் பற்றிப் பேசுகிற இந்தப் புத்தகம் ஓர் ஆன்மிகப் பிரதியோ, தத்துவப் பிரதியோ, புனைகதையோ இல்லை.
தனது மிகச் சிறு வயதுகளில், மதங்கள் அணிவித்த சட்டைகளுடன் பல்வேறு மாறுபட்ட தோற்றங்களில், விதவிதமான கதையுருவங்களில் தோன்றிப் பரவசமூட்டிய கடவுளைப் பிறகு திகைப்பு அகற்றி நெருங்கிப் பார்க்க முயற்சி செய்த அனுபவங்களைப் பாரா எழுதியிருக்கிறார்.
உருவங்களிலிருந்து கருத்தாக்கம் என்பது மிக நீண்ட, அபாயங்கள் மிகுந்த அகப்பயணம். அப்பயணத்தில் கண்டடைந்த அனைத்தையும் ஆசிரியர் அச்சமோ, தயக்கமோ, வெட்கமோ இன்றி அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார் என்ற வகையில் இந்தப் புத்தகம் ஒரு முன்மாதிரி.
கதைகளை விலக்கிக் கடவுளுக்கு ஒரு வரலாறு எழுதினால் அத
Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.
Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.
Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.
கடவுள் பற்றி சிந்திக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். கடவுள் என்பவர் யார்? கடவுள் என்பது ஒரு நபரா அல்லது பலரா? மனிதர்களுக்குக் கடவுளின் தேவை என்ன? என நிறைய நிறைய கேள்விகள். இவை அனைத்திற்கும் பதில்களாக பல மதங்களில் அதனதன் வசதிக்கேற்ப பல்வேறு கதைகளாகப் புனையப்பட்டுள்ளது.
உண்மையில் யார் அந்த கடவுள் என்பதை அறியமுடியாதவாறு மதங்கள் பலவிதமானக் கட்டுக்கதைகளால் கடவுள் என்ற கருப்பொருளைச் சுற்றியும் உடைக்கவே முடியாத அளவுக்கு ஒரு திடமான தடுப்புச் சுவரைக் கட்டியுள்ளது.
நம்மிடம் காலங்காலமாகச் சொல்லி வந்துள்ள கதைகளை, சாகசங்களை எல்லாம் அகற்றிவிட்டு நம் மனதிற்கு மிக நெருக்கமான கடவுளின் உண்மைத்தன்மையை அறிய முனையும் ஒரு முயற்சிதான் இந்த புத்தகம்.
வெறும் தத்துவமாகவோ, தகவல்களாகவோ அல்லது தரவுகளாகவோ மட்டும் இந்த மையக் கருத்தைக் கூறாமல் தன்னுடைய சிறுவயது குழப்பங்கள் முதல் கடவுள் பற்றி அறிய முற்படும் தேடல் வரை பாரா தன் வாழ்க்கை நிகழ்வுகளையும் சேர்த்து எளிமையாக எழுதியுள்ளதால் இந்த புத்தகத்தை வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஆதி மனிதர்களிலிருந்து சிந்துவெளி நாகரிக காலத்து மனிதர்கள், மன்னர்கள் காலத்து மனிதர்கள் என வரிசையாக அவர்கள் வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன என்று ஆராய்ந்தது படிக்கச் சிறப்பாக இருந்தது. "பணிவுடன், சொரிமுத்துக்கும் சம்சுதீனுக்கும்" என்று தொடங்கியபோதும், சித்தர்களைப் பற்றி வாசிக்கும்போதும் மனதில் யதி புத்தகத்தின் நினைவுகள் வந்து அலையடித்தன.
Pa.Ragavan ,first impressions always best , whether he finds the god or not , for sure I felt the presence of "that" must read book. Fearless and Bold Arguments
The book truly stands out for its courageous approach, presenting bold and provocative arguments that challenge established perspectives and inspire profound intellectual reflection.